IRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

|

ரயில்வே பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி இப்போது வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிப்பதால் ரயில்வே தொடர்பான அப்டேட்களை அறிந்து கொள்வது அவசியமானது. பல நேரங்களில் சில அவசரநிலை காரணமாக ரயில் சார்ட் தயாரித்த பிறகும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலையை சில சந்தித்திருப்போம். ஆனால், அத்தகைய சூழ்நிலையிலும், நீங்கள் டிக்கெட்டை ரத்துசெய்ததற்கான பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்கிறது இந்திய ரயில்வே விதி.

ரயில் சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட்டை ரத்து செய்து பணம் பெற முடியுமா?

ரயில் சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட்டை ரத்து செய்து பணம் பெற முடியுமா?

அவசரநிலை காரணமாக ரயில் சார்ட் தயாரித்த பிறகும் உங்கள் ரயில் டிக்கெட்டை நீங்கள் ரத்து செய்ய வேண்டியது இருந்தால், இந்திய ரயில்வேவின் பணத்தைத் திரும்பப்பெறும் விதியின் படி ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்காக மீட்பு தொகையை நீங்கள் பெற முடியும். இந்திய ரயில்வே இந்தத் தகவலை இப்போது அதன் டிவிட்டர் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது. சில காரணங்களால் ரயில் டிக்கெட்டை சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு ரத்து செய்தாலும், பணத்தைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது என்று IRCTC கூறியுள்ளது.

இந்தியாவின் முக்கியமான 'வாழ்க்கை பாதை' IRCTC

இந்தியாவின் முக்கியமான 'வாழ்க்கை பாதை' IRCTC

இந்திய ரயில்வே நம் நாட்டின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கான காரணம், இந்திய ரயில்வே சேவையைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் முக்கியமான 'வாழ்க்கை பாதை' என்று IRCTC அழைக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சேவையின் மூலம் தினமும் சுமார் 40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே தற்போது 1,490 அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களையும், 5,397 புறநகர் ரயில் சேவைகளையும், 947 பயணிகள் ரயில்களையும் இயக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

உங்கள் வீட்டிற்கு கேமராவுடன் பாதுகாப்பு மாதம் ரூ.99 மட்டுமே.. ஏர்டெல் அறிமுகம் செய்த Airtel Xsafe சேவை..உங்கள் வீட்டிற்கு கேமராவுடன் பாதுகாப்பு மாதம் ரூ.99 மட்டுமே.. ஏர்டெல் அறிமுகம் செய்த Airtel Xsafe சேவை..

TDR விதி பற்றி மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமா?

TDR விதி பற்றி மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமா?

ரயிலில் பயணம் செய்யும் போது, ​​ஒவ்வொரு பயணிகளும் தங்கள் பயணம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை உறுதிப்படுத்த நமது இந்திய ரயில்வே பல புதிய திட்டங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்து பயணிகளின் பயண அனுபவத்தை மேன்மேலும் மேம்படுத்தி வருகிறது. இப்படி பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும், பயணிகளின் தேவையை அறிந்து இந்திய ரயில்வே அறிமுகம் செய்த ஒரு முக்கிய வசதியைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த TDR விதி பற்றி மக்கள் அனைவரும் தெரிந்துகொள்வது சிறப்பானது.

IRCTC வெளியிட்ட பெரிய தகவல்

IRCTC தனது டிவிட்டர் பக்கத்தில் TDR தொடர்பான ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இதில் இந்திய ரயில்வே பயணம் செய்யாமலோ அல்லது பகுதியளவு பயணம் செய்யாமலோ டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு மீண்டும் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளது. இதற்கு ரயில்வே விதிகளின்படி டிக்கெட் டெபாசிட் ரசீதை (டிடிஆர்) பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். IRCTC இணையதளம் மூலம் பயணிகள் இந்த விதியை பின்பற்றி பணத்தை மீண்டும் பெறலாம். சரி, இதை எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

நிலவில் கண்ணாடி பந்துகளா? என்ன இது வித்தியாசமா இருக்கு? சீனாவின் லூனார் ரோவர் வெளியிட்ட படம்..நிலவில் கண்ணாடி பந்துகளா? என்ன இது வித்தியாசமா இருக்கு? சீனாவின் லூனார் ரோவர் வெளியிட்ட படம்..

