107 வயதான இந்தியாவின் முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா காலமானார்.!
இந்தியாவின் அதிக வயதான முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா திங்கள்கிழமை காலமானார், இவருக்கு 107 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அதிக வயதான முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா திங்கள்கிழமை காலமானார், இவருக்கு 107 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா பாட்டி, இவரின் "கண்ட்ரி ஃபுட்" என்னும் யூடியூப் வலைத்தள சேனல் உலகளவில் மிகப் பிரபலமானது.

கண்ட்ரி ஃபுட் யூடியூப் சேனல்
கண்ட்ரி ஃபுட் யூடியூப் சேனலில் தான் சமைக்கும் அணைத்து விடீயோக்களையும் தனது பேரன் மூலம் பதிவிட்டு வந்துள்ளார். இவரின் கண்ட்ரி ஃபுட் யூடியூப் சேனலிற்கு 12 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்களன்று காலமானார்
உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சையில் இருந்த மஸ்தானம்மா, திங்களன்று சிகிச்சை பலனின்றி காலமானார். மஸ்தானம்மா காலமானார் என்ற செய்தி அவரின் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரின் இறுதிச் சடங்கு வீடியோவும் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

வைரலான தர்பூசணி சிக்கின்
கண்ட்ரி ஃபுட் யூடியூப் சேனலில் அவர் பதிவிடும் சமையல் குறிப்புகளுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவரின் விடீயோக்களில் தர்பூசணி சிக்கின், தக்காளி ஆம்லேட் எனப் பல உணவு குறிப்புக்கள் யூடியூபில் வைரல் ஆகி ட்ரெண்டிங்கிலும் வந்தது.

உணவுகளை அதிக அளவிலும் பெரிதாகவும் படைக்கும் மஸ்தானம்மா
மஸ்தானம்மா பாட்டி, அவரது சமையல் குறிப்பு உணவுகளை அதிக அளவிலும் பெரிதாகவும் அதுவும் வெட்ட வெளியில் விறகு அடுப்பில்தான் செய்வார். தற்பொழுது மஸ்தானம்மா பாட்டி காலமான செய்தி தற்பொழுது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications