Home
News

நத்திங் போன் 2 மாதிரி இருக்கு.. ஆனா இது அது இல்லை.. புது இன்பினிக்ஸ் போனால் கடுப்பில் Nothing!

நத்திங் நிறுவனம் சமீபத்தில் அதன் நத்திங் போன் 2 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் முக்கிய அம்சமாக கிழ்ஃப் (Glyph) அம்சம் திகழ்கிறது. இப்போது இதே சாயலை தழுவி இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

சமீபத்தில் வெளியான லீக் தகவல் படி, infinix நிறுவனம் புதிதாக ஒரு கேமிங் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சாதனம் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் டிசைன் டெண்டர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2 மாதிரி இருக்கு.. ஆனா இது அது இல்லை.. கடுப்பில் Nothing!

மிகவும் பிரபலமான டிப்ஸ்டர் முகேஷ் சர்மா வெளியிட்ட தகவலின் படி, இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜிடி (GT) சீரிஸ் என்ற புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது வரை இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் வரிசையில் ஹாட் (Hot) சீரிஸ் மற்றும் நோட் (Note) சீரிஸ் என்ற ஸ்மார்ட் போன் மாடல்களை மட்டுமே வழங்கி வருகிறது.

இத்துடன் சேர்த்து இன்பினக்ஸ் நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் ஜிடி என்ற புதிய கேமிங் ஸ்மார்ட்போன் (கேமிங் ஸ்மார்ட்போன்) சீரிஸ் மாடல்களை சேர்க்க உள்ளது. இந்த சாதனம் டூயல் கேமராவுடன் வெளிவரும் என்பதை ரெண்டர் புகைப்படங்கள் காண்பிக்கிறது. நத்திங் போன் 2 சாதனத்தில் இருப்பது போன்ற "C" வடிவ லைட்டிங் கேமரா மாடியுளை பெறுகிறது.

அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் ரியர் பேனல் இன் மையப்பகுதியில் அரைவட்ட வடிவில் கிழ்ஃப் லைட்டிங் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக போனின் கீழ் பகுதியில் சிறிய "i" வடிவ டிசைன் காண்பிக்கப்படுகிறது. இந்த கீழ்ஃப் டிசைன் லைட்கள் அப்படியே நத்திங் போன் 2 (Nothing Phone 2) சாதனத்தில் இருப்பது போன்ற அதே அம்சங்களை பெறுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

நத்திங் போன் 2 சாதனத்தில் இந்த கீழ்ப் பகுதி பல விதமான அம்சங்களுடன் ஆதரிக்கபடுகிறது. ரிங்டோன், நோட்டிபிகேஷன், கண்டாக்ட் லைட், போன்று பல அம்சங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது. இன்பினிகஸ் போனின் கீழ்ப் அம்சமும் இதே போன்ற அம்சங்களை ஆதரிக்குமா அல்லது தனித்துவமான அம்சங்களை ஆதரிக்குமா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால், இந்த புதிய ஸ்மார்ட்போன் ஒரு கேமிங் போன் என்பதனால், இது RGB லைட் உடன் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இது நத்திங் போன் 2 சாதனத்தை விட மிகவும் குறைந்த விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி சீரிஸ் (Infinix GT Series) ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றி உங்களுடைய கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT Gaming Smartphone Tipped to be Inspired by Nothing Phone 2 Render Design Leaked Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X