Home
News

ஸ்டூடெண்ட்ஸ் மத்தியில் சூப்பர் ஹிட்.. Wings.. இந்த பெயரை ஞாபகம் வச்சிக்கோங்க.. கனவு விலையில் 4 SUPER லேப்டாப்!

விங்ஸ் (Wings) என்கிற பெயரை நன்றாக நினைவில் வைத்து கொள்ளவும். ஏனென்றால் இந்திய தொழில்நுட்ப பிராண்டான (Indian tech brand) விங்ஸ் தனது முதல் லேப்டாப் சீரீஸின் கீழ் 4 புதிய லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் வில் அறிமுகப்படுத்தி உள்ளது.

விங்ஸ் நிறுவனத்தின் 4 புதிய லேப்டாப்களின் விலை நிர்ணயத்தை பார்க்கும் போது, அவைகள் அனைத்துமே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி பட்ஜெட் விலையில் நல்ல லேப்டாப்பை தேடும் அனைவரின் மத்தியிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது போல் தெரிகிறது.

Wings.. கனவு விலையில் 4 SUPER லேப்டாப்!

விங்ஸ் நுவோபுக் லேப்டாப் சீரீஸ் (Wings Nuvobook Laptop Series) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்கள் இன்டெல் ப்ராசஸர்கள் (Intel Processor) மூலம் இயக்கப்படுகின்றன. நுவோபுக் சீரீஸின்கீழ் எஸ்1 (S1), எஸ்2 (S2), வி1 (V1) மற்றும் ப்ரோ (Pro) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜெனெரல் ப்ரொடெக்டிவிட்டி (General productivity), ப்ரவுஸிங் (Browsing), எண்டர்டெயின்மெண்ட் (Entertainment) முதல் கோடிங் (Coding), டிசைன் (Design) மற்றும் கேமிங் (Gaming) வரையிலாக.. பல்வேறு வகையான பயனர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 4 லேப்டாப்களின் விலை நிர்ணயம் என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

விங்ஸ் நுவோபுக் லேப்டாப் சீரிஸின் விலை விவரங்கள்: விங்ஸ் நுவோபுக் எஸ்1 - இன்டெல் கோர் ஐ3 + 8ஜிபி ரேம் + 256ஜிபி எஸ்எஸ்டி மாடலின் விலை ரூ.27,990 ஆகும். விங்ஸ் நுவோபுக் எஸ்2 - இன்டெல் கோர் ஐ3 + 8ஜிபி ரேம் + 512ஜிபி எஸ்எஸ்டி மாடலின் விலை ரூ.29,990 ஆகும்

விங்ஸ் நுவோபுக் வி1 - இன்டெல் கோர் ஐ5 + 8ஜிபி ரேம் + 512ஜிபி எஸ்எஸ்டி மாடலின் விலை ரூ.34,990 ஆகும் மற்றும் கடைசியாக உள்ள விங்ஸ் நுவோபுக் ப்ரோ - இன்டெல் கோர் ஐ7 + 16ஜிபி ரேம் + 512ஜிபி எஸ்எஸ்டி மாடலின் விலை ரூ.46,990 ஆகும்.

விங்ஸ் நுவோபுக் சீரீஸின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4 லேப்டாப் மாடல்களுமே ( நுவோபுக் எஸ்1, நுவோபுக் எஸ்2, நுவோபுக் வி1 மற்றும் நுவோபுக் ப்ரோ) பிரபல இகாமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படும் என்று விங்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

விங்ஸ் நுவோபுக் லேப்டாப் சீரீஸின் அம்சங்கள்: பேஸிக் மாடல்களான, அதாவது எஸ்1, எஸ்2, வி1 மாடல்கள் ஆனது முதல் முறையாக லேப்டாப்களை வாங்குபவர்கள், பள்ளி / கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பணிபுரியும் நிபுணர்களின் (young working professionals) தேவைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.

ப்ரோ மாடலனது விரிவான கன்டென்ட் உருவாக்கம், என்ட்ரி லெவல் கேமிங் போன்றவற்றுக்கு ஏற்றவாறு சற்றே அதிக பிரீமியம் அம்சங்களை பேக் செய்கிறது. அதுமட்டுமின்றி, இதே பிரிவின் கீழ், இதேபோல் கட்டமைக்கப்பட்ட லேப்டாப் மாடல்களுடன் ஒப்பிடும்போது நுவோபுக் ப்ரோ மாடலானது ஒப்பீட்டளவில் மலிவானதாகவும் உள்ளது.

அனைத்து லேப்டாப் மாடல்களுமே மிகவும் மெல்லிய மற்றும் இலகுரக அலுமினிய அலாய் மெட்டல் பாடி (Aluminum alloy metal body) உடனான ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. எஸ்1, எஸ்2, வி1 மாடல்கள் 15-இன்ச் டிஸ்பிளேவுடனும், ப்ரோ மாடல் 14-இன்ச் டிஸ்பிளேவுடனும் வருகிறது.

அனைத்து மாடல்களிலும் 4825எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் 10 மணிநேரம் வரையிலான லைஃப் டைமை (10 Hours Lifetime) வழங்குகின்றன. இதன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (65W Fast Charging Support) ஆனது 1 மணிநேரத்தில் 60% வரை சார்ஜ் செய்யும்திறனை கொண்டுள்ளது.

ஆடியோவை பொறுத்தவரை, விங்ஸ் நிறுவனத்தின் சிக்னேச்சர் மேக்ஸ் ஆடியோவுடன் (Wings Signature Maxx audio) உள்ளமைக்கப்பட்ட குவாட் ஸ்பீக்கர்களுடன் (Built-in quad speakers) வருகின்றன. இது அனைத்து வகையான பொழுதுபோக்குத் தேவைகளுக்கும் உயர்தர ஒலியை (high quality sound) உறுதி செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian tech brand Wings launched its first laptop series Nuvobook in India Price Starts At Rs 27990
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X