வாட்ஸ்ஆப்பில் மூழ்கி கிடக்கும் இந்தியர்கள்..!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் பயனாளிகள் தங்களது கிடைக்கும் மொத்த நேரத்தில் சுமார் 47 சதவீதத்தினை வாட்ஸ்ஆப், வீ-சாட், ஹைக் மற்றும ஸ்கைப் போன்ற தகவல் பறிமாற்ற செயலிகளை பயன்படுத்த எடுத்து கொள்வதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் மூழ்கி கிடக்கும் இந்தியர்கள்..!

தகவல் பறிமாற்றம் ஸ்மார்ட்போன்களில் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கின்றது. இவ்வாறான செயலிகள் எப்பொழுதும் ஆன் செய்யப்பட்டு இருப்பதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக்ஸன் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி இந்தியர்கள் அதிகபட்சமாக சுமார் 47 சதவீத நேரத்தினை தகவல் பறிமாற்ற செயலிகளில் செலவிடுவதாகவும், பெரும்பாலும் வாய்ஸ் மெசேஜிங், வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோடோகால், மின்னஞ்சல், மற்றும் சமூக வலைதள சேவைகளை தங்களது ஸ்மார்ட்போன்களின் மூலம் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் பறிமாற்ற செயலிகள் மொபைல் இண்டர்நெட் டேட்டாக்களை அதிகளவில் சார்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
Smartphone users in India spend 47 per cent of their time on communication applications such as WhatsApp, WeChat, Hike and Skype.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்