ஆன்லைனில் TDR சேவைக்கு எப்படி விண்ணப்பித்துத் தாக்கல் செய்வது?

ஆன்லைனில் TDR சேவைக்கு எப்படி விண்ணப்பித்துத் தாக்கல் செய்வது?

  • இதற்கு, பயணிகள் முதலில் IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctc.co.in முகவரிக்குச் செல்ல வேண்டும்.
  • இப்போது முகப்புப் பக்கத்திற்குச் சென்று My Account என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது கீழ்தோன்றும் மெனுவிற்குச் சென்று, My transaction என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இங்கே File TDR விருப்பத்தில் உள்ள விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து TDR கிளிக் செய்யலாம்.
  • இப்போது யாருடைய பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நீங்கள் பார்க்க முடியும்.
  • டிக்கெட்டின் PNR எண், OTP எண்களைச் சரியாக உள்ளிடவும்

    டிக்கெட்டின் PNR எண், OTP எண்களைச் சரியாக உள்ளிடவும்

    • இப்போது, இங்கே உங்கள் டிக்கெட்டின் PNR எண், ரயில் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை நிரப்பி, ரத்து செய்யும் விதிகளின் பாக்ஸில் டிக் செய்யவும்.
    • இப்போது நீங்கள் submit பொத்தானைக் கிளிக் செய்க.
    • இதற்குப் பிறகு, முன்பதிவு செய்யும் போது படிவத்தில் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு OTP கிடைக்கும்.
    • இங்கே OTP ஐ உள்ளிட்ட பிறகு, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ரயில் பயண விதிமுறைகள்: TTE கூட டிக்கெட்டை பரிசோதிக்க முடியாதா? மிடில் பெர்த் ரூல்ஸ் தெரியுமா உங்களுக்கு?ரயில் பயண விதிமுறைகள்: TTE கூட டிக்கெட்டை பரிசோதிக்க முடியாதா? மிடில் பெர்த் ரூல்ஸ் தெரியுமா உங்களுக்கு?

      பணத்தைத் திரும்பப்பெறும் உறுதி மெசேஜ்

      பணத்தைத் திரும்பப்பெறும் உறுதி மெசேஜ்

      • PNR விவரங்களைச் சரிபார்த்து, டிக்கெட்டை ரத்துசெய் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
      • இங்கே நீங்கள் ரீஃபண்ட் தொகையைப் பக்கத்தில் காண்பீர்கள்.
      • முன்பதிவு படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில், PNR மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் பற்றிய விவரங்கள் அடங்கிய உறுதிப்படுத்தல் மெசேஜ்ஜைப் பெறுவீர்கள்.
      • IRCTC ஆன்லைன் சேவைகள் பற்றிய முழு விபரங்கள் அறிந்துகொள்ள

        IRCTC ஆன்லைன் சேவைகள் பற்றிய முழு விபரங்கள் அறிந்துகொள்ள

        இந்த வழிமுறையைப் பின்பற்றி நீங்கள் உங்களுக்கான கேன்சலேஷன் டிக்கெட்டிற்கான பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் நிச்சயமாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தகவல் பற்றி அறியாதவர்களுக்கும் இந்த விஷயத்தைத் தெரியப்படுத்துங்கள். ரயில் சேவை மற்றும் IRCTC ஆன்லைன் சேவைகள் பற்றிய முழு விபரங்கள் அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Indian Railways Rule Changed Now You Will Get Cancelled Ticket Refund After Become Chart Preparation : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X