இந்திய ஸ்மார்ட்போன்கள், இந்தாண்டு மாற்றங்கள்.!!

By Meganathan
|

2015 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதுமை புகுத்தப்பட்டிருந்தது. முன்பு இல்லாத பல அம்சங்கள் வழங்கப்பட்டதோடு அவை அனைத்தும் விலை குறைவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய ஆண்டில் அடியெடுத்திருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் எவ்வாறான மாற்றங்கள் இருக்கும் என்பதை சந்தை வல்லுநர்கள் கனித்திருக்கின்றனர்.

அவ்வாறு 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த மாற்றங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.

2 கே மற்றும் 4கே

2 கே மற்றும் 4கே

2015 ஆம் ஆண்டு வெளியானதில் பெரும்பாலான கருவிகளில் 1080p ஃபுல் எச்டி திரை வழங்கப்பட்டிருந்தது. இதே போன்று 1080p ரெசல்யூஷன் கொண்ட தொலைகாட்சிகளும் சாதாரண ஒன்றாகிவிட்டது. சில பெரிய மாடல் ஸ்மார்ட்போன்களில் குவாட் எச்டி மற்றும் 2கே ஸ்கிரீன்களும் வழங்கப்பட்டிருந்தது. இதே வழக்கம் இந்த ஆண்டு தொடர்வதோடு இன்னும் வெளியாக இருக்கும் கருவிகளில் அதிக ரெசல்யூஷன் கொண்ட திரை வழங்கப்படலாம்.

ரேம்

ரேம்

ஸ்மார்ட்போன் சீராக வேலை செய்ய மிகவும் அத்தியாவசிய அம்சமாக இருப்பது அதன் ரேம் மட்டுமே. அதிகப்படியான பயன்பாடுகளின் போது செயலிகளை வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு இந்த பிரச்சனையானது 3 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வந்த பின் குறைந்தது. இதே போன்று இந்த ஆண்டு பல கருவிகளில் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

கடந்த ஆண்டு கைரேகை ஸ்கேனர் கொண்ட கருவிகள் பெரும்பாலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுவே கடந்த ஆண்டின் கடைசி மாதத்தில் பட்ஜெட் விலையில் கைரேகை ஸ்கேனர் கொண்ட கருவிகள் வெளியாகின. இந்த ஆண்டு ரூ.10,000 மற்றும் அதற்கும் குறைவான விலையில் கைரேகை அம்சம் கொண்ட கருவிகள் வெளியாகலாம்.

பெசல்

பெசல்

திரையை சுற்றி இருக்கும் கருப்பு பார்டர்கள் தான் பெசல் என அழைக்கப்படுகின்றன. வழக்கமாக குறைந்த விலை கொண்ட கருவிகளில் பெசல் சற்றே தடிமனாக வழங்கப்பட்டு வந்தது. இந்த வழக்கம் மெல்ல மாற்றப்பட்டு இந்த ஆண்டு வெளியாகும் கருவிகளில் மிகவும் தட்டையான பெசல் வழங்கப்படலாம்.

மெமரி

மெமரி

ஸ்மார்ட்போன்களின் மெமரியை பொருத்த வரை ஒவ்வொரு ஆண்டும் இதன் விலை குறைந்து கொண்டே தான் வருகின்றது. அந்த வரிசையில் இந்த ஆண்டு வெளியாகும் கருவிகளில் அடிப்படை மெமரி சுமார் 32 ஜிபி வரை வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

யுஎஸ்பி டைப்-சி

யுஎஸ்பி டைப்-சி

கடந்த ஆண்டு சில கருவிகளில் மட்டும் வழங்கப்பட்ட டைப்-சி சார்ஜர் போர்ட் இந்த ஆண்டு இன்னும் பல கருவிகளில் வழங்கப்படலாம்.

கேமரா

கேமரா

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கேமராக்களில் புதிய அம்சங்களை வழங்கினர். இதே போக்கு இந்த ஆண்டு மேலும் அதிகரிப்பதோடு கேமராக்களில் அதிக அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படலாம். இதோடு இவை அனைத்தும் ரூ.20,000 பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது.

சார்ஜிங்

சார்ஜிங்

கடந்த ஆண்டு சில விலை உயர்ந்த கருவிகளில் வேகமாக சார்ஜ் ஆகும் பிரத்யேக அம்சசங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சார்ஜிங் சார்ந்த அம்சங்களில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்படுவதோடு பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Indian smartphones will see more change in 2016. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X