இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை இவ்வளவு குறைவா? நம்ப முடியலையே.!
இன்பினிக்ஸ் ஹாட் 10i பிலிப்பைன்ஸில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது மீடியாடெக் ஹீலியோ பி 65 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்து ஆண்ட்ராய்ட் 11 இல் இயங்குகிறது. இது பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரிக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன்
இன்பினிக்ஸ் ஹாட் 10i பின்புற பேனலின் மேல் இடது மூலையில் சதுர வடிவ கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா அமைப்பு 13 மெகாபிக்சல் பிரதான சென்சார் மூலம் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும்? மற்றும் இதன் கிடைக்கும் தன்மை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10i விலை மற்றும் கிடைக்கும் தன்மை
புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் பிஎச்பி 5,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 8,800 ஆகும். ஆனால், தற்போது ஷோப்பி.காமில் பிஎச்பி 5,490 க்கு இந்த சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால், இது தோராயமாக ரூ. 8,000 விலையை நெருங்குகிறது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் பிளாக், க்ரீன், ஓசன் மற்றும் பர்ப்பில் வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10i சிறப்பம்சம்
புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான XOS 7.5. கொண்ட இயங்குதளத்தில் இயங்குகிறது. இது டூயல் நானோ சிம் ஸ்லாட்டை கொண்டுள்ளது. இந்த போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் உடன் 720 x 1,600 பிக்சல்கள் கொண்ட LCD TFT டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் விரிவாக்கும் விருப்பத்துடன் வழங்குகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் பயன்படுத்த அனுமதிக்கிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு
இன்பினிக்ஸ் ஹாட் 10i இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான சென்சார் ஆட்டோஃபோகஸ் மற்றும் கூடுதல் QVGA சென்சார் உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் நிலையான ஃபோகஸ் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரி உடன் வருகிறது. இதில் 18W சார்ஜிங் அம்சம் உள்ளது. இது 73 நாட்கள் காத்திருப்பு, 195 மணிநேர மியூசிக் பிளேபேக், 67 மணிநேர அழைப்பு மற்றும் 18 மணிநேர கேமிங் ஆகியவற்றை வழங்குகிறது.

ஹாட் 10i ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் எப்போது அறிமுகம்?
இணைப்பு விருப்பங்களில் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் ஆனது Wi-Fi 802.11ac, மைக்ரோ USB போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், FM, ப்ளூடூத் மற்றும் பல அம்சங்களை ஆதரிக்கிறது. இது பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவுடன் வருகிறது. இந்தியாவில் இதன் அறிமுகம் எப்போது என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் இன்பினிக்ஸ் நிறுவனம் மிக விரைவில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications