UPI ஆப்ஸ் யூஸ் பண்ணுறீங்களா? அரசாங்கம் கொடுத்த எச்சரிக்கை.. கவனமாக யூஸ் பண்ணுங்க.. இல்லாட்டி சிக்கல்..
இந்தியா டிஜிட்டல் கட்டண முறைகளை ஏற்றுக்கொண்டதால், யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) ஆன்லைன் பரிவர்த்தனைகள் இப்போது இந்தியாவில் பெறுக துவங்கியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு UPI பேமெண்ட் சேவை அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதிகளவில் பயன்படுத்துவதனால் தானோ என்னவோ, இப்போது UPI பயனர்களுக்கு புதிய அபாயகரமான சிக்கல் எழுந்துள்ளது. இந்த ஆபத்து குறித்து இப்போது இந்திய அரசாங்கம் பல புதிய எச்சரிக்கை செய்திகளை வெளியிடத் துவங்கியுள்ளது. UPI ஆப்ஸ் அல்லது ஆன்லைன் பேங்கிங் சேவையை பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் இப்போது UPI சேவைக்கு மாறிவிட்டதனால், இந்த வசதி புதிய வடிவங்களில் நிதி மோசடிக்கான வழியையும் சந்திக்க துவங்கியுள்ளது. குறிப்பாக 'UPI ரீஃபண்ட்' (UPI refund) என்ற புதிய மோசடிகள் மூலம், மக்களை மோசடிக்காரர்கள் ஏமாற்றி பணம் திருடி வருகிறார்கள். இந்தியாவில் இப்போது இந்த UPI ரீஃபண்ட் மோசடி மூலம் பல லட்சம் பயனர்கள் பல லட்சம் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய மோசடி எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம். அதிகாரப்பூர்வமான UPI பரிவர்த்தனை எச்சரிக்கைகளைப் போலவே இருக்கும் மெசேஜ்கள் உங்கள் போனிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த மெசேஜ்கள் மக்களை நம்ப வைக்க மோசடி செய்பவர்களால் உருவாக்கப்பட்ட போலி மெசேஜ்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பார்ப்பதற்கு அசல் பரிவர்த்தனை மெசேஜ்களை போலவே பிரதிபலிக்கின்றன. யாரோ ஒருவர் உங்களுக்கு பணம் அனுப்பியது போல இந்த மெசேஜ் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மெசேஜ்ஜை தொடர்ந்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு மோசடிக்காரர்கள் அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு, தவறுதலாக பணத்தை உங்கள் கணக்கிற்கு அனுப்பியதாக பொய் கூறி, உங்களிடம் அந்த பணத்தை திரும்பதறுமாறு வலியுறுத்துவார்கள். உதரணமாக ரூ.1500 உங்கள் கணக்கிற்கு வந்தது போல ஒரு மெசேஜ் உங்கள் இன்பாக்சில் இருக்கும், ஆனால், உங்கள் கணக்கில் எந்தவித பணமும் வரவு வைக்கப்பட்டிருக்காது.
மோசடி செய்பவர்கள், மிகவும் அவசரமாக அந்த பணம் தேவைப்படுகிறது உடனே அதன் திரும்பி எங்களுக்கே அனுப்பிவிடுங்கள் என்று உங்களிடம் நாடகமாடி, உங்கள் UPI ஆப்ஸ் மூலம் பணத்தை மீண்டும் அனுப்ப சொல்லி நாடகமாடுவார்கள். எப்படியாவது உங்களை பணத்தை அனுப்ப வைக்கவேண்டிய செயல்களை அவர்கள் செய்து, உங்கள் கணக்கிலிருந்து பணத்தை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணம் பறிபோய்விடும்.
உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் எடுத்து பார்க்கும் பொழுது தான் உங்களுக்கு உண்மை என்ன என்பது புரியவரும். இப்படி உங்களுக்கு யாராவது அழைப்பு மூலம் தொடர்புகொண்டு, பணத்தை தவறுதலாக அனுப்பிவிட்டோம், மீண்டும் பணத்தை எங்களுக்கே செலுத்திவிடுங்கள் என்று கூறினால், உங்கள் வங்கி கணக்கின் ஸ்டேட்மென்ட்செக் செய்யாமல் எந்தவித பணபரிவர்தனைகளையும் செய்யாதீர்கள்.
உங்கள் UPI பயன்பாட்டைத் திறந்து Paytm, Google Pay அல்லது PhonePe போன்ற சேவைகளின் மூலம் உங்கள் கணக்கு இருப்பு மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைச் சரிபார்க்க ஒருபோதும் மறவாதீர்கள். இத்தகைய மோசடிகளை புகார் அளிக்க இந்திய உள்துறை அமைச்சகம் சக்ஷு போர்ட்டல் (Chakshu portal) மற்றும் 1930 இல் ஒரு பிரத்யேக சைபர் குற்ற வழக்கு உதவி எண்ணை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications