Home
News

தொலைபேசி மார்க்கெட் வருவாய் சிறிதளவே உயரும்: கார்ட்னர் ஆருடம்

By Super
தொலைபேசி மார்க்கெட் வருவாய் சிறிதளவே உயரும்: கார்ட்னர் ஆருடம்

தொலைபேசி சந்தையின் வருவாய் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 2 சதவிகிதம் வளர்ச்சியை பெற்றிருக்கும் என்றும், தொலைபேசி (லேண்ட்லைன்) சந்தையின் வருவாய் 24 ஆயிரம் கோடியை எட்ட இருக்கிறது என்கிறது என்றும் கூறுகிறது ஓர் புதிய ஆய்வு.

கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த 2011-ஆம் ஆண்டு 23 ஆயிரத்தி 500 கோடியில் இருந்த தொலைபேசி சந்தையின் வருவாய், இந்த ஆண்டு 24 ஆயிரம் கோடி வருவாயை எட்டும் என்று தெரிய வந்துள்ளது.

இது லேண்ட்லைன் தொலைபேசி சந்தையின் வருவாய் நிலை என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல்கள் அதிகம் அதிகரித்து வருகையில் லேண்ட்லைன் தொலைபேசியின் வருவாய் எப்படி அதிகமாகும்? என்ற கேள்வி கூட எழும்பலாம்.

அப்படியென்றால் இன்னும் இவ்வளவு பேர் லேண்ட்லைனை அதிகம் பயன்படுத்துகின்றனரா? என்ற ஆச்சர்யம் கூட வரலாம். ஆனால் தொலைபேசி சந்தையின் வருவாய் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வளர்ச்சியை பெறும் என்றால் அதற்கு முக்கிய காரணம், பிராட்பேண்ட் வசதி தான்.

முக்கியமாக வாய்ஸ் சர்வீஸ், பிராட்பேண்ட், இன்டர்நெட் போன்ற வசதிகளை பெறுவதற்காக தான் முக்கியமாக லேண்ட்லைன் இணைப்பை நிறைய பேர் பயன்படுத்தி வருவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

அனைத்து வேலைகளிலும் தொழில் நுட்ப வேலைகள் தேவைப்படுவதினால், இன்டர்நெட் சேவை தேவைப்படுகிறது. அந்த வகையில் தொலைபேசி வசதி நிறைய பேருக்கு அத்தியாவசியமாகிறது.

2012-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டுக்குள் தொலைபேசி சேவையின் வருவாய், இப்போது இருப்பதைவிடவும் 25 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2012-ஆம் ஆண்டில் இணைய அணுகல் துறைகள் 9,200 கோடி வருவாயை அடைந்திருக்கும் என்றும், பிராட்பேண்ட் சந்தை 18 சதவிகித வளர்ச்சியை அடைந்திருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X