இயற்கைக்கு உகந்த அதிக திறன் கொண்ட ராக்கெட் ஃபியூயல் தயார்.. இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் அசத்தல்..
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான 'பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் இப்போது புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான, சுற்றுச்சூழலுக்கு உகந்த உந்துவிசை அமைப்பை வெற்றிகரமாக இந்த நிறுவனம் தற்போது சோதித்துள்ளது. இது மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், ராக்கெட் எரிபொருள் செயல்திறனில் பெரும் முன்னேற்றத்தையும் வழங்குகிறது என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

ஒரு ராக்கெட் ஏவுதலுக்கு எவ்வளவு செலவாகிறது?
இந்தியாவில் ஒரு ராக்கெட் ஏவுதல் திட்டத்திற்கு மொத்தமாக சுமார் ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரையில் செலவாகிறது. இப்போது, விண்வெளி பயணம் மற்றும் ராக்கெட் ஏவுதலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அதன் ஒரு ராக்கெட் ஏவுதலுக்கு சுமார் 67 மில்லியன் டாலர் செலவு செய்கிறது. ராக்கெட் ஏவுதலில் நமக்கு தெரியாத பல சிக்கல்கள் இருக்கிறது, அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் பாதுகாப்பு. ராக்கெட் ஏவுதல் ஒரு வகையான நச்சு பொருளை அதன் ஏவுதல் நேரத்தில் வெளிப்படுத்துகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

சுற்றுச்சூழலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் நச்சு
அறியாதவர்களுக்கு, செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு உயர்த்தும் திரஸ்டர்கள் (thrusters), சுற்றுச்சூழலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ராசைன் எனப்படும் நச்சு கலவையில் இயங்குகின்றன. இவை, பாதுகாப்பாக சேமித்து வைத்து கையாள்வது மிகவும் கடினமானது என்ற நற்பெயரையும் கொண்டுள்ளது. இருப்பினும், பெல்லாட்ரிக்ஸின் கிரீன் திரஸ்டர் அமைப்பு ஒன்று உருவாக்கியுள்ளது. இந்த கிரீன் திரஸ்டர் அமைப்பு நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்லபடுகிறது.

கிரீன் திரஸ்டர் அமைப்பு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?
முந்தைய நார்மல் திரஸ்டர் அமைப்புடன் ஒப்பிடுகையில், இந்த கிரீன் திரஸ்டர் அமைப்பு ஏரளமான மாற்றங்களை காண்பித்துள்ளது. குறிப்பாக, இவை கணிசமாக குறைந்த அளவு நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது மற்றும் சேமிப்பதற்கும் கையாளுவதற்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. இந்த கிரீன் திரஸ்டர்கள், செயற்கைக்கோள் ஏவுதலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, இவை மனித விண்வெளிப் பயணங்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் சிறப்பாக இருக்கிறது என்று ஸ்டார்ட்அப் நிறுவனம் கூறியுள்ளது.

உலகளாவிய விண்வெளிப் பந்தயத்தில் களமிறங்கிய ஸ்டார்ட் அப்
இந்த ஸ்டார்ட்அப் அடுத்த ஆண்டுக்குள் உந்துசக்தியை வணிகமயமாக்கி அதை ஒரு தயாரிப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளது. உலகளாவிய விண்வெளிப் பந்தயத்தில் தங்கள் இலக்குகளை அடைய VC நிதிகளை எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியா பார்க்கும் புதிய கால விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களில் பெல்லாட்ரிக்ஸ் நிறுவனமும் இணைகிறது. ஐஐஎஸ்சியில் நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் அதன் ப்ரீ-சீரிஸ் ஏ நிதியுதவியை ஜூன் 2019 இல் ஐடிஎஃப்சி பரம்பரா மூலம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் கிரீன் இரசாயனங்களை நோக்கி வேகமாக நகர்கிறது
இந்திய அறிவியல் கழகத்தின் தலைமை ஆராய்ச்சி விஞ்ஞானி உந்துவிப்பு பேராசிரியர் சார்லி உம்மன் ஒரு அறிக்கையில் கூறுகையில், "உலகம் கிரீன் இரசாயனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், நமது நாட்டிற்கு சமீபத்திய முன்னேற்றங்களுக்கு ஏற்ப பசுமை உந்துதலுக்கான பணி மிகவும் முக்கியமானது." என்று கூறியுள்ளார். இயற்கைக்கு பாதிப்பு இல்லாத பசுமை எரிபொருள், மின்சார வாகனங்கள் போன்ற பாதுகாப்பான பொருள்களை பயன்படுத்த உலக நாடுகள் முடிவெடுத்துள்ளது.

எதிர்கால இந்தியாவிற்கான ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு
அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரோ தனது எதிர்கால பயணங்களில் கிரீன் எரிபொருளைப் பயன்படுத்துவதையும், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் சமீபத்தில் பரிசோதித்த பசுமை எரிபொருள் மிகவும் நம்பிக்கைக்குரியது, ஏனெனில் இது தீங்கற்ற கையாளுதல் வசதிகள் மற்றும் ஹைட்ராசைன் போன்ற நச்சு இரசாயனங்களை விட அதிக செயல்திறன் இரண்டையும் வழங்குகிறது." என்று கூறியுள்ளனர். இது உண்மையில், எதிர்கால இந்தியாவிற்கான ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications