இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..

|

இந்திய விஞ்ஞானிகள் 'கடல் தேவதை' என்ற புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த தாவரத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலக்கூறு கட்டமைப்புகளைக் கண்டு வியந்துவிட்டனர். அப்படி என்ன புதுமையான விஷயத்தை விஞ்ஞானிகள் இந்த தாவரத்தில் கண்டனர் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

கடல் தேவதை என்று அழைக்கப்படும் புதிய தாவரம்

கடல் தேவதை என்று அழைக்கப்படும் புதிய தாவரம்

உண்மையைச் சொல்லப் போனால் கடல் தேவதை என்று அழைக்கப்படும் இந்த புதிய தாவர வகை கடந்த 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்கான பயணத்தின் போது உயிரியலாளர்கள் விசித்திரமான கடல் பச்சை ஆல்கேவைக் கண்டறிந்தனர். இதன் தோற்றம் தான், விஞ்ஞானிகளை முதலில் ஈர்த்துள்ளது. பின்னர், இதை ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

தாவரத்தின் இனத்தை அடையாளம் காண இரண்டு ஆண்டுகளா?

தாவரத்தின் இனத்தை அடையாளம் காண இரண்டு ஆண்டுகளா?

இந்த புதிய தாவரத்தின் இனத்தை அடையாளம் காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான சவாலாக அமைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரத்தின் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், இந்த தாவரத்தின் இனம் இது தான் என்று முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவே விஞ்ஞானிகளுக்குக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை.,கடவுள் இருக்கான் குமாரு- ஆன்லைனில் பழைய ஃப்ரிட்ஜ் வாங்கிய நபர்: திறந்து பார்த்தா?ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை.,கடவுள் இருக்கான் குமாரு- ஆன்லைனில் பழைய ஃப்ரிட்ஜ் வாங்கிய நபர்: திறந்து பார்த்தா?

அசிடபுலேரியா ஜலகன்யாகே என்று பெயரிட்ட விஞ்ஞானிகள்

அசிடபுலேரியா ஜலகன்யாகே என்று பெயரிட்ட விஞ்ஞானிகள்

ஏறக்குறைய நான்கு தசாப்தங்களில் தீவுகளில் உள்ள பாசி இனங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் விசித்திரமான புதிய கண்டுபிடிப்பு இது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த தாவரத்திற்கு அசிடபுலேரியா ஜலகன்யாகே (Acetabularia jalakanyakae) என்று பெயரிட்டுள்ளனர். இந்த பெயருக்கான காரணம் குறித்து பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

மெர்மெய்ட் (mermaid)' என்ற பெயருக்கான அர்த்தம் என்ன?

மெர்மெய்ட் (mermaid)' என்ற பெயருக்கான அர்த்தம் என்ன?

சமஸ்கிருதத்தில் ஜலகன்யகா என்றால் 'மெர்மெய்ட் (mermaid)' என்று அர்த்தமாம். அதாவது, தமிழில் இதற்குக் கடல்களின் தெய்வம் அல்லது கடல் தேவதை என்று பொருள். டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் பெயரிடப்பட்ட விசித்திரக் கதையில் லிட்டில் மெர்மெய்ட் என்ற கற்பனையான கதாபாத்திரத்தோடு இந்த தாவரத்தை இணைத்துப் பார்த்ததாகப் பெயரிட்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சொகுசு விமானம் போல் சொகுசு ரயில் ரெடி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் களமிறங்கும் இந்திய நகரம் இதுதான்.!சொகுசு விமானம் போல் சொகுசு ரயில் ரெடி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் களமிறங்கும் இந்திய நகரம் இதுதான்.!

தேவதையின் குடைகள் போல தோற்றமளிக்கும் தாவரம்

தேவதையின் குடைகள் போல தோற்றமளிக்கும் தாவரம்

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாவரத்தின் இனங்கள் விஞ்ஞானிகளை மிகவும் பிரமிக்க வைத்துள்ளது. இது ஒரு தேவதையின் குடைகள் போலச் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட தொப்பிகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் பெலிக்ஸ் பாஸ்ட் கூறியுள்ளார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த ஆலை கருவுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட கலத்தால் ஆனது.

ஒரே செல் உடன் கூடிய ஒற்றை நியூக்ளியஸ்

ஒரே செல் உடன் கூடிய ஒற்றை நியூக்ளியஸ்

அதாவது இதன் மூலக்கூர் கட்டமைப்புகளில் ஒரு பிரமாண்டமான ஒரே செல் உடன் கூடிய ஒற்றை நியூக்ளியஸ் அமைப்பைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாவரத்தின் இனத்தை அடையாளம் காண விஞ்ஞானிகள் 18 மாதங்களுக்கும் மேலாகத் தாவரத்தின் டிஎன்ஏவை வரிசைப்படுத்தி ஆய்வகத்தில் உள்ள மற்ற தாவரங்களுடன் அதன் வடிவத்தை ஒப்பிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கல.! இவ்வளவு குறைவான மலிவு விலையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கல.! இவ்வளவு குறைவான மலிவு விலையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அருமையான கடல் வளம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அருமையான கடல் வளம்

இந்த கண்டுபிடிப்பை விவரிக்கும் ஒரு கட்டுரை இந்திய ஜர்னல் ஆஃப் ஜியோ-மரைன் சயின்சஸ் இதழில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உலகில் கடைசியாக மீதமுள்ள ஆரோக்கியமான பவளப்பாறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாறைகள் ஆல்கேவின் பன்முகத்தன்மை உட்படப் பல உயிரினங்களை ஆதரிக்கின்றன.

கடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.. இது ஆபத்தா?

கடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.. இது ஆபத்தா?

இருப்பினும், அதிகரித்து வரும் கடல் நீர் வெப்பநிலை காரணமாகப் பெருங்கடல்களின் இயல்புத் தன்மை மாறி, அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் கடல் வளம் சீரழியும் நிலை உருவாகிவருவது மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடல் நீரின் ஆக்ஸிஜன் செறிவுத் தன்மை என்ன ஆனது?

கடல் நீரின் ஆக்ஸிஜன் செறிவுத் தன்மை என்ன ஆனது?

உயரும் கடல் நீரின் வெப்பநிலை காரணத்தினால், நீரில் உள்ள ஆக்ஸிஜணின் செறிவுத் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் கடலில் உயிர் வாழும் அனைத்து இனங்கள் உட்பட ஆக்ஸிஜனை நம்பியிருக்கும் அனைத்து உயிரினங்களையும் இது ஆபத்தான முறையில் பாதிக்கவிருக்கிறது என்று டாக்டர் பாஸ்ட் கூறியுள்ளார். மக்கள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றும் அளிக்காமல் இருப்பதன் மூலம் இந்த சிக்கல்களில் இருந்து பூமியைக் காப்பாற்ற இயலும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian Scientists Discovered New Mermaid Plant Species From Andamans Archipelago : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X