Infinix அடிச்ச நெத்தியடி.. காற்றில் சார்ஜ்ஜாகும் ஏர்சார்ஜிங் டெக்.. இனி வயர்லெஸ் சார்ஜ்ர் கூட வேணாம்..
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அதன் தடத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் முதல் ஏர்சார்ஜிங் மற்றும் எக்ஸ்ட்ரீம் டெம்ப் பேட்டரி தொழில்நுட்பம் பற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது. இனி கரண்ட் இருந்தால் போதும் காற்றில் சார்ஜ் செய்யலாம்.
இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த முறை நடைபெற்ற கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோ (Consumer Electronic Show - CES) நிகழ்வில், நிறுவனம் அதன் அதிவேகமான 180W தண்டர் சார்ஜ் (180W Thunder Charge Technology) மற்றும் மிகவும் புரட்சிகரமான 260W ஆள்-ரவுண்ட் பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பங்களை (260W All-Round FastCharge) அறிமுகம் செய்து உலகை வியப்படைய செய்தது.

இந்த முறை இன்பினிக்ஸ் நிறுவனம் (Infinix) இன்னும் பல படிகள் தாண்டி எதிர்கால தொழில்நுட்பம் என்று கருதப்பட்டு வந்த, ஏர்சார்ஜ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (AirCharge wireless charging Technology) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதை இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் நடைபெறவுள்ள CES 2024 நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளதென்று அறிவித்துள்ளது.
இத்துடன் நிறுவனம், எக்ஸ்ட்ரீம்-டெம்ப் பேட்டரி தொழில்நுட்பத்தையும் (Extreme-Temp Battery technology) அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகமே வியந்து பார்க்கும் ஏர்சார்ஜ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் எக்ஸ்ட்ரீம்-டெம்ப் பேட்டரி தொழில்நுட்பம் எப்படி செயல்படும் என்ற விபரத்தை இப்போது தெரிந்துகொள்ளலாமா? வாங்க. முதலில் ஏர்சார்ஜ் தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏர்சார்ஜ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் என்பது, ஸ்மார்ட்போன் பயனர்களை எந்தவித வயர் (Wired) தொடுதல் அல்லது பிஸிக்கல் காண்டாக்ட் (physical contact) இல்லாமல் சார்ஜ் செய்ய அனுமதிக்கும் ஒரு தொழில்நுட்ப சேவையாகும் என்று கூறப்பட்டுள்ளது. 0cm முதல் 20cm இடைவெளியில் காற்றில் உங்கள் சாதனத்தை பிடித்தபடி சார்ஜ் செய்ய இது அனுமதிக்கிறது.

இதற்கும் வயர்லெஸ் சார்ஜ்ஜர் (Wireless charger) போன்ற கருவி பயன்படுத்தப்படும். வழக்கமான வயர்லெஸ் சார்ஜ்ஜரில் ஸ்மார்ட்போன்களை நாம் வைப்பதன் மூலம் சார்ஜிங் நடைபெறும். ஆனால், ஏர்சார்ஜிங்கில், உங்கள் ஸ்மார்ட்போன்களை வயர்லெஸ் சார்ஜ்ஜர் அருகில் வைத்தாலே சார்ஜிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த சார்ஜரின் காயில் (coil) 60 டிகிரி வரை வளைத்து பயன்படுத்த முடியும். கேமிங் (gaming) மற்றும் வீடியோ பார்க்கும் போது இது பெரிதும் பயன்பெறும்.
இந்த தொழில்நுட்பத்தை நிறுவனம் இன்னும் அதிகமாக மேம்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஏர்சார்ஜிங் செய்யப்படும் 20cm அளவை இன்னும் கணிசமாக அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு பாதுகாப்பான சார்ஜிங்கை வழங்குகிறது. சரி, அடுத்தபடியாக எக்ஸ்ட்ரீம்-டெம்ப் பேட்டரி தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்த புதிய எக்ஸ்ட்ரீம்-டெம்ப் பேட்டரி தொழில்நுட்பம் அதிக குளிர் கொண்ட இடங்களில் வசிக்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு உதவப்போகிறது. கடுமையான குளிர் மற்றும் பனி சூழப்பட்ட இடங்களில் பேட்டரி (battery) சார்ஜ் செய்யப்படுவது சிரமமான காரியமாக உள்ளது. பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. இந்த சிக்கலை தடுக்க எக்ஸ்ட்ரீம்-டெம்ப் பேட்டரி தொழில்நுட்பம் உதவுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் -40°C வெப்பத்தில் கூட இனி பேட்டரி சார்ஜ் நின்னு பேசும் என்று கூறப்பட்டுள்ளது.
-40°C முதல் 60°C வரையிலான சார்ஜிங் வெப்பநிலை வரம்புடன் இந்த எக்ஸ்ட்ரீம்-டெம்ப் பேட்டரி தொழில்நுட்பம் கடுமையான குளிர் நிலைகளில் சிறந்த பேட்டரி செயல்பாடு மற்றும் பாதுகாப்பை (battery protection) வழங்குகிறது. மேலே கூறப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பங்களை நாம் வரும் 2024 ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் இன்பினிக்ஸ் இன் புதிய ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. தெரியாதவர்களுக்கு, CES 2024 நிகழ்வு ஜனவரி 9 முதல் ஜனவரி 12 தேதி வரை நடைபெறும்.


Click it and Unblock the Notifications








