Home
News

மைக்ரோசாப்ட் சாம்பியன்ஷிப்: தரமான சாதனத்தை உருவாக்கி இந்திய மாணவர்கள் அசத்தல்.!

குறிப்பாக தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் சுவாசப் பிரச்சனைக்கு இந்த கருவி சிறந்த தீர்வாக இருக்கும் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய முயற்சிகளை செயல்படுத்தி மக்களுக்கு பயன்படும் வகையில் பல சாதனங்களை கொண்டுவந்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இமெஜின் கோப்பை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 190 நாடுகளை சார்ந்த 16.5 லட்சம் மாணவர்கள் கலந்து
கொண்டிருக்கிறார்கள்.

மைக்ரோசாப்ட் சாம்பியன்ஷிப்: இந்திய மாணவர்கள் அசத்தல்.!

இந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய இமேஜின் கோப்பை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அணி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் மாகாணத்தில்

வாஷிங்டன் மாகாணத்தில்

கடந்த மே 6-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் சியாட்டில் நகரில் இந்த இமேஜின் கோப்பை உலக சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து பரீதாபாத் நகரில் உள்ள மனவ் ரச்னா ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த பதானா, வாசு கௌசிக், பாரத் ஆகிய மூன்று மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய Caeli என்ற கருவிக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த மாணவர்கள் உருவாக்கிய Caeli என்ற கருவியின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக்கி சிரமம் இல்லாமல் மூச்சுவிட உதவுகிறது.

ஆஸ்துமா மற்றும் நாள்பட சுவாசக் கோளாறு

ஆஸ்துமா மற்றும் நாள்பட சுவாசக் கோளாறு

மேலும் இது ஆஸ்துமா மற்றும் நாள்பட சுவாசக் கோளாறு கொண்டவர்களுக்கு இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாவணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி

டெல்லி

குறிப்பாக தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் சுவாசப் பிரச்சனைக்கு இந்த கருவி சிறந்த தீர்வாக இருக்கும் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Indias Team Caeli comes 2nd at Microsofts Imagine Cup World Championship : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X