Home
News

ரூ.10,000-க்கு கீழ்- 48எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 11 2022: மூன்றே நாள்தான்!

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனானது 89.5% டிஸ்ப்ளே உடல் விகிதம் 550 நிட்ஸ் பிரகாசம் மற்றும் எஸ்ஆர்ஜிபி வண்ண வரம்பு ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. வெளியான அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட மொபைல் உற்பத்தியாளரான இன்பினிக்ஸ், இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தைகளை பெரிதளவு ஈர்த்திருக்கிறது. இன்பினிக்ஸ் இந்த வார இறுதியில் நாட்டில் இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சாதனத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த தகவல் பிளிப்கார்ட் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. விரைவில் வெளியாக இருக்கும் இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன் குறித்த வெளியான தகவலை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனானது 89.5% டிஸ்ப்ளே உடல் விகிதம், 550 நிட்ஸ் பிரகாசம் மற்றும் 114% எஸ்ஆர்ஜிபி வண்ண வரம்பு ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. முந்தைய அறிக்கைகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த பிளிப்கார்ட் பட்டியல் படி, டைப்-சி சார்ஜிங் ஆதரவோடு கூடிய பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து இன்டெல் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் சுற்றுப்புறம் தட்டையான விளம்புகள் உடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பட்டியலின்படி, இந்த சாதனத்தின் பின் பக்கத்தில் ஒரு மேஜிக் டிரெயில் பேட்டர்ன் இருப்பது உறுதி செய்கிறது. பாதுகாப்பு நோக்கங்களுக்கு என ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனானது அரோரா க்ரீன், போலார் பிளாக் மற்றும் சன்செ்ட கோல்ட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனின் சிப்செட் குறித்த தகவல் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனானது மாலி ஜி52 ஜிபியூ உடன் கூடிய ஆக்டோ கோர் யூனிசோக் டி700 சிப்செட் மூலம் இயக்கப்படும் என சமீபத்திய அறிக்கைத் தகவல்கள் தெரிவித்தன. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

48 எம்பி பிரதான கேமரா வசதி

48 எம்பி பிரதான கேமரா வசதி

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 48 எம்பி பிரதான கேமரா இடம்பெறும் எனவும் இதன் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. பின்புற கேமரா தொகுதி குறித்து பார்க்கையில், இதில் எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கும் எனவும் ஏஐ முறைகள் பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.10,000-க்குள் இருக்கும் என பிராண்ட் உறுதி செய்திருக்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 11 2022 Specs Confirmed on Flipkart Before its April 15 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X