Home
News

டெஸ்லாவை ஆளப்போகும் இந்தியர்- ஆட்டோபைலர் பிரிவின் முதல் ஊழியரான தமிழன் அசோக்: எலான்மஸ்க் பெருமிதம்!

டெஸ்லாவில் சேருவதற்கு முன் அசோக் எல்லுசுவாமி, வோல்க்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேப் மற்றும் வாப்கோ வாகன கட்டுப்பாட்டு அமைப்புடன் செயல்பட்டிருக்கிறார்.

தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க்

தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க்

டெஸ்லா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க், சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஆட்களை இணைப்பதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமியை தனது மின்சார வாகன நிறுவனமான ஆட்டோபைலட் குழுவில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். ஓட்டுனர் இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்தி குழுவே ஆட்டோ பைலட் குழு என குறிப்பிடப்பட்டுள்ளது. டெஸ்லாவில் சேருவதற்கு முன் அசோக் எல்லுசுவாமி, வோல்க்ஸ்வேகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேப் மற்றும் வாப்கோ வாகன கட்டுப்பாட்டு அமைப்புடன் செயல்பட்டிருக்கிறார்.

டெஸ்லாவின் ஆட்டோபைலட் குழு

டெஸ்லாவின் ஆட்டோபைலட் குழு

டெஸ்லாவின் ஆட்டோபைலட் குழு தொடங்குவதாக டுவிட்டரில் குறிப்பிட்ட எலான் மஸ்க் முதலில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர் அசோக்! என தெரிவித்துள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆட்டோ பைலட் குழு என்பது தாமாக இயங்கும் பொறியியல் நுட்பத்திற்கான பணிக்கு அசோக் தலைமை தாங்கி குழுவை வழி நடத்துவார் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். அசோக் ஆட்டோபைலட் இன்ஜினியரிங் தலைவர் என அவர் குறிப்பிட்டார்.

ரோபோடிக்ஸ் தொடர்பான படிப்பு

டெஸ்லாவில் இணைவதற்கு முன்பு எல்லுஸ்வாமி, வோக்ஸ்வாகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேப் மற்றும் வாப்கோ வாகனக் கட்டுப்பாட்டு அமைப்புடன் செயல்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறார். மேலும் கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் தொடர்பான படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார்.

டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனம்

டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனம்

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். சமீபத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார். டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார்.

ஊக்க வார்த்தைகளை அளிக்கும் எலான் மஸ்க்

ஊக்க வார்த்தைகளை அளிக்கும் எலான் மஸ்க்

ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று, தற்போது ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார். ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு மோசான முடிவுகளின் காரணமாக டெஸ்லாவை விற்க முடிவு செய்த எலான் மஸ்க், அதே நிறுவனத்தை முன்னேற்றி தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசை பின்னுக்கு தள்ளிய எலான் மஸ்க் வரலாற்றை ஸ்கிரிப்ட் செய்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலான் மஸ்க் தொடர்ந்து தனது கனவுத்திட்டங்களான உட்சபட்ச வேக ஹைப்பர் லூப் பயணம், அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்கள், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என அனைத்திலும் கவனம் செலுத்தி முன்னோக்கி செல்கிறார்.

Best Mobiles in India

English summary
Indian was selected as the first employee of the Tesla Autopilot Team: Elon musk Tweet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X