பார்வையற்றோர் எளிதாக படிக்க உதவும் தரமான சாதனத்தை கண்டுபிடித்து இளைஞர் சாதனை.!
நம்மில் பெரும்பாலோர் கண்களால் பார்க்க முடியும் அளவுக்கு பாக்கியம் பெற்றிருக்கிறோம், ஆனால் சிலர் பகுதியாக அல்லது முற்றிலும் பார்வையற்றோராக உள்ளனர்.
நம்மில் பெரும்பாலோர் கண்களால் பார்க்க முடியும் அளவுக்கு பாக்கியம் பெற்றிருக்கிறோம், ஆனால் சிலர் பகுதியாக அல்லது முற்றிலும் பார்வையற்றோராக உள்ளனர். பார்வையற்றோர் எளிதாக படிக்க உதவியாக பிரெய்லி முறை 1824 இல் லூயிஸ் பிரெய்லி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பிரெய்லி என்பது பார்வையற்றோரால் பயன்படுத்தப்படும் எழுத்து முறையாகும். இருப்பினும் இந்த முறையானது 21 ஆம் நூற்றாண்டிலும் மொழி கற்றல், இயலாமை மற்றும் அதிக விலையுள்ள பிரெய்லி புத்தகங்கள், அனைத்து புத்தகங்களும் பிரெய்லி-ல் கிடைக்கப்பெறாதது போன்ற கணிசமான குறைபாடுகளை கொண்டுள்ளது.

பார்வையற்றோருக்கு விஷயங்களை எளிதாக்குவதற்காக, 23 வயதான ரூபம் ஷர்மா பார்வை குறைபாடுள்ள சமுதாயத்திற்கான வாசிப்பு வழிமுறைகளை புரட்சிகரமாக்குவதற்கான தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியை கண்டுபிடித்துள்ளார். அவரது தயாரிப்பான 'மனோவியூ' (Manovue), இந்த உலகை பார்வையற்றோர் எளிதில் அணுகும் வகையில், அணிபவரின் சுற்றுப்புறங்களில் உள்ள எழுத்துக்களை ஸ்கேன் செய்யும் டிஜிட்டல் கையுறை ஆகும்.
நம்முடன் நடைபெற்ற சிறப்பு உரையாடலில், எப்படி தனது கண்டுபிடிப்பு யோசனை என்ற நிலையில் இருந்து மலிவுவிலை பொருளாக மாறியது என விரிவாக விளக்குகிறார் ரூபம் ஷர்மா.

எப்படி இது துவங்கப்பட்டது?
2015 ல் 30 நிமிடங்களுக்கு கண்களை கட்டிக்கொண்டிருந்தது மற்றும் அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளிக்கு சென்றதன் மூலம், பார்வையற்றோர் எந்த விதமான உதவியும் இன்றி இந்த உலகில் வாழ்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை உணர்ந்தார் ரூபம். பிரெய்லி முறை கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் 1% சமூகம் கூட பிரெய்லி கல்வியறிவை பெற்றிருக்கவில்லை.

ரூபம்
" வாசிப்பு மற்றும் எழுதும் வழக்கம் வந்து நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும்,துரதிருஷ்டவசமாக பிரெய்லி முறையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே படைப்புகள் உள்ளன. இதன் காரணமாக பார்வையற்றோர் சமூகம் மிகவும் குறைவாகவே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க, இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு அவசர தேவை இருப்பதை நானும், எனது குழுவும் உணர்ந்தோம் " என்கிறார் ரூபம்.

"மனோவியூ" என்றால் என்ன?
மனோவியூ உலகின் முதல் நுண்ணறிவுள்ள அணியக்கூடிய மெய்நிகர் உதவியாளர். மனோவியூ என்ற வார்த்தை இரண்டு சொற்களின் கலவையாக பெறப்படுகிறது. மனோ (Mano) என்பது ஸ்பானிஷ் மொழியில் கை என்பதை குறிக்கிறது மற்றும் வியூ(Vue) என்ற பிரெஞ்சு வார்த்தை பார்வையை குறிக்கிறது. பயனர்கள் மனோவியூ-ஐ தங்கள் கைகளில் அணிந்துகொண்டு வெறுமனே எந்தவொரு அச்சிடப்பட்ட எழுத்துக்களை நோக்கி விரலை சுட்டிக்காட்டினாலும், அங்கு என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை உரத்த குரலில் அக்கருவி கூறுகிறது. 200 ஆண்டுகால பிரெய்லி மொழிக்கு மாற்றாக வந்துள்ள இந்த மனோவியூ என்ற மலிவுவிலை தொழில்நுட்பம், பார்வை குறைபாடுள்ள சமூகத்திற்கு வேலைவாய்ப்புத்திறன், வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரம் ஆகியவற்றை வழங்கவல்லது.

மனோவியூ மூலம் யாருக்கெல்லாம் நன்மை?
மனோவியூ தொழில்நுட்பம் படிப்பறிவு இல்லாதோர் அல்லது டிஸ்லெக்ஸியா உள்ளோர், இரண்டாவது மொழி கற்போர், மொழிபெயர்ப்பு தேவைப்படும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் முதன்மை மொழியை கற்கும் இளம் குழந்தைகள் , மூளை அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருபவர்கள் போன்ற பலதரப்பினருக்கு உதவியாக இருக்கும். மேலும் கவனக்குறைவு / ஹைபர்ஆக்டிவிட நோயாளிகளுக்கு இலவச வாசிப்பு மற்றும் கற்றல் அனுபவத்தை மனோவியூ-ஆல் வழங்க முடியும்.

இந்த கருவியின் விலை மற்றும் எப்போது இது பயனர்களை சென்றடையும்?
இப்போதைக்கு, குறைந்தபட்ச மாடலின் விலை 28டாலர் (சுமார் 1,935 ரூபாய் ). நாங்கள் தற்போது இந்த தொழில்நுட்பத்தின் செலவை குறைக்க பணியாற்றிவருகிறோம். எனவே குறைந்தபட்ச வருமான பெறுவோர் உள்ளிட்ட பெரும்பாலான மக்களுக்கு சென்றடையும் வகையில் மலிவு விலையில் இதனை கிடைக்க செய்வோம். அந்த நிலையை அடைந்தவுடன் இச்சாதனம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்" என ரூபம் கூறினார்.

2020 ஆம் ஆண்டிற்குள் இது நுகர்வோர்களை சென்றடையும் என அவர் மேலும் கூறினார்.
இவரது கண்டுபிடிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 உலக சிந்தனையாளர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ரூபம்.


Click it and Unblock the Notifications