Home
News

சென்சார் கருவிகள் பழுதால், விபத்தில் நாசமான இந்திய போர் விமான்கள்.!

சென்சார் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை 9 போர் விமானங்கள் விபத்தில் சிக்கி நாசமாகியுள்ளன. மேலும், இந்திய விமாப்படையில் உள்ள விமானங்கள் எத்தனை அடிக்கடி விபத்தில் சிக்குவதற்

சென்சார் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை 9 போர் விமானங்கள் விபத்தில் சிக்கி நாசமாகியுள்ளன. மேலும்,

இந்திய விமாப்படையில் உள்ள விமானங்கள் எத்தனை அடிக்கடி விபத்தில் சிக்குவதற்கும் தொழில்நுட்ப கருவிகள் காரணம் என பரவலாக பேசப்படுகின்றது.

சென்சார் கருவிகள் பழுதால், விபத்தில் நாசமான இந்திய போர் விமான்கள்.!

இயந்திர கோளாறு காரணமாகவும் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், விமானங்களில் அடுத்த தலைமுறையின் அப்டேட்கள் இருக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நடப்பு ஆண்டில் (2019)ல் மட்டும் 9 போர் விமானங்கள் பறக்கும் போது பூமியில் விழுந்து நெருங்கிய சம்பவத்தில் விமானிகளும் இறந்துள்ளனர்.

இந்திய விமானப்படை விமானங்கள் விபத்தை சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது.

ஜாகுவார் ரக விமானம் :

ஜாகுவார் ரக விமானம் :

கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் விமானப்படை தளத்தில் இருந்து போர் விமானம் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டது. ஜாகுவார் ரக விமானம் குஷிநகர் அருகே பறந்த போது இயந்திர (சென்சார்கள்) கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த அந்த விமானத்தின் மதிப்பு 94.30 கோடி ரூபாய்.

மிராஜ்-2000 விமானம்  விபத்து:

மிராஜ்-2000 விமானம் விபத்து:

அந்த விபத்து நடைபெற்ற மூன்று நாட்கள் கடந்த நிலையில் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்று பெங்களூரு ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்கான புறப்பட்ட விமானப்படையின் மிராஜ்-2000 விமானம் ஒன்று இயந்திர கோளாறு (சென்சார்கள்) காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தை இயக்கிய இருவரும் உயிரிழந்தனர். அந்த விமானத்தின் விலை 129.52 கோடி ரூபாய்.

மிக் -27 ரக போர் விமானம்:

மிக் -27 ரக போர் விமானம்:

அதே மாதம் 12-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் படைத்தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்ட விமானப்படையில் மிக் -27 ரக போர் விமானம், பொக்ரானை அடுத்த எடா கிராமத்தின் அருகே விழுந்து நொறுங்கியது. விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பி, ரூ 16.14 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த விமானம் முற்றிலுமாக நாசமானது.

ஹவாக் ரக போர் விமானங்கள் :

ஹவாக் ரக போர் விமானங்கள் :

பிப்ரவரி மாதம் 19-ம் தேதி பெங்களூரு அருகே உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சூரியகிரண் என்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. அப்போது ஹவாக் ரக போர் விமானங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று மோதியதில், ஒரு விமானி உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இரண்டு விமானங்களும் எரிந்து நாசமாகின. அந்த இரு விமானங்களும் தலா 170 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை.

மிக் 21 ரக பைசன் போர்:

மிக் 21 ரக பைசன் போர்:

அந்த மாதம் 27-ஆம் தேதி அன்று பாகிஸ்தான் விமானங்களை எதிர்கொண்டு தாக்கி விரட்டிய போது, தமிழக வீர ர் அபிநந்தன் இயக்கி மிக் 21 ரக பைசன் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்வெளி போரில் இந்தியா இழந்த அந்த விமானத்தின் விலை 10 கோடி ரூபாய்.

 எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர்:

எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர்:

பிப்ரவரி மாதத்தின் 27-ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் அருகே உள்ள காரன்ட்காலன் கிராமத்தின் மீது பறந்த போது விமானப்படையின் எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் ஒன்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த ஹெலிகாப்டரின் விலை 120 கோடி ரூபாய்.

மிக் -21 ரக போர் விமானம்:

மிக் -21 ரக போர் விமானம்:

மார்ச் மாதம் 14-ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் அருகே உள்ள நல் விமானப்படை தளத்தில் இருந்து மிக் -21 ரக போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டது. அந்த விமானம் பிகானீர் அருகே எந்திர கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. பாரசூட் மூலம் குதித்த தால் விமானி தப்பி விட விட, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த விமானம் முற்றிலுமாக சேதமடைந்தது.

மிக் -27  ரக போர் விமானம்:

மிக் -27 ரக போர் விமானம்:

மார்ச் மாதம் 31-ஆம் தேதி அன்று, இந்திய விமானப்படையின் மிக் -27 ரக விமானம் ஒன்று ராஜஸ்தானின் உடார்லி விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. ஜோத்பூர் அருகே சென்ற போது எந்திர கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியது. விமானி பாரசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த அந்த விமானத்தின் விலை 16.14 கோடி ரூபாய்.

ஏஎன்-32 ரக விமானம்:

ஏஎன்-32 ரக விமானம்:

ஏப்ரல், மே மாதங்களில் எந்த போர் விமானங்களை இழக்காத இந்திய விமானப்படை இந்த மாதம் 3-ஆம் தேதி மற்றொரு விமானத்தை இழந்துள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டில் இருந்து அருணாச்சலபிரதேசத்தின் மன்சுக்காவுக்கு சென்ற விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் அடர்ந்த வனப்பரப்பில் விழுந்து நொறுங்கியது. புறப்பட்ட 33 நிமிடங்களில் எல்லாம் விபத்தை சந்தித்த அந்த விமானத்தில் பயணித்த 13 பேர் கதி என்ன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மொத்த விமானங்கள்:

மொத்த விமானங்கள்:

1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை, 1935 ஆம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டின் இந்த நாள் வரை எதிர்கொண்ட விபத்துகளின் மொத்த எண்ணிக்கை 2173 என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
indian war plane technical issue causes accident : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X