Home
News

இது லிஸ்ட்லையே இல்லையே.. இந்தியாவின் முதல் AI பெண் ரோபோ டீச்சர்.. மாணவர்களை கவர ரோபோ என்ன செய்தது தெரியுமா?

பலதுறைகளில் இப்போது AI என்று அழைக்கப்படும் செயற்கைநுண்ணறிவு திறன் கொண்ட ரோபோட்களின் ஆதிக்கத்தையும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் இப்போது இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை AI ரோபோட் (AI teacher) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

AI teacher: இது இந்தியாவில் எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய AI டீச்சர் என்னென்ன செய்யும்? எப்படி மாணவர்களுடன் பழகும்? எப்படி வகுப்பில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும்? என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். முதலில் இந்த ரோபோடின் பெயர் மற்றும் மற்ற விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த AI ஆசிரியைக்கு 'ஐரிஸ் (Iris)' என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

இது லிஸ்ட்லையே இல்லையே.. இந்தியாவின் முதல் AI பெண் ரோபோ டீச்சர்..

ஏஐ ஆசிரியை: மேக்கர்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் (Makerlabs Edutech Private Limited) என்ற நிறுவனம் தான் இந்த அழகான மற்றும் அறிவான ஏஐ ஆசிரியையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியையாக (India's first AI teacher) அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோ கேராவில் (Kerala) உள்ள கடுவாயில் (Kaduvayil) பகுதியில் அமைந்துள்ள KTCT மேல்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளியில் இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக மகளிர் தின: (Women's day) கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று இந்த பள்ளியில் முதல் பெண் AI ஆசாரியை ரோபோவை மேக்கர்ஸ்லேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐரிஸ் ரோபோ (Iris AI Robo) அழகாக சேலை உடுத்தி, மெருதுவான குரல் உடன் கால்களில் பொருத்தப்பட்ட சக்கரங்களின் உதவியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த ரோபோ என்ன செய்யும்? இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் (Facebook) மற்றும் செய்தி (News) ஊடகங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது. இந்த ஏஐ ரோபோ மாணவர்களுடன் உரையாடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடம் சம்பந்தமாக கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், எந்தவிதமான கேள்வியாக இருந்தாலும் அதற்கு எடுத்துக்காட்டுடன் பதிலளிக்கிறது.

இது லிஸ்ட்லையே இல்லையே.. இந்தியாவின் முதல் AI பெண் ரோபோ டீச்சர்..

என்ன மொழியில் பேசும்? இது ஒரு புதுமையான முயற்சியாகும். இது 3 வெவ்வேறு விதமான மொழிகளில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. இது தனிப்பயனாக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் ஊடாடும் கற்றல் அனுபவங்களை எளிதாக்குகிறது என்று பள்ளி நிறுவனம் மற்றும் மேக்கர்ஸ்லேப்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த AI ஆசாரியை ரோபோ மிகவும் சக்தி வாய்ந்த பிராசஸர் மற்றும் கம்பிரஷர் போன்றவற்றை கொண்டுள்ளது.

மாணவர்களை எப்படி இந்த ரோபோ கவர்ந்தது?

இந்த ஏஐ ரோபோவுடன் உரையாட மாணவர்கள் ஒரு பிரத்தியேகமான ஆண்ட்ராய்டு ஆப்ஸ் சேவையையும் பயன்படுத்தலாம். இது மாணவர்களுடன் நட்பாக செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுடன் கைகுலுக்கி ஒவ்வொருவருடனும் பேசி, அவர்களை கவர்ந்துள்ளது. இருப்பினும், இந்த ஏஐ ரோபோட் சேவையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பள்ளி வகுப்பு என்றாலோ அங்கு சத்தம் அதிகமாக தான் இருக்கும்.

சத்தம் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த ரோபோவால் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது சிரமமாக இருக்கிறது. அதேபோல், பல மாணவர்கள் ஒன்றாக கேள்வி எழுப்பும் நேரத்தில் ரோபோ பதில் அளிக்க தாமதிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த AI ஆசாரியை ரோபோவை மாணவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் என்னவென்று கேட்டால், இது மாணவ மாணவியரிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லையாம், மற்றும் தினசரி வீட்டு படங்களை முடித்து வரும்படி வற்புறுத்துவதும் இல்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர். என்ன தான் அறிவார்ந்த கேள்விகளுக்கு பதில் வழங்கினாலும், மாணவர்களின் சேட்டையை இந்த ரோபோவால் கட்டுப்படுத்த முயலவில்லை என்பதே உண்மையாகும். மாணவர்களை சரியாக வழிநடத்துவதில் நமது ஆசியர்களுக்கு நிகராக இந்த ரோபோவால் செயல்பட முடியவில்லை என்பதே உண்மையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
India's First AI Women Techer Introduced In Kerala KTCT Higher secondary School To Take Class
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X