புத்திய காட்டிய சீன கம்பெனி.. ஆசை காட்டுற விலையில் அறிமுகம் செஞ்சுட்டு.. உடனே விலை ஏற்றம்! என்ன மாடல்?
ரியல்மி, ஒப்போ, விவோ போன்களுக்கு தான் இந்தியாவில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் இந்த நிறுவனங்களின் போன்களை பின்னுக்கு தள்ளும் வகையில் தொடர்ந்து அட்டகாசமான போன்களை அறிமுகம் செய்து வருகிறது இன்பினிக்ஸ் . அதாவது இந்த வருடம் துவக்கம் முதல் இப்போது வரை பல 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ்.
சீன நிறுவனமான இன்பினிக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது விவோ, ஒப்போ சியோமி, மோட்டோ போன்களை விட இன்பினிக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை 5ஜி போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இன்பினிக்ஸ் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், அப்படி மெல்ல மெல்ல தனது புத்தியை காட்ட ஆரம்பித்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு நத்திங் போன் போன்ற வடிவமைப்பைக் கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது இன்பினிக்ஸ் நிறுவனம்.
குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், விலையை திடீரென உயர்த்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் இந்தியாவில் ரூ.19,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது இந்த போனுக்கு ரூ.1000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனை ரூ.20,000 விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். மேலும் இந்த போனின அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.67 இன்ச் புல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்,900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) மற்றும் 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஆனது டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை 32 எம்பியாக இருக்கிறது. அதேபோல் டிடிஎஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. ப்ளூடூத் 5.2 மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டி,3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் எஸ்டிகார்டு போர்ட், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், எஃப்எம் ரோடியோ, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

மாலி ஜி77 எம்சி9 (ARM Mali-G77 MC9) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த இன்பினிக்ஸ் போன் சைபர் மிராஜ் சில்வர் (Mirage Silver) மற்றும் பிளாக் (Cyber Black) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது
சைபர் மெக்கா டிசைன் மற்றும் எல்இடி லைட் எபெக்ட்களை கொண்டிருக்கும் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனில் இசைக்கப்படும் பாடல் மற்றும் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப எல்இடி-க்கள் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் போன்ற வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் இதில் இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








