Home
News

மொபைல்போன் மார்க்கெட் வருவாய் வீழ்ச்சி!

By Super
மொபைல்போன் மார்க்கெட் வருவாய் வீழ்ச்சி!

கடந்த நிதியாண்டில் மொபைல்போன் மார்கெட்டின் வருவாய் 5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தம் 30 மொபைல் தயாரிப்பு நிறுவனங்களிடம், வருவாய் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் நோக்கியா நிறுவனம் 11, 925 கோடி வருவாயை பெற்றுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் 12,929 கோடியாக இருந்த அந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதி ஆண்டில் 11, 925 கோடியாக குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் மொபைல்போன் வர்த்தகத்தில் சாம்சங் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. ஆனால் இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் மார்கெட் வருவாய் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை பொருத்த வரையில் நோக்கியா நிறுவனம் குறைந்த வருவாயை பெற்றிருந்தாலும் முதல் இடம் வகிக்கிறது.

ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பின் தங்கிய நிலையில் உள்ள நோக்கியா, டியூவல் சிம் மொபைல் மார்கெட்டில் சிறந்த இடத்தினை பெற்று வருகிறது. இதனால் கடந்த நிதியாண்டில் நோக்கியா மார்கெட் பங்குகளில் 38.2 சதவிகிதத்தினை பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் 7,891 வருவாயை கொடுத்து இரண்டாம் இடத்திலும், 1,978 கோடி வருவாயை கொடுத்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சாம்சங் நிறுவனம் 25.3 சதவிகிதம் மார்கெட் பங்குகளையும், மைக்ரோமேக்ஸ் 6.3 சதவிகிதத்தினையும் கொண்டுள்ளது. கார்பன் நிறுவனம் 1,000 கோடி வருவாயினையும், பிளாக்பெர்ரி நிறுவனம் 1, 460 கோடி வருவாயினையும் கொடுத்துள்ளது.

பிளாக்பெர்ரி நிறுவனத்தின் விருவாய் மிக குறைவாக உள்ளது. மிக பெரிய நிறுவனமான பிளாக்பெர்ரி 25 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எச்டிசி நிறுவனம் 923 கோடி வருவாயினை பெற்று, 105 சதவிகிதம் வளர்ச்சியினை கொடு்த்துள்ளது.

முதல் பத்து பட்டியலில் ஸ்பைஸ் டெலிகாம் நிறுவனமும் இடம் பெறுகிறது. ஸ்பைஸ் 790 கோடி வருவாயினையும், எல்ஜி 780 கோடி வருவாயினையும், ஹுவெய் 760 கோடியையும் மற்றும் ஜிஃபைவ் 670 கோடி வருவாயினையும் பெற்றுள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X