வெறும் 4 நிமிடத்தில் இவ்வளவு சதவீதம் சார்ஜ் ஆகுதா? மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!

|

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல் செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடும்

பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடும்

குறிப்பாக மக்கள் ஒரு சில ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்த நினைத்தாலும் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடும். அப்படி பேட்டரி விரைவில் குறைந்தால் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்ப வசதியும் இப்போது வந்துவிட்டது.

 இன்பினிக்ஸ் நிறுவனம்

இன்பினிக்ஸ் நிறுவனம்

அதாவது 30 நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நிமிடங்களில் ஸ்மார்ட்போன்களை எளிமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அதற்கு தகுந்த தொழில்நுட்பங்களை பல செல்போன் நிறுவனங்கள் கொண்டுவந்துவிட்டன.

ஆனால் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் ஒரு படி மேலே போய் புதிய பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜி

180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜி

அதாவது இன்பினிக்ஸ் நிறுவனம் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை தான் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் போன்களை வெறும் 4 நிமிடத்தில் 50 சதவீதம் எளிமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?

வேகமாக சார்ஜ் செய்தால்?

அதேசமயம் போன்களை இவ்வளவு வேகமாக சார்ஜ் செய்தால் சில ஆபத்துகளும் நேர வாய்ப்பு இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படிநேர வாய்ப்பே இல்லை என இன்பினிக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது

பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது

அந்நிறுவனம் சார்பில் தெரிவித்த தகவலின்படி, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக வேகமாக சார்ஜ் ஏறினாலும் இதன்பேட்டரி சூடாகாதாம்.

இன்பினிக்ஸ் போனின் பேட்டரி சூடாவதை தடுக்க யுஎஸ்பி போர்ட், சார்ஜிங் சிப், பேட்டரி உட்பட 10 இடங்களில் டெம்பரேச்சர் சென்சார் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Poco F4 5G பிடிக்கலையா? அப்போ இந்த டாப் 5 போன்களை பாருங்க.. உங்களுக்கு பிடிக்கும்.!Poco F4 5G பிடிக்கலையா? அப்போ இந்த டாப் 5 போன்களை பாருங்க.. உங்களுக்கு பிடிக்கும்.!

 இன்பினிக்ஸ் புதிய போன்கள்

இன்பினிக்ஸ் புதிய போன்கள்

விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களில் இந்த அதிநவீன சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப் மாடலின் அம்சங்ககளை
இப்போது பார்ப்போம்.

ரேம் ரொம்ப முக்கிய மக்களே: ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!ரேம் ரொம்ப முக்கிய மக்களே: ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் மெட்டல் பாடி மற்றும் aluminium alloy உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் சாதனம் ஆனது ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% sRGB கவரேஜ், 16:9 ரேஷியோ உள்ளிட்ட பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப். 10வது ஜென் இன்டெல் கோர் பிராசஸர் மூலம் இந்த லேப்டாப் இயங்குகிறது.

BSNL பயனர்களே என்ஜாய்! கம்மி விலையில் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்.!BSNL பயனர்களே என்ஜாய்! கம்மி விலையில் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்.!

விண்டோஸ் 11 இயங்குதளம்

விண்டோஸ் 11 இயங்குதளம்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் சாதனத்தில் விண்டோஸ் 11 இயங்குதள வசதி உள்ளது. மேலும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கானஆதரவுடன் 50Wh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய லேப்டாப் மாடல்.

மின் கட்டண மோசடி- லட்சக் கணக்கான ரூபாய் அபேஸ்: நீங்க இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!மின் கட்டண மோசடி- லட்சக் கணக்கான ரூபாய் அபேஸ்: நீங்க இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

 100 சதவிகிதம் சார்ஜ்

குறிப்பாக 65W டைப்-சி சார்ஜர் இந்த லேப்டாப் சாதனத்தை 90 நிமிடங்களில் 100 சதவிகிதம் சார்ஜ் செய்கிறது. ஆடியோவைப் பொறுத்தவரை, லேப்டாப் மேம்பட்ட டிடிஎஸ் ஒலி தொழில்நுட்பத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது.

ஐஸ் ஸ்டார்ம் 1.0 கூலிங் சிஸ்டம்

ஐஸ் ஸ்டார்ம் 1.0 கூலிங் சிஸ்டம்

ஐஸ் ஸ்டார்ம் 1.0 கூலிங் சிஸ்டம் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப். இது பயனர்கள் நீண்ட நேரம் கேமிங், வேலை போன்றவற்றில் ஈடுபடும்போது கூட வெப்பநிலையை குறைவாக வைத்திருக்கும்.

யுஎஸ்பி 3.0 போர்ட்கள், 2 யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ 1.4 போர்ட், எஸ்டி கார்டு ரீடர், 3.5 மிமீ ஹெட்செட், மைக்ரோபோன் காம்போ ஜாக், வைஃபை 5 போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப். மேலும் இந்த புதிய லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.29,900-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix announces 180W Thunder Charge: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X