iPhone 16-ஐ விற்க கூடாது; வாங்க கூடாது; யூஸ் பண்ண கூடாது.. திடீர் தடை போட்ட நாடு.. ஏன்? டூரிஸ்ட்கள் குழப்பம்!
ஐபோன் 16 (iPhone 16) மாடலை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் இந்தோனேசியா (Indonesia) நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளை, ஐபோன் 16-ஐ வாங்குவதற்கு எதிராக எச்சரித்ததோடு இல்லாமல், இந்தோனேஷியாவின் தொழில்துறை அமைச்சர் ஆன அகஸ் குமிவாங் கர்தசஸ்மிதா (Agus Gumiwang Kartasasmita), இந்தோனேஷியா நாட்டிற்குள் ஐபோன் 16-ஐ பயன்படுத்துவது சட்டவிரோதமாக கருதப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஏனென்றால்.. ஆப்பிள் ஐபோன் 16 மாடலுக்கு, இந்தோனேஷியா நாட்டில் இயங்க தேவையான இன்டர்நேஷனல் மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி (International Mobile Equipment Identity - IMEI) சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் இந்தோனேஷியாவின் தொழில்துறை அமைச்சர் (Industry Minister) விளக்கம் அளித்து உள்ளார்.

இந்தோனேஷியாவில் தடைசெய்யப்பட்ட ஆப்பிள் டிவைஸ்களின் பட்டியலில் ஐபோன் 16 மட்டுமின்றி ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஸ்மார்ட் வாட்ச்களும் உள்ளன. இந்தோனேஷியா நாட்டின் இந்த திடீர் தடையின் விளைவாக.. தற்போது ஐபோன் 16 சீரிஸ் இந்தோனேசியாவின் முக்கிய இ-காமர்ஸ் தளங்களில் பட்டியலிடப்படவில்லை, அந்நாட்டில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் உட்பட!
இது குறித்து மேலும் விளக்கம் அளிக்கையில், ஐபோன் 16 மற்றும் ஆப்பிளின் பிற லேட்டஸ் டிவைஸ்கள் மீதான இந்த தடைக்கு ஆப்பிள் நிறுவனத்தால் "நிறைவேற்றப்படாத முதலீட்டு கடமைகளே" காரணமாகும் என்று கர்தாசஸ்மிதா கூறியுள்ளார். உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஆப்பிள் நிறுவனமானது இந்தோனேஷியாவில் 1.71 டிரில்லியன் ரூபாய் ($109 மில்லியன்) முதலீட்டை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 1.48 டிரில்லியன் ரூபாயை ($95 மில்லியன்) மட்டுமே முதலீடு செய்துள்ளது. இதனால் 230 பில்லியன் ரூபாய் ($14.75 மில்லியன்) இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே, இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடலை விற்பனை செய்வதற்கான தேவையான அனுமதிகளை தொழில்துறை அமைச்சகம் வழங்கவில்லை என்றும் அமைச்சர் கர்தாசஸ்மிதா விளக்கமளித்துள்ளார்.
இன்டர்நேஷனல் மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி சான்றிதழானது, இந்தோனேசியாவில் விற்கப்படும் வெளிநாட்டு சாதனங்களுக்கு 40 சதவீத உள்ளூர் கன்டென்ட் தேவையை (Local content requirement) கட்டாயமாக்குகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த சான்றிதழ் மிகவும் தேவையான ஒன்றாகும். ஏனென்றால் இது இந்தோனேசியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ரிசர்ச் &டி டெவெலப்மென்ட் ஃபெசிலிட்டி (R&D facility) ஆன ஆப்பிள் அகாடமியை (Apple Academy) நிறுவுவதற்கான உறுதிப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது
நினைவூட்டும் வண்ணம் ஆப்பிளின் ஐபோன் 16 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகமானது. ஐபோன் 16 சீரீஸின் கீழ் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கும், ஐபோன் 16 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும், ஐபோன் 16 ப்ரோ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும் மற்றும் கடைசியாக உள்ள ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








