மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் கூடிய வேலையில் சேர்ந்த இந்தியப் பெண்

|

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனித்துவமான மென்பொருள் மற்றும் சாதனங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில்

இந்நிலையில்அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் -2 குரூப் போஸ்ட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஐதராபாத்தைச் சேர்ந்த தீப்தி. குறிப்பாக தீப்திக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தை நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேர்ந்த தீப்தி, உஸ்மானியா

ஐதராபாத்தை சேர்ந்த தீப்தி, உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்துள்ளார். மேலும் இவரின் தந்தை டாக்டர் வெங்கண்ணா ஐதராபாத்தில் தடயவியல் நிபுணராக பணியாற்றுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

COVID-19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டிப்ஸ்..COVID-19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டிப்ஸ்..

க இளநிலை படிப்பை இந்தியாவில் படித்த

குறிப்பாக இளநிலை படிப்பை இந்தியாவில் படித்த தீப்தி, தனது முதுநிலை படிப்பை அமெரிக்காவில் தொடர திட்டமிட்டார். ஆனால் அதற்கு பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படவே அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பு JPMorgan Chase நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

போடு போடுனா எங்க இருக்கு., இதுல இந்த காலர்டியூன் வேற எரிச்சலாக்குது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!போடு போடுனா எங்க இருக்கு., இதுல இந்த காலர்டியூன் வேற எரிச்சலாக்குது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

பல்கலைக்கழகத்தில்

அதன்பின்பு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்ற தீப்தி, சமீபத்தில் தான் அந்த பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் Sachs, அமேசான், கோல்ட்மேன் ஆகிய பெரிய நிறுவனங்களில் கூட தீப்திக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

நாசா சேகரித்த சிறுகோளில் உயிர்களுக்கான அடையாளமா? 4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்நாசா சேகரித்த சிறுகோளில் உயிர்களுக்கான அடையாளமா? 4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்

 மைக்ரோசாஃப்ட் நிறுவன

ஆனால் தீப்தி மைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையே தேர்வு செய்துள்ளார். குறிப்பாக அந்நிறுவனத்தில் தீப்திக்கு ரூ.2 கோடி சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த வளாக நேர்காணலின் போது அதில் பங்கேற்ற சுமார் 300 மாணவர்களில், மிக உயர்ந்த வருடாந்திர சேலரி பேக்கேஜை தீப்தி மட்டுமே பெற்று புகழடைந்துள்ளார், அதேசமயம்தற்போது அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி உள்ளார்.

ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது?ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது?

தீப்தி கூறியது

மேலும் இதுகுறித்து தீப்தி கூறியது என்னவென்றால், எனக்கு கோடிங் அதிகம் பிடிக்கும், குறிப்பாக எனக்கு பிடித்ததை படிக்கவேதான் இந்த அளவு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார். பின்பு எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை தீர்க்க மற்றும் வாழக்கையை மேம்படுத்த தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உதவும் என்று தீப்தி கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian woman joins Microsoft with a salary of Rs 2 crore a year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X