Infinix Hot 12 Pro போனுக்காக ஏன் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திட்டிருக்கு தெரியுமா?

|

Infinix Hot 12 Pro: 'இந்தியா' ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கான ஒரு முக்கிய சந்தையாகத் திகழ்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைத் தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறிவைக்கின்றன. காரணம், இங்கு தான், அணைத்து வகையான மாடல்களும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை இங்கு தான் அதிகமாக நிகழ்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

 Infinix Hot 12 Pro டிவைஸ் குறைந்த விலையில் அறிமுகமா?

Infinix Hot 12 Pro டிவைஸ் குறைந்த விலையில் அறிமுகமா?

இப்படி, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிறுவனமான Infinix, இப்போது இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Infinix Hot 12 Pro டிவைஸ் மிரட்டலான அம்சங்களுடன் குறைத்த விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று நம்முடைய டெக் தகவல்கள் குறிப்பிடுகிறது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகமாகும் Infinix Hot 12 Pro

ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகமாகும் Infinix Hot 12 Pro

ஒட்டுமொத்த இந்தியாவும் ஏன் இந்த Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் மாடலுக்காக காத்துக்கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆர்வமாக இருக்கிறதா? அப்போ வாங்க விஷயம் என்னனு தெரிஞ்சுக்கலாம். இன்பினிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின் படி, இந்த Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். Infinix Hot 12 Pro இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Flipkart வலைப்பக்கம் சொல்லுவது என்ன?

Flipkart வலைப்பக்கம் சொல்லுவது என்ன?

Flipkart வலைப்பக்கமானது வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் புதிய விளம்பரத்தை நிறுவியுள்ளது. இ-காமர்ஸ் இணையதளத்தில் வெளியான தகவலுக்குப் பின் இந்த ஸ்மார்ட்போன் மீது மக்கள் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். காரணம், இது மிகவும் குறைந்த விலையில் HD+ தரத்துடன் கூட 6.6' இன்ச் கொண்ட, 90Hz டிஸ்பிளேவை கொண்டு வருகிறது. கூடுதலாக, இந்த டிஸ்பிளே 180Hz டச் சாம்ப்ளிங் வீதத்தைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

128ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்

வரவிருக்கும், இந்த புதிய Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய 8ஜிபி ரேம் மாடலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. Flipkart இல் பகிரப்பட்டுள்ள விளம்பரத்தின் படி, Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் சில முக்கிய விவரங்கள் அந்த மைக்ரோசைட்டில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

Infinix Hot 12 Pro என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

Infinix Hot 12 Pro என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போனின் விலை விபரங்கள் பிளிப்கார்ட் பக்கத்தில் பிரதிபலிக்கவில்லை. இருப்பினும், நமக்குத் தெரிந்த தகவலின் படி, இந்த புதிய Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.10,000 விலை முதல் ரூ.13,990 என்ற விலைப் புள்ளிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. Infinix Hot 12 Pro பற்றிய சில முக்கிய விவரங்களும் அதன் மைக்ரோசைட்டில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

13ஜிபி வரை அதிகரிக்கக் கூடிய ஆதரவா?

13ஜிபி வரை அதிகரிக்கக் கூடிய ஆதரவா?

அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் 90Hz ரெப்பிரஷ் ரேட் கொண்ட HD+ மற்றும் 180Hz டச் சாம்ப்ளிங் உடைய 6.6' இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருவது உறுதியாகியுள்ளது. Infinix Hot 12 Pro ஸ்டோரேஜ் 128ஜிபி உள் UFS 2.2 சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்பதை முன்பே பார்த்தோம், இந்த ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜை பயன்படுத்தி இதன் ரேமை 13ஜிபி வரை அதிகரிக்கக் கூடிய ஆதரவையும் இன்பினிக்ஸ் வழங்கியுள்ளது.

18W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய சைஸ் பேட்டரி

18W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய சைஸ் பேட்டரி

இந்த Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ் 18W பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 5,000mAh பேட்டரி உடன் வரும். கூடுதலாக, இது USB Type-C போர்ட்டைக் கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12 ப்ரோவின் மைக்ரோசைட்டின் படத்தில், கேமரா அமைப்பிற்கு அருகில், பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது. Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் XOS 10 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது.

ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!

இந்திய ஸ்மார்ட்போன் ரசிகர்கள் காத்திருக்க காரணம் என்ன?

இந்திய ஸ்மார்ட்போன் ரசிகர்கள் காத்திருக்க காரணம் என்ன?

இந்த புதிய Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போன் டிவைஸ், Infinix Hot 12 Play மாடலுக்கு அடுத்தபடியாக 12 சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்படுகிறது. உங்களுக்கு நினைவிருந்தால், இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த மாடலில் மிரட்டலான அம்சங்கள் குறைந்த விலையில் கிடைக்கவிருப்பதனால், இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் Infinix Hot 12 Pro டிவைஸிற்காக காத்திருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Infinix Hot 12 Pro Launch Date and Other Details are Out Before Launch Tomorrow

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X