Home
News

ஸ்பேஸ் எக்ஸ் ஹைபர்லூப் போட்டி: கலிபோர்னியா இறுதிச்சுற்றில் ஐஐடி மெட்ராஸ்!

சிங்கிள் ரேஸ் டிராக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ள, இக்குழு ஒரு நிலையான உறுதிப்படுத்தல் அமைப்பையும் இதில் இணைத்துள்ளது.

புகழ்பெற்ற விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், எதிர்காலத்தில் பூமியிலும்,பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியேயும் பயன்படுத்தப்படுத்தக்கூடிய போக்குவரத்து முறைகள் குறித்து வழிநடத்திவருகிறது. அந்நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட அப்படியொறு கருத்துரு தான் ஹைபர்லூப். அதன் செயல்பாட்டு முன்மாதிரிகளை உருவாக்க உதவிடும் வகையில், அந்நிறுவனம் "ஹைபர்லூப் பாஃட் போட்டி" என்ற உலகளாவிய வருடாந்திர போட்டியை நடத்துகிறது. அதில் அற்புதமான பகுதி என்னவெனில், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் ஹைபர்லூப் போட்டி: இறுதிச்சுற்றில் ஐஐடி மெட்ராஸ்!

இந்த போட்டியில் மொத்தம் 1500 அணிகள், "பாஃட்" அல்லது ஹைப்பர்லூப் கருத்துருக்கான பயண செய்யும் கலனை உருவாக்க பங்கேற்றன. இங்கு இலக்கு மிகவும் எளிதானது. உங்கள் பாஃட் அதிகபட்ச வேகத்தை அடைய வேண்டும் மற்றும் ஒப்பீட்டளவில் எதிர் முடுக்கமும் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்களின் படைப்பாற்றலுக்கு வரம்பு வைக்க கூடாது என்பதற்காக வேறு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை.

"அவிஸ்கர் ஹைபர்லூப்"

இந்த ஆண்டிற்கான போட்டியில், இந்தியாவில் இருந்து "அவிஸ்கர் ஹைபர்லூப்"(Avishkar Hyperloop) என்ற அணி இறுதிப்போட்டிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள டாப் 21 அணிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாக இருப்பதால், இந்த அணி ஜூலை மாதம் கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சென்று தங்களது பாஃடை அங்குள்ள ஹைபர்லூப் டனலில் பரிசோதிக்கவுள்ளனர்.

"அவிஸ்கர் ஹைபர்லூப்" அணி

ஐஐடி மெட்ராஸின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 உறுப்பினர்களை கொண்ட இந்த "அவிஸ்கர் ஹைபர்லூப்" அணி, ஆசியாவில் இருந்து இந்த இறுதிப்போட்டிற்கு தேர்வான ஒரே அணியாகும். அவர்களின் இறுதிப்போட்டுக்காக, தாங்கள் எலக்ட்ரிக் பவர்ட்ரைன்-க்காக உருவாக்கப்பட்ட லினியர் இன்டக்சன் மோட்டாரை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த அமைப்பானது ஒரு உயர்-சக்தி பேட்டரி பேக் மூலம் துணைபுரிகிறது. மேலும் இந்த அணி மணிக்கு 400 கிலோமீட்டர்க்கும் அதிகமான வேகத்தை அடைய திட்டமிட்டுள்ளது.எதிர்முடுக்கத்திற்கு ஏர் பிரேக்குகளை இந்த அணி பயன்படுத்தவுள்ளது.

ஹைப்பர்லூப் சுரங்கப்பாதைக்குள் தங்களது பாஃடை இயக்கி நிரூபிக்க வேண்டும்

ஹைப்பர்லூப் சுரங்கப்பாதைக்குள் தங்களது பாஃடை இயக்கி நிரூபிக்க வேண்டும்

இந்த அணியால் உருவாக்கப்பட்ட பாஃட் நான்கு சக்கரங்களில் சிங்கிள் ரேஸ் டிரேக்கில் இயங்குகிறது. சிங்கிள் ரேஸ் டிராக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ள, இக்குழு ஒரு நிலையான உறுதிப்படுத்தல் அமைப்பையும் இதில் இணைத்துள்ளது. இறுதிப்போட்டியில், இந்த அணி 1 மைல் நீளமுள்ள வெற்றிட ஹைப்பர்லூப் சுரங்கப்பாதைக்குள் தங்களது பாஃடை இயக்கி நிரூபிக்க வேண்டும் மற்றும் இந்த நீளத்தில் எதிர் முடுக்கத்தையும் வெற்றிகரமாக நீரூபிக்க வேண்டும்.

பரிசோதித்து புதுப்பிக்க அனுமதிக்கப்படும்

பரிசோதித்து புதுப்பிக்க அனுமதிக்கப்படும்

இதற்காக இறுதி போட்டியாளர்கள் அனைவரும் இறுதி போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தங்களது படைப்பை பரிசோதித்து புதுப்பிக்க அனுமதிக்கப்படும்.

ரூ. 1 கோடி ரூபாய்

ரூ. 1 கோடி ரூபாய்

சுவாரஸ்யமாக மற்ற பெரும்பாலான அணிகள் இறுதிப் போட்டிகளில் மீண்டும் மீண்டும் போட்டியிடும் நிலையில், இந்தியாவில் இருந்து முதல்முறையாக இந்த அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இப்போட்டிக்கான இந்த அணியின் மொத்த பட்ஜெட் ரூ. 1 கோடி ரூபாய் வரை இருப்பதால், பெரும்பாலும் உள்நாட்டு நிதியுதவி, முன்னாள் மாணவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதிதிரட்டுதல் போன்றவற்றை செய்கின்றனர்.

 வெற்றிபெற நம் இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்

வெற்றிபெற நம் இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்

இறுதிப்போட்டிக்கான தேதி நெருங்கிவரும் நிலையில், இறுதிப்போட்டியில் வெற்றிபெற நம் இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Best Mobiles in India

English summary
Indian Team From IIT-Madras Reaches Finals For SpaceX's Hyperloop Pod Competition: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X