Home
News

ஜனவரி 1 முதல் எல்லாமே மாறுது.. ஸ்லீப்பர் பெட்டியில் புதிய சேவை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

இந்திய ரயில்வே அமைப்பு ( Indian Railways) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக ஒரு முக்கிய முடிவை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. அதன்படி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கும் தலையணை மற்றும் விரிப்பு (போர்வை) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2026-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்லீப்பர் கிளாஸில் பயணிக்கும் பயணிகளுக்குச் சுத்தமான மற்றும் சுகாதாரமான தலையணை மற்றும் விரிப்புகள் கிடைக்கும். இந்த வசதிக்குப் பயணிகள் தனியாகப் பணம் செலுத்த வேண்டும்.

ஜனவரி 1 முதல் எல்லாமே மாறுது.. ஸ்லீப்பர் பெட்டியில் புதிய சேவை..

அதேசமயம் யாருக்கெல்லாம் தலையணை மற்றும் விரிப்பு தேவையோ, அவர்கள் ரயில்வே ஊழியரிடம் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக இந்தியாவில் இதுவே முதல் முறையாக ஸ்லீப்பர் கிளாஸிலும் இந்த வசதி அறிமுகப்படுத்துகிறது. தற்போது ஏசி கிளாஸில் மட்டுமே விரிப்பு, தலையணை, போர்வை மற்றும் துண்டு அடங்கிய பெட்-ரோல் கிட் வசதி உள்ளது.

அதுவும் ஏசி கிளாஸ் பயணிகளுக்குத் தலையணை-விரிப்பு வசதிக்கு தனியாக கட்டணம் இல்லை. டிக்கெட் விலையிலேயே இது சேர்க்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தற்போது அறிவித்தபடி, ஒரு விரிப்பு, ஒரு தலையணை மற்றும் தலையணை உறைக்கு மொத்தம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பின்பு விரிப்பு மட்டும் வேண்டும் என்றால் 20 ரூபாய் செலுத்த வேண்டும். தலையணை மற்றும் தலையணை உறை மட்டும் வேண்டுமென்றால் 30 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஆனாலும் இந்த வசதி எல்லா ரயில்களிலும் கிடைக்காது. அதாவது முதலில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் 10 ரயில்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஒருவேளை இது வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி கிடைக்கும் ரயில்களின் பட்டியல்

ரயில் எண் 22657/22658 - தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12695/12696 - திருவனந்தபுரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12671/12672 - நீலகிரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12685/12686 - மங்களூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 16179/16180 - மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 20605/20606 - திருச்செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22639/22640 - ஆலப்புழா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 16159/16160 - மங்களூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22651/22652 - பாலக்காடு எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 20681/20682 - சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

ஜனவரி 1 முதல் எல்லாமே மாறுது.. ஸ்லீப்பர் பெட்டியில் புதிய சேவை..

அதுவும் இந்த புதிய வசதி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட தூரம் பயணங்களில் தலையணை மற்றும் விரிப்பு கிடைப்பது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பின்பு இது ரயில் பயணிகளுக்கான பயண அனுபவத்தையும் மேம்படுத்தும். ஏசி வகுப்பில் மட்டுமே இதுவரை கிடைத்த இந்த வசதி ஸ்லீப்பர் கிளாஸிலும் கிடைப்பது பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 ரூபாய்க்கு விரிப்பு, தலையணை, தலையணை உறை கிடைப்பது ஒரு நல்ல விஷயம் என்கின்றனர் ரயில் பயணிகள். இது பயணிகளுக்கு ஒரு கூடுதல் வசதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மட்டும் வெற்றி பெற்றால் மேலும் பல ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரயில்வே துறை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Railways to introduce bedroll facility for sleeper class passengers from January 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X