Home
News

மார்ச் 20 வரை எதுவுமே வாங்காதீங்க.. ஒரே நாளில் 3 போன்கள், 1 AI ஸ்மார்ட் ரிங், 1 இயர்பட்ஸ் வருது!

இன்பினிக்ஸ் நிறுவனம் ஆனது இன்பினிக்ஸ் ஏஐ பீட்டா என்கிற வெளியீட்டு நிகழ்வை (Infinix AI Beta event) நடத்த உள்ளது. இந்நிகழ்வில் பல புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஏஐ ஸ்மார்ட் ரிங் மற்றும் ஏஐ பட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. என்னென்ன அறிமுகம் செய்யப்படலாம்? என்ன விலைக்கு வரலாம்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? இதோ விவரங்கள்:

இன்பினிக்ஸ் ஏஐ பீட்டா நிகழ்வானது 2025 மார்ச் 20 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது மிகவும் மலிவான விலையில், இன்பினிக்ஸ் ஏஐ ரிங் (Infinix AI Ring) என்கிற ஒரு ஸ்மார்ட் ரிங் மற்றும் இன்பினிக்ஸ் ஏஐ பட்ஸ் (Infinix AI பட்ஸ்) என்கிற இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 20 வரை எதுவுமே வாங்காதீங்க.. ஒரே நாளில் 3 போன்கள் வருது!

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இன்பினிக்ஸ் ஏஐ ரிங் ஆனது இரண்டு கலர்களில் வரக்கூடும். மேலும் வெவ்வேறு அளவுகளில் வாங்க கிடைக்கும். மேலும் இது டாக்கிற்கு பதிலாக சார்ஜிங் கேஸுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் ரிங் தூக்க கண்காணிப்பு, இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிடுவது போன்ற அம்சங்களை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகையில் உள்ள இன்பினிக்ஸ் ஏஐ பட்ஸ் ஆனது "விதிவிலக்கான" நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் மொழி மொழிபெயர்ப்பு போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ்-ன் சார்ஜிங் கேஸ் வழியாக ஸ்மார்ட்போனின் கேமராவை கட்டுப்படுத்தவும், நாய்ஸ் கேன்சலேஷன் அளவை சரிசெய்யவும், ம்யூசிக் பிளேவை கட்டுப்படுத்தவும், பட்ஸ்களின் பேட்டரி அளவை கண்காணிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது. கூடவே இது நேரத்தையும் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 இன்பினிக்ஸ் ஏஐ பீட்டா வெளியீட்டு நிகழ்வில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம்? இந்நிகழ்வின் போது - இன்பினிக்ஸ் நோட் 50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் இன்பினிக்ஸ் நோட் 50, இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ, இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இன்பினிக்ஸ் நோட் 50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு வரலாம்? 8ஜிபி + 256ஜிபி மாடலுக்கான இன்பினிக்ஸ் நோட் 50 ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.14,400 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது டைட்டானியம் கிரே, ரூபி ரெட், மவுண்டன் ஷேட் மற்றும் ஷேடோ பிளாக் கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்

மறுகையில் உள்ள இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி மாஆப்ஷன் சுமார் ரூ.17,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடல் டைட்டானியம் கிரே, என்சான்டட் பர்பிள், ரேசிங் எடிஷன் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கலாம். கடைசியாக உள்ள இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது உலக சந்தைகளில் தோராயமாக ரூ.43,400 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 50 மற்றும் நோட் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144ஹெர்ட்ஸ் 6.78-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை
- மீடியாடெக் ஹீலியோ G100 அல்டிமேட் சிப்செட்
- நோட் 50 மாடலில் 8GB LPDDR4x RAM + 256GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- நோட் 50 ப்ரோ மாடலில் 8GB/256GB மற்றும் 12GB/256GB ஆப்ஷன்கள் மற்றும் 12GB வரை விர்ச்சுவல் ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான XOS 15 கஸ்டம் ஸ்கின்

- நோட் 50 மாடலில் 50MP OIS ப்ரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் AI லென்ஸ்; முன்பக்கத்தில் 13MP செல்பீ கேமரா
- நோட் 50 ப்ரோ மாடலில் 50MP OIS ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் ஃப்ளிக்கர் சென்சார்; முன்பக்கத்தில் 32MP செல்பீ கேமரா

- JBL ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்கள்
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்
- 30W வயர்லெஸ் மேக்சார்ஜுடன் 5,200mAh பேட்டரி
- நோட் 50 மாடலில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- நோட் 50 ப்ரோ மாடலில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix AI Beta Event on March 20 New AI Ring AI Buds Infinix Note 50 Series Global Launch All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X