ஆஹா கெத்து., 1 நிமிடத்திற்கு 95 பேர் இந்த உணவை தான் ஆர்டர் செய்கிறார்கள்: ஸ்விகி அறிக்கை

|

பல்வேறு வகையான உணவுப் பழக்கங்களை கொண்டதுதான் இந்தியா. ஆனால் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்த ஒரே வகையான உணவை விரும்பி உண்ண விரும்புகிறார்கள். ஆன்லைன் ஆர்டர் மூலம் விநியோக நிறுவனமான ஸ்விகியின் வருடாந்திர அறிக்கை வெளியாகியுள்ளது.

பிரியாணிதான் கெத்து

பிரியாணிதான் கெத்து

அதில் சராசரியாக 95 பிரியாணிகள் ஒவ்வொரு நிமிடத்திற்கும், ஒரு விநாடிக்கு 1.6 பிரியாணியும் ஆர்டர் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஸ்விகியின் மூலம் பயனர்களுக்கு சுமார் 35,056 வகை பிரியாணிகள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக எலும்பு இல்லாத கோழி பிரியாணி, சிக்கன் டம் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, வெஜ் பிரியாணி மற்றும் பன்னீர் பிரியாணி ஆகியவைகள் மிகவும் பிரபலமானவைகள்.

குறைந்த விலை மற்றும் அதிக விலை பிரியாணி

குறைந்த விலை மற்றும் அதிக விலை பிரியாணி

மும்பையின் "சல் தன்னோ தவா பிரியாணி" ஸ்விக்கியில் ரூ .19 க்கு விற்கப்பட்டது, பசியோடு இருப்பவர்களுக்கு விரைவாக பரிமாறும் சைவ பிரியாணியாகும். புனேவின் "சிக்கன் சஜுக் டப் பிரியாணி" ரூ .1,500 விலையில் மிகவும் விலையுயர்ந்த பிரியாணியாக இருந்தது.

ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு: ஜியோ Newyear பிளான்: 1 போன் ஃப்ரீ, 2020 முழுவதும் கால், நெட் இலவசம்ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு: ஜியோ Newyear பிளான்: 1 போன் ஃப்ரீ, 2020 முழுவதும் கால், நெட் இலவசம்

வெஜ் உணவு வகைகளில் சிறப்பு

வெஜ் உணவு வகைகளில் சிறப்பு

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் விரும்பப்பட்ட உணவு வகைகளில். இதில் மிகவும் விரும்பப்பட்ட உணவுகளில் மசாலா தோசை, பன்னீர் வெண்ணெய் மசாலா, சிக்கன் மற்றும் வெஜ் ஃப்ரைட் ரைஸ், தந்தூரி சிக்கன் மற்றும் பருப்பு மக்கானி ஆகியவை அடங்கும்.

நவராத்திரி காலத்தில் முன்னேற்றம்

நவராத்திரி காலத்தில் முன்னேற்றம்

ஸ்விக்கியின் பகுப்பாய்வு அதன் ஆப்களில் பெறப்பட்ட ஆர்டர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் என்றும் கூறியுள்ளது. இதில் ஜனவரி முதல் நவம்பர் வரை என்று பார்க்கையில் நவராத்திரி பண்டிகை காலத்தில் உணவு ஆர்டர் கணிசமாக முன்னேற்றம் அடைந்தது.

சிறப்பு இடத்தை பிடித்த உணவுகள்

சிறப்பு இடத்தை பிடித்த உணவுகள்

இந்த காலக்கட்டத்தில் மெதி மலாய் பன்னீர், அரிசி மற்றும் சப்பாத்திகள் தாலி, கோபி மாதர் மசாலா, ஜீரா அரிசி மற்றும் சப்பாடிஸ் தாலியுடன் தால் மக்கானி மற்றும் மினி தோசை, இட்லி, வட மற்றும் சாம்பார் தாலி போன்ற பல தாலிகள் ஒரு சிறப்பு இடத்தைக் பிடித்துள்ளன.

குலாப் ஜாமுனுக்கு அதிக பேர் விருப்பம்

குலாப் ஜாமுனுக்கு அதிக பேர் விருப்பம்

2019 ஆம் ஆண்டில் 1.76 மில்லியன் குலாப் ஜாமுன் ஆர்டர்கள், சமீபத்தில் ஃபலூடா என்ற சிறந்த இனிப்பு வகை புதிதாக இணைக்கப்பட்டது. இதை இணைத்த இந்த ஆண்டில் மட்டும் 1.2 மில்லியன் ஆர்டர்கள் வந்துள்ளது. இதில் மும்பையில் மட்டும் 6,000 முறைகளுக்கும் மேல் ஒரு சிறப்பு ஐஸ்கிரீம் நிரப்பப்பட்ட ஃபலூடா ஆர்டர் செய்யப்பட்டது.

2020 நமதே., காலரை தூக்கும் இஸ்ரோ: சந்திரயான் 3, ககன்யான் என பல திட்டங்கள்2020 நமதே., காலரை தூக்கும் இஸ்ரோ: சந்திரயான் 3, ககன்யான் என பல திட்டங்கள்

ஐஸ்கிரீம், ஹல்வாவுக்கும் விருப்பம்

ஐஸ்கிரீம், ஹல்வாவுக்கும் விருப்பம்

மற்றொரு உணவாக "சோகோ பை மற்றும் பானம்" சண்டிகரில் மட்டும் 79,242 ஆர்டர்களைப் பெற்றது. மற்ற பிரபலமான இனிப்பு விருந்துகளில் "சாக்லேட் பை டெத், டெண்டர் தேங்காய் ஐஸ்கிரீம், டிராமிசு ஐஸ்கிரீம் மற்றும் கேசர் ஹல்வா" போன்ற ஆர்டர்களும் குவிந்துள்ளன.

Best Mobiles in India

English summary
Indians ordered an average of 95 biryanis per minute: Swiggy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X