நமது ஊர் குசும்புனா இதுதானோ? இந்திய இரயில்வே சந்தித்த சிக்கல் என்ன தெரியுமா?

அனைத்துத் துறையிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலும் ஹெல்ப்லைன் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

By Sharath
|

அனைத்துத் துறையிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலும் ஹெல்ப்லைன் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஹெல்ப்லைன் சேவைக்கென்றே தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண்கள் வழங்கப்பட்டிருக்கும். பிரச்சனைகளை உடனே தெரிவிக்க மற்றும் நடவடிக்கை எடுக்க எளிதாக்கும் நோக்கத்திலேயே இவை செயல்படுகின்றன.

நமது ஊர் குசும்புனா இதுதானோ? இந்திய இரயில்வே சந்தித்த சிக்கல்.!

இந்த ஹெல்ப்லைன் சேவை, ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவையாகும். அண்மையில் இந்திய ரயில்வே தனது ஹெல்ப்லைன் வாட்ஸ் ஆப் எண்களைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்தது. இதில் கூட நம்மவர்கள் செய்த குசும்பிற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஹெல்ப்லைன் வாட்ஸ் ஆப் எண்

ஹெல்ப்லைன் வாட்ஸ் ஆப் எண்

இந்திய ரயில்வே அறிவித்த ஹெல்ப்லைன் வாட்ஸ் ஆப் எண்களுக்கு, புகார்களைக் காட்டிலும் அதிகமாக ஃபார்வேர்டு மெசேஜ்கள் மட்டுமே வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் உச்சநிலை குசும்புகிற்கு எடுத்துக்காட்டாக நம்மவர்கள் ஹெல்ப்லைன் வாட்ஸ் ஆப் எண்களுக்கு நண்பர் தின வாழ்த்து மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனராம்.

குறைகளை பற்றி புகாரளிக்க இந்தச் சேவை

குறைகளை பற்றி புகாரளிக்க இந்தச் சேவை

ஜூலை 31ஆம் தேதி, பயணிகள் புகார்களை தெரிவிக்க இரண்டு வாட்ஸ் ஆப் எண்களை வெளியிட்டது இந்திய ரயில்வே. இந்த ஹெல்ப்லைன் எண்களுக்குப் பயணிகள் ரயில் நிலையங்களின் தூய்மை, கழிப்பிட பயன்பாடு மற்றும் அனைத்து வித குறைகளை பற்றி புகாரளிக்க இந்தச் சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 குறைவான புகார்கள் மட்டுமே வந்துள்ளது

குறைவான புகார்கள் மட்டுமே வந்துள்ளது

மேற்கு ரயில்வே ஹெல்ப்லைன் சேவைக்கு 90044 99773 என்ற எண்ணும் மத்திய ரயில்வே ஹெல்ப்லைன் சேவைக்கு 99876 45307 என்ற எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது வரை குறைவான புகார்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், ஏராளமான ஃபார்வேர்டு மெசேஜ்கள் மட்டுமே வந்து குவிந்து கொண்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த இரண்டு வாட்ஸ் ஆப் ஹெல்ப்லைன் எண்களுக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை 25 தாண்டவில்லையாம்.

அதிகாரிகளின் வேண்டுகோள்

அதிகாரிகளின் வேண்டுகோள்

இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலும் குட் மார்னிங், குட் ஈவினிங் மேசேஜ்கள் அதிகம் வருவதாகவும், பல இந்தி கவிதைகளும், ஆன்மீக தகவல்களுடன் அந்த மெசேஜ்களை இன்னும் 10 நபர்களுக்கு ஃபார்வேர்டு செய்யாவிட்டால் துன்பம் வந்து சேருமென்றும் கூட வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று அதிக அளவில் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வந்ததாகவும், வரவிருக்கும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு இப்பொழுதே நம்மவர்கள் சிலர் அட்வான்ஸ் வாழ்த்து மெசேஜ்களை அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கொஞ்சம் கடுப்பாகவும் நிறைய வருத்தத்துடனும் தெரிவித்தனர்.

உங்களுக்கு உதவுவதற்காகச் செயல்படும் ஹெல்ப்லைன் சேவையை, மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு இந்திய ரயில்வே வேண்டுதல் விடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Indian Railways WhatsApp Helpline Number Receives More Forwards Than Complaints : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X