Home
News

நாடே எதிர்பார்த்த ஹைட்ரஜன் ரயில்.. சோதனை ஓட்டம் வெற்றி.. என்ன வேகம்? என்னென்ன சிறப்புகள்.. முழு விவரம் இதோ..

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் (hydrogen train) சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது ஹைட்ரஜன் ரயிலை ஹரியான மாநிலம் ஜிந்த்-லலித் கேரா இடையே மணிக்கு 70 கி.மீ வேகத்தில் இயக்கி, வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக, சென்னை ஐ.சி.எப் ஆலையில் 118 கோடி ரூபாய் செலவில் இந்த ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டது. அதுவும் இந்த ரயில் நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட இது சுற்றுச்சுழல் பாதுகாப்புக்கு உகந்தது. அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ தூரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

நாடே எதிர்பார்த்த ஹைட்ரஜன் ரயில்.. சோதனை ஓட்டம் வெற்றி.. என்ன வேகம்?

பொதுவாக இதுபோன்ற ரயில்கள் சுற்றுலா தளங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஹைட்ரஜன் ரயில் இயக்கத்தில் இந்தியாவும் பங்களிப்பைச் செலுத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

அதேசமயம் சாதாரண ரயில்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் டீசல் அல்லது எலக்ட்ரிக் ரயில்களாக இயக்கப்படும். அதுவும் டீசல் ரயில்கள் கார்பன் வெளியீட்டை அதிகப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. மின்சார ரயில்கள் நிலக்கரி தேவையைத் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. ஆகவே இதனை பூமியில் இருந்து வெட்டி எடுக்க வேண்டிய தேவையும் அதிகரிக்கிறது.

அதுவும் மின்சார ரயில்களில் வந்தே பாரத் போன்ற அதிவேக சேவைகள் வந்துவிட்டன இவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. டீசல் ரயில்களுக்கு அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் தேவை. மின்சார ரயில்களுக்கு வழி நெடுகிலும் கம்பிகள் பொருத்த வேண்டும். இவை அனைத்திற்கு பெரும் பொருட் செலவு அதிகம் உள்ளது.

ஆனால் ஹைட்ரஜன் ரயில்கள் பொறுத்தவரை ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயக்கப்படுகிறது. இதற்கு பிரத்யேக டேங்குகள் பொருத்தப்படும். அதுவும் புகையை வெளியிடாது. நீராவி மட்டுமே வெளியாகும். கார்பன் வெளியேற்றம் சிறிதும் இருக்காது. இந்த ரயில்கள் அதிவேகத்திற்கு முக்கியத்துவம் தராது.

ஹைட்ரஜன் ரயில்களுக்கு மின்சாரக் கம்பி வசதிகள் தேவைப்படாது. அதுவும் சிக்கலான நில அமைப்புகளைக் கொண்ட பகுதிகளில் இயக்க முடியும். ஆனாலும் ஹைட்ரஜன் உற்பத்தி மையம், எரிபொருள் நிரப்பும் மையம் ஆகியவற்றை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு அதிக செலவு அதிகம் வரும் என்று கூறுகின்றனர்.

தற்போது ஹரியான மாநிலம் ஜிந்த்-லலித் கேரா இடையே பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் முக்கிய பகுதியாக மணிக்கு 70 கி.மீ வேகத்தில் நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

நாடே எதிர்பார்த்த ஹைட்ரஜன் ரயில்.. சோதனை ஓட்டம் வெற்றி.. என்ன வேகம்?

மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது என்னவென்றால் ரயில்வேயில் அடுத்த கட்ட தொழில்நுட்பமாக ஹைட்ரஜன் ரயில் இயக்கத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது இதற்கான அனைத்து கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும் ஒவ்வொரு பெட்டியிலும் 84 பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ரயிலில் பல்வேறு கட்ட பாதுகாப்பு சோதனை நடத்தப்படும். பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் பெற்று, பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். அதுவும் முதல் ரயில் வெற்றிகரமாகப் பயன்பாட்டிற்கு வந்ததும் புதிதாக 35 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indias First Hydrogen Train Hits 70 kmph in Successful Jind Trial
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X