Home
News

அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? இனி டிக்கெட்டுக்கான ரூல்ஸ் மாறுது.. என்னென்ன மாற்றம்? இதோ விவரம்..

இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளைச் செயல்படுத்திக் கொண்ட தான் இருக்கிறது. சமீபத்தில் கூட ரயில் டிக்கெட் பதிவு முதல் ரயில் பயணம் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கும் SwaRail (ஸ்வாரயில்) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்தது இந்திய ரயில்வே அமைப்பு.

அதுவும் SwaRail SuperApp ஆனது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட், பிளாட்ஃபாரட் டிக்கெட் முன்பதிவு, பார்சல் மற்றும் சரக்கு விசாரணைகள், ரயில் மற்றும் PNR நிலை விசாரணைகள், ரயில்களில் உணவு ஆர்டர்கள், புகார் மேலாண்மைக்கான ரயில் மடாட் போன்ற பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இது பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் அனைத்து மக்கள் பயன்பாட்டுக்கும் இந்த புதிய ஆப் கிடைக்கும்.

அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? இனி டிக்கெட்டுக்கான ரூல்ஸ் மாறுது

இந்நிலையில் பொது டிக்கெட் (general ticket) வைத்திருப்பவர்களுக்கான விதிகளில் சில திருத்தம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த வாரம் கும்பமேளாவிற்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்த சிலர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்ன மாற்றங்கள் வரும்? பொதுவாக பயணிகள் பொது டிக்கெட்டுடன் எந்த ரயிலிலும் ஏறலாம், ஆனால் விரைவில் கொண்டுவரப்படும் புதிய மாற்றத்தில் ரயிலின் பெயர் டிக்கெட்டில் குறிப்பிடப்படலாம். இதன்மூலம் பயணிகள் அவரவர் ரயிலுக்கு மட்டும் செல்லும் வகையில் திருத்தம் செய்யப்படலாம். குறிப்பாக இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க முடியும்.

அதேபோல் பொது டிக்கெட் வாங்கிய நேரத்தில் இருந்து சரியாக 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்பது சில பயணிகளுக்குத் தெரியாது. எனவே இந்த காலக்கெடுவிற்குள் பயணம் தொடங்கப்படாவிட்டால், டிக்கெட் செல்லாது.

எதற்காக இந்த மாற்றம்? ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டால், அது விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும். பொது டிக்கெட்டுகளில் ரயில் பெயர்களை குறிப்பிடுவதன் மூலம் பயணிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு உதவும். இதுதவிர எந்த ரயிலில் ஏறலாம் என்பது பற்றி பயணிகளிடையே தெளிவு கிடைக்கும். அதேபோல் இது வெவ்வேறு ரயில்களில் பயணிகளைச் சமமாகப் பிரிக்க உதவும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் விரைவில் வரும் இந்த புதிய வசதி மூலம் நெரிசல் மற்றும் விபத்துக்களின் ஆபத்து குறையும்.

அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? இனி டிக்கெட்டுக்கான ரூல்ஸ் மாறுது

ஆனாலும் இதில் கவனிக்கப்பட வேண்டி விஷயம் ஒன்று உள்ளது. ஒரு பயணி தனக்கு ஒதுக்கப்பட்ட ரயிலைத் தவறவிட்டால், அவர்கள் புதிய டிக்கெட்டை வாங்க வேண்டியிருக்கும். இருந்தபோதிலும் பொதுப் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழங்கை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக உலகின் நான்காவது மிகப் பெரிய ரயில் சேவையாக இந்தியன் ரயில் சேவை உள்ளது. அதுவும் இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவில் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. எனவே அனைத்து சிறப்பான வசதியைக் கொண்ட இந்தியன் ரயில் சேவையில் விரைவில் பல மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

photo credit: gostops

Best Mobiles in India

English summary
Indian Railways to change rules for passengers traveling with general tickets: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X