Home
News

மார்க்கெட் மிரளுது.. வாய்பிளக்க வைக்கும் டச் டிஸ்பிளே ஸ்கிரீன்.. பட்ஜெட் விலை TWS இயர்பட்ஸ்.. என்ன மாடல்?

இந்தியாவில் முதல் முறையாக TWS கேஸ் உடன் டச் ஸ்கிரீன் அம்சத்தை கொண்ட புது இயர்பட்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹாம்மர் (Hammer) நிறுவனத்திடமிருந்து வெளிவந்துள்ள புதிய ஹாம்மர் ஸ்கிரீன் TWS-ல் (Hammaer Screen TWS) தான் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹாம்மர் ஸ்கிரீன் TWS (Hammer Screen TWS Earbuds): இந்தியாவின் ஸ்மார்ட் வியரப்பில் பிராண்டனா ஹாம்மர் (Hammer) இப்போது இந்திய ஆடியோ கேட்ஜெட் சந்தையில் புதிதாக ஹாம்மர் ஸ்கிரீன் TWS இயர்பட்ஸ் (Hammer Screen TWS) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனத்தின் சார்ஜிங் கேஸ் டச் ஸ்கிரீன் அம்சத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் டச் ஸ்கிரீன் அம்சத்துடன் வரும் முதல் TWS சாதனமாக இது வெளிவந்துள்ளது.

மார்க்கெட் மிரளுது.. வாய்பிளக்க வைக்கும் டச் டிஸ்பிளே ஸ்கிரீன்..

டச் ஸ்கிரீன் உடன் இயர்பட்ஸ்: இது போன்ற வித்தியாசமான தயாரிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுளள்து இதுவே முதல் முறை என்பதனால், இந்திய மக்களிடையே பயங்கரமான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டச் ஸ்கிரீன் உடன் வெளிவந்துள்ள இந்த இயர்பட்ஸ் சாதனம் கண்டிப்பாக விலை உயர்ந்த சாதனமாக தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது மிகவும் தவறு.

விலை என்ன? இதன் விலை உண்மையில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இந்திய சந்தையில் முதல் டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஹாம்மர் ஸ்கிரீன் TWS இயர்பட்ஸ் சாதனம் ரூ.2,999 என்ற மிகவும் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது. இப்போது சந்தையில் வாங்க கிடைக்கும் சாதாரண TWS இயர்பட்ஸ் சாதனமே இந்த விலை புள்ளியில் தான் கிடைக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக டிஸ்பிளேவுடன் இயர்பட்ஸ்: ஆனால், ஹாம்மர் நிறுவனம் மக்களை கவர, இந்த வித்தியாசமான டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்ட TWS இயர்பட்ஸ் சாதனத்தை ரூ.2,999 என்ற குறைந்த விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. உலக சந்தையில் இதுபோன்ற சாதனங்களை மற்ற பிராண்டுகள் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்தியாவிற்கு இது முதல் முறை என்பதனால், இதன் விற்பனைக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மார்க்கெட் மிரளுது.. வாய்பிளக்க வைக்கும் டச் டிஸ்பிளே ஸ்கிரீன்..

இந்த இயர்பட்ஸ் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இந்த புதிய ஹாம்மர் ஸ்கிரீன் TWS இயர்பட்ஸ் சாதனம் பல உயர்தர அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹாம்மர் ஸ்கிரீன் TWS இயர்பட்ஸ் சாதனத்தில் டச் டிஸ்பிளே ஸ்கிரீன் மூலம் பயனர்கள் பல விதமான செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடிகிறது. உதாரணமாக, மியூசிக் பிளேபேக் கண்ட்ரோலை டச் ஸ்கிரீன் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

ஓ.. இதை கூட இந்த இயர்பட்ஸில் செய்யலாமா? இத்துடன், இயர்பட்ஸ் ஆடியோ தரத்தை மேம்மபடுத்தி வேறுபடுத்தும் ப்ரீசெட் ஈக்குவலைசர் அம்சத்தையும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இது என்ன பிரமாதம் இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று உள்ளது. இந்த புதிய டச் ஸ்கிரீன் TWS இயர்பட்ஸ் டிஸ்பிளேவை பயன்படுத்தி, பயனர்கள் அவர்களுக்கு வரும் வாய்ஸ் கால் அழைப்புகளை TWS கேஸ் மூலம் அட்டண்ட் செய்யவும், கட் செய்யவும் அனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

எங்கே வாங்குவது? இந்த இயர்பட்ஸ் சாதனம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) அம்சத்தை எளிமையாக டச் டிஸ்பிளே மூலம் ஆன் மற்றும் ஆப் செய்யவும் இந்த சார்ஜிங் கேஸ் அனுமதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹாம்மர் ஸ்கிரீன் TWS இயர்பட்ஸ் சாதனம் இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம் வழியாக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. மார்ச் 20ம் தேதி ஷிப் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
India's first touch screen display tws earbuds Hammer Screen TWS launched in India at Rs 2999 price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X