Just In
- 9 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 9 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 9 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 10 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
IRCTC: இரவு நேர பயணிகளுக்கு புதிய விதி.. மீறினால் நடவடிக்கை.. இந்திய ரயில்வே அதிரடி உத்தரவு..
ரயில்களில் பயணம் செய்வதற்கான விதிகளை இந்திய ரயில்வே அவ்வப்போது மாற்றி வருகிறது. ரயில்வேயால் மாற்றப்படும் விதிகள் பற்றிய முழுமையான தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் முக்கியம். இம்முறை, இரவில் தூங்கும் பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் சில புதிய விதிகளை வகுத்துள்ளது. ரயில்வே அறிவித்துள்ள ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு இரவில் பயணிகளின் தூக்கம் கலையாது பார்த்துக்கொள்ள இந்த விதிகளை IRCTC பின்பற்றுகிறது.

புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வரும்
இந்த புதிய விதிகள் உடனடி அமலுக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய விதிகளின்படி, ரயிலில் பயணிக்கும் பயணிகள் அவர்களைச் சுற்றியுள்ள எந்த ரயில் பயணிகளும் தொந்தரவு கொடுக்கும் வகையில் மொபைலில் சத்தமாகப் பேசவோ, உரத்த குரலில் பாடல்களைக் கேட்கவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து வரும் புகார்களின் பேரில், அத்தகைய நபர்கள் மீது ரயில்வே நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரயில் ஊழியர்கள் பொறுப்பு
குறிப்பாக இரவு நேரப் பயணிகளின் பயண அனுபவத்தில் அசவுகரியம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே இப்படி ஒரு முக்கிய விதியை விதித்துள்ளது. புதிய விதிகளின்படி, ரயிலில் பயணிப்பவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், ரயில் ஊழியர்களின் பொறுப்புணர்வு ஏற்று அதைச் சரிசெய்ய முடியும் என்ற விதிமுறையும் உள்ளது. அனைத்து மண்டலங்களுக்கும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த புகார்கள் பயணிகளிடம் இருந்து பெறப்பட்டது
ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, பயணிகள் அடிக்கடி சத்தமாகப் பேசுவது அல்லது பக்கத்து இருக்கையில் இருக்கும் பயணிகளின் மொபைலில் இசை கேட்பது குறித்துப் பல புகார்கள் எழுப்பப்படுவது வழக்கம். இதுதவிர இரவு நேரங்களில் சிலர் சத்தமாகப் பேசுவதாகவும் புகார் எழுந்தது. இரயில்வேயின் ஸ்காட் அல்லது பராமரிப்பு ஊழியர்கள் ரோந்துப் பணியின் போது விறுவிறுப்பாகப் பேசும்போது இதுபோன்ற வழக்குகள் கவனத்திற்கு வந்தன. இதனால் பயணிகளின் தூக்கம் கலைகிறது. இரவில் விளக்கு எரிவதால் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் புகார் உள்ளது.

IRCTC வெளியிட்ட விதிகள்
இனி இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிகளை IRCTC தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும், பொது முன்பதிவு மற்றும் ஏசி முன்பதிவு பயணிகள் அனைவருக்கும் பொருத்தும் என்பது கவனிக்கத்தக்கது. இந்திய ரயில்வே என்னென்ன விதிகளை இனி பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதையும் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இரவு 10 மணிக்கு மேல் தினமும் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஆபீஸ் டேபிளை ஸ்மார்ட்டாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை பாருங்க.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..

இரவு 10 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யக் கூடாதா?
- இரவு நேர ரயில் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் எந்த பயணியும் சத்தமாகப் பேசவோ, சத்தமாக இசையை மொபைலில் கேட்கவோ கூடாது.
- இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும்.
- குழுவாகப் பயணிக்கும் பயணிகள் இரயிலில் வெகுநேரம் வரை பேச முடியாது.
- இந்த விதிகளை மீறினால் சக பயணிகளின் பெயரில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம்.
- சோதனை ஊழியர்கள், ஆர்பிஎஃப், எலக்ட்ரீஷியன், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்ய வேண்டும்.
- முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றைப் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறைகள் கூறுகிறது.

விதிகளை மீறினால் நடவடிக்கை
ஜியோ வழங்கும் "டேட்டா லோன்" பெறுவது எப்படி? இது எப்படி செயல்படும் தெரியுமா?

இரவு நேர பயணிகள் இந்த விதிமீறல்களைச் செய்ய வேண்டாம்
இந்த புதிய விதிமுறைகள் உடனே அமல்படுத்தப்படும் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளதால், பயணிகள் இரவு நேரத்தில் பயணிக்கும் போது மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது. மொபைலில் சத்தமாகப் பேசுவதோ அல்லது மொபைலில் சத்தமாகப் பாடல் கேட்பதோ கூடாது என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இரயில் பயனர்கள் அனைவரும் பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086