இந்திய இணையதளங்களை ஹேக் செய்த பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

Written By:

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7,070 இணையதளங்களை ஹேக் செய்திருப்பதாக பாகிஸ்தான் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஹேக்கர்கள் என்பதோடு இவர்கள் 'ஸ்க்ரிப்ட் கிட்டீஸ்' என அழைக்கப்படுகின்றனர் என சைபர் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட குறியீடுகளை வைத்து ஹேக் செய்வதாகும்.

இந்திய இணையதளங்களை ஹேக் செய்த பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

ஹேக் செய்யப்பட்ட இந்திய இணையதளங்களில் ஹேக்சோர்ஸ் கிரியூ என்ற ஹேக்கிங் குழுவினரின் சின்னம் மற்றும் இந்திப் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. பாடல் வரிகளுக்கான அர்த்தம் 'உங்களது சிக்னல் எங்களுக்குக் கிடைத்து விட்டது, ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் அழைப்பு கிடைத்தது' என்றும், 'நீங்கள் நினைத்தீர்கள் ஆனால் நாங்கள் செய்து விட்டோம்'.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்திய இணையதளங்களை ஹேக் செய்த பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

ஏற்கனவே இதே ஹேக்கிங் குழுவினர் டாடா மோட்டார்ஸ், அஇஅதிமுக மற்றும் தாஜ் மஹால் இணையதளங்களை ஹேக் செய்திருக்கின்றனர். இவர்கள் ஹேக் செய்தவற்றில் பெரும்பாலானவை அரசு அல்லாத தனியாரைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் படி சுமார் 1,490 அரசு இணையதளங்கள் ஜனவரி 2010 மற்றும் டிசம்பர் 2015 காலகட்டத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
Indian websites hacked, claim Pakistani hackers Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot