இங்க கேட்டு என்ன பண்ண: கூகுள் தேடுதளத்தில் இந்தியர்கள் அதிகம் தேடியது இதுதான்!

|

கூகுள் தேடுதளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் டாப் இடத்தில் இதுதான் இடம்பெற்றுள்ளது.

கொரோனாவுக்கு முன்பின்

கொரோனாவுக்கு முன்பின்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா. உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது என்றே கூறலாம். மக்களின் வாழ்க்கை கொரோனாவுக்கு முன்பின் என இரண்டாக பிரிக்கும் வகையில் கொரோனாவின் கோரத்தாண்டம் இருந்தது.

பள்ளிகல்லூரிகள் செயல்படாத முடிய நிலை

பள்ளிகல்லூரிகள் செயல்படாத முடிய நிலை

பொதுபோக்குவரத்து முடக்கம், பள்ளிகல்லூரிகள் செயல்படாத முடிய நிலை, பொருளாதார வீழ்ச்சி என நாடே ஸ்தம்பிக்க தொடங்கியது. குறிப்பாக ஏராளமானோர் வேலையிழந்து தங்களது வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்தனர்.

அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்

அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்

கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்த பட்டியலை மாதந்தோறும் வெளியிடுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!

இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிய தலைப்பு

இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிய தலைப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடிய தலைப்பு ரஷ்யா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி தொடர்பாகதான். கொரோனா தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்துவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதில் ரஷ்ய தடுப்பூசி மருந்தை தன்நாட்டு மக்களுக்கு பரிசோதித்து பார்த்ததாக செய்தி வெளியானது. இதுவே இந்தியர்கள் இதுகுறித்து அதிகமாக தேடியிருக்கலாம்.

இந்திய சுதந்திர தினம் தொடர்பான செய்திகள்

இந்திய சுதந்திர தினம் தொடர்பான செய்திகள்

அடுத்த இடங்களில் இந்திய சுதந்திர தினம் தொடர்பான செய்திகள், அமித்ஷாவுக்கு கொரோனா உண்மையா, ஜியோ மொபைலில் காலர்டியூனாக வரும் கொரோனா அறிவிப்பை நிறுத்துவது எப்படி, எஸ்பிபி பாலசுப்மணியத்திற்கு கொரோனா சரியாகிவிட்டதா என கூகுளில் இந்தியர்கள் அதிகமாக தேடியுள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் தொடர்பான சந்தேகங்கள்

கொரோனா அறிகுறிகள் தொடர்பான சந்தேகங்கள்

அதேபோல் கடந்த சில காலமாகவே கொரோனா அறிகுறிகள் தொடர்பான சந்தேகங்கள், இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி குறித்த தேடல்களும் இடம்பெற்று வருகிறது. கொரோனாவின் ஆக்ரோஷம் எப்போது தனியும், இயல்புநிலைக்கும் எப்போது திரும்புவோம் என்பதே ஏணையோரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indians most searched Topics on google in August month

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X