குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா.. ஓட்டலில் டிஜிட்டல் வரவேற்பாளர்.. எந்த இடம் தெரியுமா?
உலகம் முழுவதும் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் கால் பதித்து விட்டது. குறிப்பாக தற்போது மென்பொருள் மேம்பாடு, செயலிகள் உருவாக்கம் என மென்பொருள் பொறியாளர்களின் பணிகளை ஏஐ தொழில்நுட்பமே மேற்கொள்கிறது. எனவே இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் இன்னும் அதிகமான வேலை இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை பல துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மனிதர்கள் செய்யும் வேலைகளை டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் எளிதாகச் செய்ய முடிகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மெய்நிகர் வரவேற்பாளராகச் செயல்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகி உள்ளது.

அந்த மியாமி மாநிலத்தில் அமைந்துள்ள ஓட்டல் (Miami hotel) ஒன்றில் இந்திய வம்சாவளியை நேர்ந்த ஒருவர் தொலைதூரத்தில் இருந்து ஓட்டல் வரவேற்பறையில் உள்ள மேஜையில் டிஜிட்டல் திரை வழியாக இயக்குகிறார். அதுவும் ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு செக்-இன் செயல் முறையில் உதவுகிறார்.
இதுதவிர பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது. மேலும் திரையில் அவர் விருந்தினர்கள் முன்பு பேசி அவர்களுக்கு ஓட்டலின் விதிகளைக் கூறி வாடிக்கையாளர்களுக்கு அறைக்கு செல்ல வழிகாட்டுவது போன்ற காட்சிகள் உள்ளது. தற்போது இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக சிலர் இந்த இடங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், இதனால் பலர் வேலைகளை இழக்க நேரிடும் எனவும் பதிவிட்டனர். அதேசமயம் சிலர் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.
ஏஐ அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட வியோ 3
அதேபோல் கடந்த மே மாதம் வருடாந்திர டெவலப்பர் மாநாடு I/O 2025 நடைபெற்றது. இந்நிகழ்வில் கூகுள் வியோ 3 (Veo 3) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Veo 3 ஆனது உண்மையிலேயே ஒரு அற்புதமான ஏஐ வீடியோ ஜெனரேட்டர் என்று சொல்லலாம். அதாவது இது உரை (text prompts) அல்லது படங்கள் (image prompts) மூலமாக உயர்தரமான வீடியோக்களை உருவாக்குகிறது. அதுவும் கூகுள் டீப்மைண்ட்-இன் (Google DeepMind) புது முயற்சி தான் இது.
முன்பு வந்த Veo மற்றும் Veo 2 மாடல்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த Veo 3 வெளிவந்துள்ளது. அதுவும் Veo 3 -ல் உரையாகவும் படங்களாகவும் கொடுக்கப்படும் உள்ளீடுகளுக்கு, நிஜமான உலகில் உள்ள இயற்பியலுடனும், சரியான உதட்டசைவுடனும் சத்தத்துடன் கூடிய வீடியோவை உருவாக்கி கொடுக்கப்படும் என்பது தான் சிறப்பு.
இந்த Veo 3 அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 வினாடிகள் வரை 4k தரத்தில் வீடியோக்களை உருவாக்க முடிந்தது. அதுவும் ஒலி, உரையாடல்கள், மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் உட்பட சினிமா ஸ்டைல்களில் வீடியோக்களை உருவாக்க முடிந்ததாகப் பலர் தெரிவித்தனர். நிஜமாகத் தெரியும் காட்சிகள் முதல் அனிமேஷன், கற்பனை போன்ற அனைத்தையும் இந்த Veo 3 மூலம் உருவாக்க முடியும். குறிப்பாக இந்த ஏஐ மாடலில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் நிஜ வீடியோகளைப் போலவே இருப்பதாகவும், வித்தியாசம் கண்டறியவே திணறுவதாகவும் பலர் கூறுகின்றனர்.
ஒரு உதாரணமாக நீங்கள் ஒரு குரங்கு மனிதர்களுடன் நடனம் ஆடும் வீடியோவை இதில் உருவாக்க சொன்னால், இது குரங்கின் நடன அசைவுகள், அதற்குத் தகுந்த லைட்டிங், மனிதர்களின் எதார்த்தமான ரியாக்ஷன்ஸ் என அனைத்தையும் நம்பமுடியாத அளவுக்கு தத்ரூபமாக உருவாக்கிக் கொடுக்கிறது என்பது தான் சிறப்பு.

Veo 3 மாடலின் முக்கிய சிறப்பு என்னவென்றால், வீடியோ மட்டுமின்றி ஒலியையும் சேர்த்து கொடுக்கிறது. இதுதவிர கதாபாத்திரங்களின் உரையாடல்கள் சுற்றுப்புற சத்தங்கள் (உதாரணமா பறவைகள் சத்தம், தெரு சத்தம்) மற்றும் இசை எல்லாமே இதில் இருக்கிறது. குறிப்பாக மனிதர்களில் லிப் சிங்க் துல்லியமாக இருக்கிறது. அதாவது கதாபாத்திரங்கள்
ஆரம்பத்தில் இந்த Veo 3 வசதியைப் பயன்படுத்த மாதம் 250 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறப்பட்டது. யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோக்களை உருவாக்க இந்த Veo 3 பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் Google DeepMind-இன் SynthID டிஜிட்டல் வாட்டர்மார்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று அடையாளப்படுத்தி, டீப்ஃபேக்ஸ் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க உதவுகிறது.
video credits: languageguy1, instagram


Click it and Unblock the Notifications








