இந்திய ஐடி நிறுவன தலைவர்கள் குழந்தைகளை இப்படி தான் வளர்க்கின்றனர்!

" தமீரா போன் பயன்படுத்துவதை தடுத்து, அவரின் முழு ஆற்றலையும் புத்தகம் படிப்பதில் செலுத்தினோம். அது அவரின் கற்கும் திறன்களை வளர்ப்பதில் மிகமுக்கிய பங்காற்றியது" என்கிறார் குணால்.

|

மக்கள் அதிக நேரத்தையும் பணத்தையும் இணையதளத்தில் செலவிடவேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் இந்திய ஐடி தொழில்முனைவர்கள், குழந்தைகளை டிஜிட்டல் உலகிற்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு வழங்கும் மிகமுக்கிய அறிவுரை : 'கண்டிப்பாக ஒழுங்குபடுத்துதல்'

இந்திய ஐடி நிறுவன தலைவர்கள் குழந்தைகளை இப்படி தான் வளர்க்கின்றனர்!

ஸ்னாப்டீலின் இணை நிறுவனர் குணால் ஃபால், தனது மகள் தமீரா ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தடுக்கும் போது கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனில் வீடியோ பார்ப்பதற்கு அடிமையாகிப்போனார் தமீரா.

" தமீரா போன் பயன்படுத்துவதை தடுத்து, அவரின் முழு ஆற்றலையும் புத்தகம் படிப்பதில் செலுத்தினோம். அது அவரின் கற்கும் திறன்களை வளர்ப்பதில் மிகமுக்கிய பங்காற்றியது" என்கிறார் குணால். தற்போது 3 வயதாகும் தமீரா குடும்ப வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை மட்டுமே பார்ப்பதால் அவரின் டிஜிட்டல் நேரம் என்பது வெறும் சில நிமிடங்களே. தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நிறுவனங்களின் தலைவர்களிலேயே, அந்த தொழில்நுட்பத்தை தங்களின் தனிப்பட்ட வாழ்வில் பயன்படுத்துவதில் சற்று வித்தியாசமானவர் குணால்.

இந்திய ஐடி நிறுவன தலைவர்கள் குழந்தைகளை இப்படி தான் வளர்க்கின்றனர்!

ஒருமுறை ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிடம், உங்கள் குழந்தைகள் ஐ-பாட் பற்றி என்ன நினைக்கிறார்கள் என கேட்டதற்கு, அவர்கள் அதை பயன்படுத்தியதே இல்லை என கூறினார். "வீட்டில் எங்கள் குழந்தைகள் எவ்வளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும் என்பதை கட்டுபடுத்தி வைத்துள்ளோம்" என்கிறார் அவர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மிலிண்டா கேட்ஸ் இருவரும், எப்பது வீட்டில் தங்கள் குழந்தைகள் கைப்பேசி அல்லது இதர கருவிகளை பயன்படுத்த வேண்டும் என கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்தியாவில், பெரும்பாலான பெற்றோர் தற்போது தங்களின் குழந்தைகள் ஸ்மார்ட்போனில் மூழ்கி தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலும், அதை பயன்படுத்த தடைவிதித்துள்ளனர்.

மொபிகுவிக் இணை நிறுவனரான உபாசனா டாகுவின் 1.3 வயதுடைய குழந்தை, வாரத்திற்கு 30 நிமிடத்திற்கும் குறைவான நேரமே குழந்தைகளுக்கு தகுந்த வீடியோக்களை யூடியூப் அல்லது தொலைக்காட்சியில் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. " குழந்தைகளிடம் தங்களின் கைபேசியை கொடுத்து, நீண்ட நேரம் வீடியோக்கள் பார்க்க அனுமதிக்கும் பெற்றோர்களை பார்த்தாலே வெறுப்பு வரும். ஏனெனில் சிறு வயதிலேயே இது போன்ற கருவிகளை பயன்படுத்துவது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்" என்கிறார் உபாசனா.

இந்திய ஐடி நிறுவன தலைவர்கள் குழந்தைகளை இப்படி தான் வளர்க்கின்றனர்!

குழந்தைகள் டிஜிட்டல் திரையை பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், கவனக்குறைவு தொடர்பான கோளாறுகள் ஏற்படாதவாறு தடுக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் பற்றி இளம் வயதிலேயே தெரிந்துகொள்ளவதன் மூலம் குழந்தைகள், அறிவு வளர்ச்சியில் சுணக்கம், கவனக்குறைவு, உடல்பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் மும்பையை சேர்ந்த மனநல ஆலோசகர் தானு சாக்ஸி கூறுகையில், குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக 10-14 வயதுவரை உள்ள பதின்ம வயது குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் தான் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்கிறார்.

"பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து பேசி எப்படி டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, தங்களின் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம். அதேநேரம் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருந்து, தாங்கள் கருவிகளை பயன்படுத்தும் நேரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் "என்கிறார் சாக்ஸி.

குவிக்கில்வர் நிறுவனத்தின் இணைநிறுவனர் பிரதாப் கூறுகையில், "என் குழந்தைகள் டிஜிட்டல் உலகில் பிறந்துள்ளனர். அவர்களின் பாதையில், டிஜிட்டலாகவே உறங்குகின்றனர், சாப்பிடுகின்றர், சுவாசிக்கின்றனர்" என்கிறார். இவரின் குழந்தைகள் முறையே 16 மற்றும் 8 வயதுடையவர்கள். இவரின் பெரிய மகன், தானாகவே சமூகவலைதளங்களை பயன்படுத்தும் நேரத்தை சரியாக மேலாண்மை செய்து, படிப்பு மற்ற்றும் விளையாட்டில் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறார்.

இந்திய ஐடி நிறுவன தலைவர்கள் குழந்தைகளை இப்படி தான் வளர்க்கின்றனர்!

டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதற்கு மாற்றாக, சிறுவயதில் இருந்தே குழந்தைகளை புத்ததம் படிக்க பெற்றோர்கள் ஊக்குவிப்பதன் மூலம் , அவர்களின் அறிவு மற்றும் கவனத்தை ஒருமுகப்படுத்துவதை மேம்படுத்தலாம். அதே நேரம் குழந்தைகள் சோட்டா பீம் அல்லது பெப்பா பிக் போன்ற வீடியோக்களை பார்ப்பதால், அதற்கு அடிமையாகி, அதிக கோபப்படுகின்றனர். அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப புத்தகம் அல்லது விளையாட்டு பொம்மைகள் உதவும் என்கிறார் தானு.
Best Mobiles in India

English summary
Indian tech leaders limiting gadgets usage for their kids: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X