Home
News

ரூ.6,799 என்ற அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் Smart TV! விற்பனை தேதி இதுதான்! மிஸ் பண்ணாதீங்க!

யாருயா நீங்க வெறும் ரூ.6,799 விலைக்கு புதுசா டிவி தரீங்க.. இந்தியாவில் உள்ள மக்கள், மலிவு விலையில் பெரிய சைஸ் டிவியை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது உண்மை தான். அதற்காக இப்படியா அடிமட்ட விலைக்கு பெரிய டிஸ்பிளே டிவியை விற்பனை செய்வீங்க.

இந்திய மக்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில், புதிய டிவியை Infinix நிறுவனம் இப்போது மிகவும் மலிவு விலையில் வழங்கத் துவங்கியுள்ளது. Infinix அதன் Y1 ஸ்மார்ட் டிவிகளை இப்போது விரிவுபடுத்தியுள்ளது. இந்த பிராண்ட் கடந்த ஆண்டு 32 மற்றும் 43 இன்ச் Y1 டிவிகளை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நிறுவனம் 24Y1 என்ற சிறிய மற்றும் மிகவும் மலிவு விலை டிவியை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.6,799 என்ற அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் Smart TV! விற்பனை தேதி?

Infinix 24Y1 டிவி விலை என்ன?

இன்பினிக்ஸ் நிறுவனம் இதற்கு முன் அறிமுகம் செய்த 32" இன்ச் மாடல் டிவி ரூ.10,000 விலைக்கு கீழ் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நிறுவனம் இன்னும் மலிவான விலையில் புதிய டிவியை வழங்க முடிவு செய்துள்ளது. Infinix நிறுவனம் Infinix 24Y1 என்ற புதிய சாதனத்தை இந்த மாதம் முதல் Flipkart இல் விற்பனை செய்யும் என்று அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Infinix 24Y1 டிவி இந்தியாவில் ரூ. 6,799 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், மக்களே சரியாகத் தான் படித்தீர்கள். 24" இன்ச் கொண்ட இந்த புதிய ஸ்மார்ட் டிவி (Smart TV) இப்போது வெறும் ரூ. 6,799 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது மிகவும் மலிவு விலை ஸ்மார்ட் டிவிகளில் ஒன்றாகும். இந்த புதிய டிவி வரும் மே 15ம் தேதி முதல் Flipkart இல் வாங்க கிடைக்கும்.

ரூ.6,799 என்ற அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் Smart TV! விற்பனை தேதி?

Infinix 24Y1 சிறப்பம்சம்

Infinix 24Y1 ஆனது 24" இன்ச் டிஸ்ப்ளே அளவுடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட HD தீர்மானத்துடன் இயங்குகிறது. இன்பினிக்ஸ் படி, இந்த டிஸ்ப்ளே பேனல் 250 நைட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. வீடியோ தரத்தை மேம்படுத்த நிறுவனம் இதில் HLG ஆதரவையும் பயன்படுத்தியுள்ளது. பார்வையாளர்களின் கண்களைப் பாதுகாக்க இதில் ப்ளூ லைட் எமிஷன் ப்ரொடெக்ட்டிவ் கண் பராமரிப்பு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆடியோ பக்கத்தில், இந்த இன்பினிக்ஸ் 24Y1 ஸ்மார்ட் டிவி 16W கொண்ட ஆடியோ அவுட்புட் கொண்ட இரண்டு 16W பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. டால்பி மூலம் இந்த ஸ்மார்ட் டிவி ஆடியோ டியூன் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சவுண்ட் மோட் உடன் தரமான ஆடியோ அனுபவத்தை அதிகரிக்கும் அம்சமும் இதில் உள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை, இன்ஃபினிக்ஸ் 24Y1 குவாட் கோர் சிப்செட்டை இது கொண்டுள்ளது.

ரூ.6,799 என்ற அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் Smart TV! விற்பனை தேதி?

Infinix 43Y1 மற்றும் Infinix 32Y1 ஸ்மார்ட் டிவிகளின் விலை என்ன?

இந்த டிவி 512MB ரேம் உடன் 4GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சாப்ட்வேர் பற்றி பேசுகையில் இது Linux OS உடன் இயங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. அமேசான் பிரைம் வீடியோ, YouTube, SonyLiv, Zee5, ErosNow மற்றும் AajTak போன்ற முன்பே நிறுவப்பட்ட ஆப்ஸ்கள் உடன் இது வருகிறது. இதன் பொருள் பயனர்கள் இந்த ஆப்ஸையும் பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கலாம்.

இணைப்பு முன்னணியில், Infinix 24Y1 அதன் பயனர்களுக்கு பல போர்ட்களை வழங்குகிறது. இதில் இரண்டு HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், RF உள்ளீடு, AV உள்ளீடு, ஹெட்போன் ஜாக், COAX அவுட், LAN மற்றும் Wi-Fi இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் ஆகியவற்றிற்கான ஹாட்கீகளைக் கொண்ட ரிமோட் கண்ட்ரோலுடன் இந்த டிவி வருகிறது.

புதிய Infinix 24Y1 மாடலின் வெளியீடு விவரக்குறிப்புகள் அடிப்படையில் 32Y1 மாடலைப் போன்றது. இருப்பினும், ஸ்பீக்கர்கள் 20W இலிருந்து 16W ஆக குறைக்கப்பட்டுள்ளன. மறுபுறம், 43Y1 ஆனது 43 இன்ச் FHD டிஸ்ப்ளே, 20W ஸ்பீக்கர்கள் மற்றும் புளூடூத் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Infinix 32Y1 மாடல் ரூ.8,999 விலைக்குக் கிடைக்கிறது. அதேசமயம் Infinix 43Y1 மாடல் ரூ.13,999 விலையுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix 24Y1 Smart TV with Linux OS Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X