கடுப்பான நத்திங் CEO கார்ல் பை.. வக்கீலை கூப்பிடுடா கேஸ் போட.. அலறிய இன்பினிக்ஸ்.. லீக் ஆன போட்டோஸ்..
நத்திங் (Nothing) நிறுவனத்தின் CEO சமீபத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டார், இதில் "வழக்கறிஞர்களை தயார் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவில் கடுப்புடன், நக்கலாக குறிப்பிட்டுருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் மட்டும் தான்.
இன்பினிக்ஸ் நிறுவனமா? அது என்ன செய்ததென்று தானே கேட்கிறீர்கள். இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது GT 10 என்ற சீரிஸ் பெயருடன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால், இன்பினிக்ஸ் அறிமுகம் செய்யவுள்ள போனின் டிசைனிங் கிழ்ப் தொழில்நுட்பம் போன்ற லைட்டிங் அமைக்கப்பட்டுள்ளது.

ஆம், நத்திங் போன் 2 (Nothing Phone 2) சாதனத்தில் இருப்பது போன்ற கிழ்ப் தொழில்நுட்பத்தை இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) மற்றும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ பிளஸ் (Infinix GT 10 Pro+) ஆகிய மாடல்களில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ரெண்டார் புகைப்படங்களும் கூட நத்திங் போனின் வடிவமைப்பை ஒன்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் அறிமுகம் செய்யும் புதிய போனில் "C" வடிவ LED லைட்டிங் மற்றும் கேமரா மாட்யூலை சுற்றி இரண்டு வட்ட வடிவ விளக்குகள் மற்றும் இறுதியாக கீழ் மூலையில் "i" வடிவ கிழ்ப் போன்ற லைட்டிங்கை டிரான்ஸ்பரென்ட் பேக் பேனலில் வைத்துள்ளது. இந்த டிசைன் நத்திங் நிறுவனத்தின் பிரத்தியேகமான கிழ்ப் (Gylph) டெக்கை அப்படியே கப்ஸா அடித்தது போல் தெரிகிறது.
இதை அறிந்த பிறகு தான் நத்திங் நிறுவனத்தின் CEO கார்ல் பை (Carl Pei) வழக்கறிஞர்களை அழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ட்வீட் செய்துள்ளார். இதில் நிறுவனம் உருவாக்கிய கிழ்ப் தொழில்நுட்பம் பேட்டண்ட் ரைட்ஸ் பெற்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக, இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

வெளியான இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) போனின் தகவலை வைத்து பார்க்கையில், இது FHD+ டிஸ்பிளேவை பன்ச்-ஹோல் உடன் கொண்டிருக்கும். இது டைமென்சிட்டி 1300 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் அம்சத்தை கொண்டிருக்கும். இதில் எக்ஸ்ட்ரா ரேம் வசதியாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் (smartphone) 108MP கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ சாதனம் 5000mah கொண்ட பெரிய சைஸ் பேட்டரியை பேக் செய்கிறது. மறுபுறம், இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ பிளஸ் (Infinix GT 10 Pro+) சாதனம் டைமென்சிட்டி 8050 சிப்செட்டை கொண்டிருக்கும். மற்ற அணைத்து அம்சங்களும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போல ஒரே மாதிரியானவை.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோவுடன் ஒப்பிடுகையில், இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ பிளஸ் சாதனம் டிரான்ஸ்பரென்ட் பேக் பாடியை கொண்டுள்ளது. இதில் ஆரஞ்சு நிற லைட்டிங் உடன் வருவது போல தெரிகிறது. இது பேட்டரி இண்டிகேட்டராக செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கேமிங் சாதனங்களாக ஆகஸ்ட் மாதத்தில் இந்திய மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








