Home
News

சலாம் ராக்கி பாய்.. 31 OTT சேனல்.. மாத்திரம் ரூ.99 போதும்.. யாருக்கும் தெரியாத இந்தியாவின் பெஸ்ட் OTT பிளான்..

இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் 31 OTT-சேனல் சேவையை ரூ.399 விலையில் வழங்கும் ஒரே திட்டமாக டாடா பிளே பிங்கே (Tata Play Binge) திகழ்கிறது. இந்த பிரத்தியேகமான OTT திட்டங்களை பற்றி யாருக்கும் பெரியளவில் தெரியவில்லை என்பதனால், இப்போது தெரியப்படுத்துகிறோம்.

Tata Play Binge: ஒன்றில்லை, இரண்டு இல்லை மொத்தம் 31 ஓடிடி (OTT) சேனலுக்கான அணுகலை, மிகவும் மலிவான விலையில் இப்போது டாடா பிங்கே சேவை வழங்குகிறது. உண்மையை சொல்ல போனால், இந்தியாவில் பார்க்க கிடைக்கும் பெரும்பாலான OTT சேனல்கள் இந்த திட்டத்தில் கவர் செய்யப்பட்டுள்ளது. 31 OTT சேனல் விருப்பங்களை வழங்கும் இந்த திட்டத்தின் விலை பல ஆயிரம் இருக்குமோ என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு மக்களே.

சலாம் ராக்கி பாய்.. 31 OTT சேனல்.. மாத்திரம் ரூ.99 போதும்..

ஓடிடி பண்டல் பிளான் (OTT Bundle Plan): இந்த திட்டம் இப்போது வெறும் ரூ.399 விலையில் கிடைக்கிறது. இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தை நீங்கள் ஒரே நேரத்தில் 4 வெவ்வேறு டிவைஸ்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இந்த திட்டத்தை நீங்கள் 4 நபர்களாக பயன்படுத்த விரும்பினால், மாதம் வெறும் ரூ.99 செலவில் உங்களால் 31 OTT சேவைக்கான அணுகலை அனுபவிக்க முடியும்.

மலிவு விலையில் 2 திட்டம்: இதுவொரு ஆல்-இன்-ஒன் OTT பண்டல் சந்தா திட்டமாக செயல்படுகிறது. அனைத்து சமீபத்திய OTT திரைப்படங்கள், சீரிஸ்கள் மற்றும் லைவ் நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கு இது அனுமதிக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டின் சிறந்த OTT பண்டில் சந்தாக்களில் ஒன்றாக Tata Play Binge OTT பண்டில் சந்தா திகழ்கிறது. டாடா பிளே பிங்கே இப்போது 2 திட்டங்களை வழங்குகிறது.

ரூ.399 திட்டம்: இதில் ரூ.399 திட்டம் 31 OTT சேனலுக்கான சந்தாவை 4 டிவைஸ்களுக்கு வழங்குகிறது. அதேபோல், நிறுவனம் வழங்கும் மற்றொரு திட்டம் தான் ரூ.299 திட்டமாகும். இதில் 26 OTT சேனலுக்கான அணுகல் கிடைக்கிறது. இதையும் நீங்கள் 4 வெவ்வேறு டிவைஸ்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். 4 டிவைஸ்கள் என்று கூறுகையில், இதை நீங்கள் ஸ்மார்ட் டிவி, லேப்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம்.

சலாம் ராக்கி பாய்.. 31 OTT சேனல்.. மாத்திரம் ரூ.99 போதும்..

31 OTT சேனல்கள்: ரூ.399 திட்டத்துடன் கிடைக்கும் OTT சேனல்களின் விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்துடன் உங்களுக்கு ஹாட்ஸ்டார் (Hotstar), ஆப்பிள் டிவி+ (Apple Tv+), ஜீ5 (Zee5), ஃபேன்கோட் (Fancode), எம்எக்ஸ் பிளேயர் (MX Player), ஆஹா (Aha), ஷிமாரூ (Shemaroo), சன் நெக்ஸ்ட் (SunNxt), ஹங்கமா (Hungama), டாக்குபே (Docubay), ஹால்மார்க் மூவீஸ் நவ் (Hallmark Movies Now), எபிக் ஆன் (EpicON),

இன்னும் இருக்கு: நம்மஃபிலிக்ஸ் (NamaFlix), கிளிக் (Klikk), பிளானட் மராத்தி (Planet Marati), ஸ்டேஜ் (Stage), பிளேஃபிக்ஸ் (PlayFix), சவுபால் (Chaupal), ஷார்ட்ஸ் டிவி (ShortsTV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), அனிமேக்ஸ் (Animax), விஆர் ஓடிடி (VROTT), ரீல் ட்ராமா (Reel Drama), டரங் பிளஸ் (Tarang Plus), ட்ராவல் எக்ஸ்பி (Travel XP), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), க்யூரியாசிட்டி ஸ்ட்ரீம் (Curiosity Stream),

ரூ.299 திட்டம்: பியூஸ்+ (Fuse+), டாக்குபே (Docubay), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), பிடிசி பிளே (PTC Play) போன்ற சேனல்களின் அணுகல் கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் ஆப்பிள் டிவி+ (Apple Tv+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஹால்மார்க் மூவீஸ் நவ் (Hallmark Movies Now), பியூஸ்+ (Fuse+), க்யூரியாசிட்டி ஸ்ட்ரீம் (Curiosity Stream) சேனல்கள் மட்டும் ரூ.299 திட்டத்துடன் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
India's Best Cheapest OTT Bundle Pack From Tata Play Binge At Rs 399 and Rs 299 per Month Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X