இந்திய காமிக்ஸ் வார் அப்ளிகேஷனுடன் ஆகாஷ் டேப்லெட்!

கம்ப்யூட்டர், டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களின் அவசியம் வேலை பார்க்கும் இடம் என்று இல்லாமல் படிக்கும் இடத்திலும் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. புதிய அப்ளிக்கேஷன் வசதியுடன் வெளிவர இருக்கிறது ஆகாஷ்
டேப்லெட். இதில் இந்தியன் வார் காமிக்ஸ் அப்ளிக்கேஷன் வசதி கொடுக்கப்பட இருக்கிறது.
தொழில் நுட்ப மயமாக மாறி வரும் உலகில், சரித்திர நாயகர்கள் பற்றிய செய்திகளும், அவர்கள் நிகழ்த்திய போர் பற்றிய விவரங்களும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்திய போர் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்க ஓர் புதிய யுக்தி, ஆகாஷ் டேப்லட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தி ட்ரூ மராத்தா, ஃப்ரோசன் ஃப்யூரி, ஏ தில் மான்ஙே மோர், ப்ரேவ் ஹார்ட்ஸ் ஆஃப் மும்பை-26/11 போன்ற நிகழ்வுகளும் இதில் சேர்க்கப்பட உள்ளது. இந்த அப்ளிக்கேஷன் வசதியின் மூலம் இந்திய பாரதத்தில் ஏற்பட்ட போர்
பற்றிய வரலாறுகளை மாணவர்கள் மனதில் எளிதாக பதிவு செய்ய முடியும். இந்தியன் வார் காமிக்ஸ் அப்ளிக்கேஷன் வசதியை யூபிஸ்லேட்-7 டேப்லெட்டிலும் பெறலாம். இந்த வசதியை எளிதாக டவுன்லோடும் செய்யலாம். இதனால் மாணவர்கள் மனதில் மட்டும் அல்ல, அனைவரின் மனதிலும் சரித்திர நாயகர்கள் என்றும் நிலைத்திருப்பார்கள்.


Click it and Unblock the Notifications