24 மணிநேரத்தில் திரும்ப பெறமுடியும்.. Super App.. ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. என்ன தெரியுமா?
ரயில்வே அமைப்பு அவ்வப்போது புதிய முயற்சிகளைச் செயல்படுத்திக் கொண்டேதான் வருகிறது, குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது தான் உண்மை.
அதேபோல் பேருந்தில் பயணம் செய்வதை ரயிலில் பயணம் செய்யத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக நாள்தோறும் பல கோடி மக்கள் இந்திய ரயில்களில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியன் ரயில்வே (Indian Railways) பயணிகளுக்கு புதிய ஆப் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதாவது ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே அமைப்பு சூப்பர் ஆப் (Super App) என்ற மொபைல் ஆப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஆப் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படும் பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறமுடியும் என்று கூறப்படுகிறது
குறிப்பாக தற்போது டிக்கெட் ரத்து செய்யப்படும்பட்சத்தில் பணத்தைத் திரும்ப பெறுவதற்கு மூன்று நாள்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் IRCTC Rail Connect ஆப் வசதியை 100 மில்லியனுக்கும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் இந்த IRCTC Rail Connect ஆப் ஆனது ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவிற்கான ஒரே தளமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 10 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட UTS ஆப்பில், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் பாஸ்கள் வழங்கப்படுகிறது.
எனவே இப்படித் தனித்திருக்கும் ஆப்களின் செயல்பாடுகளை பொதுவாக ஒரே தளத்தில் கொண்டுவரும் முயற்சியாகத் தான் இந்த சூப்பர் ஆப் வடிவமைக்கப்படுகிறது என்றும், பின்பு இது 100 நாள் திட்டமாக முதலில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் புதிய சூப்பர் ஆப்பின் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு பல கோடிகள் செலவாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் பதவியேற்கும் புதிய அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்போது வந்தே பாரத் ரயில்களுக்குப் பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது இதில் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தனியாங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என பல சிறப்பான வசதிகள் உள்ளன. இதனால் தான் பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களை தொலை தூரங்களுக்கு இயக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும் வந்தே பாரத் ரயில்களைபொறுத்தவரை 8 பெட்டிகள் முதல் 16 பெட்டிகள் வரை கொண்டதாக இயக்கப்படுகிறது. பின்பு இந்த வந்தே பாரத் ரயில்களுக்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் பல வழித்தடங்களில் சுலபமாக டிக்கெட்டுகள் கிடைப்பது இல்லை என்று பயணிகள் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக எப்போது பிசியாக இருக்கும் ரூட்டில் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாக உள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதன் மூலம் ரயில்வே வருவாய் அதிகரிக்கும். அதேசமயம் டிக்கெட் கிடைப்பதில் மக்களுக்கு சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications