இந்த லிஸ்ட்ல.. உங்களோட சியோமி, ரெட்மி போன் இருக்கா? அப்போ பிப்.29 க்கு அப்புறம் எல்லாமே மாற போகுது! ஏன்னா?
கீழ்வரும் பட்டியலில் உள்ள ஷாவ்மீ (Xiaomi) அல்லது ரெட்மி (Redmi) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் (Smartphone) அல்லது டேப்லெட் (Tablet) அல்லது ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) உங்களிடம் இருந்தால்.. வருகிற பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பின்னர் உங்கள் டிவைஸில் எல்லாமே மாறப்போகிறது.
ஏனென்றால், ஷாவ்மீ நிறுவனத்தின் புதிய ஓஎஸ் ஆன ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) பிப்ரவரி 29 ஆம் தேதியன்று தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து ஷாவ்மீ மற்றும் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் வெளியான பல ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மாடல்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் (Latest OS Update) ஆக சென்று, பல புதிய அம்சங்களையும் வழங்கவுள்ளது!

என்னென்னெ சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் கிடைக்கும்?
01. ஷாவ்மீ 14 சீரீஸ் (Xiaomi 14 series)
02. ஷாவ்மீ 13 சீரீஸ் (Xiaomi 13 series)
03. ஷாவ்மீ 13டி சீரீஸ் (Xiaomi 13T series)
04. ஷாவ்மீ 12 சீரீஸ் (Xiaomi 12 Series)
05. ஷாவ்மீ 12டி சீரீஸ் (Xiaomi 12T Series)
என்னென்னெ ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் கிடைக்கும்?
01. ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series)
02. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 12 Pro Plus 5G)
03. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G)

என்னென்னெ போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் கிடைக்கும்? மேற்கண்ட ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களை தவிர்த்து இந்தியாவில் வாங்க கிடைக்கும் சில போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கும் கூட புதிய ஹைப்பர்ஓஎஸ்-க்கான அப்டேட் கிடைக்கும். அந்த பட்டியலில் இப்போதைக்கு போக்கோ எக்ஸ்6 (POCO X6), போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro) மற்றும் போக்கோ எப்5 (POCO F5) மாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
என்னென்னெ டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் கிடைக்கும்?
01. ஷாவ்மீ பேட் 6எஸ் ப்ரோ (Xiaomi Pad 6S Pro)
02. ஷாவ்மீ பேட் 6 (Xiaomi Pad 6)
03. ரெட்மி பேட் எஸ்இ (Redmi Pad SE)
04. ஷாவ்மீ வாட்ச் எஸ்3 (Xiaomi Watch S3)
05. ஷாவ்மீ ஸ்மார்ட் பேண்ட் 8 ப்ரோ (Xiaomi Smart Band 8 Pro)

ஷாவ்மீ நிறுவனம் வருகிற பிப்ரவரி 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அதன் புதிய ஹைப்பர்ஓஎஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. நினைவூட்டும் வண்ணம் ஹைப்பர்ஓஎஸ்-ஐ பேக் செய்யும் ஷாவ்மீ 14 (Xiaomi 14) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மார்ச் 7 ஆம் தேதியன்று நடக்கிறது.
ஷாவ்மீ 14 என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPDDR5X ரேம், 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ், 90W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,610mAh பேட்டரியை பேக் செய்யும்.
மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.36-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்ப்ளே, ட்ரிபிள் கேமரா செட்டப், அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உடனான 50எம்பி ஹண்டர் 900 சென்சார் + 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராக்கள் இடம்பெறும், முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா இருக்கும். இந்தியாவில் இது ரூ.75,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்கள் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் போனின் டிஸ்பிளேக்களை பாதுகாக்க, லிக்விட் யுவி அடிசிவ் ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்களை (Liquid UV adhesive screen protectors) பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பழுதாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications