ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் வீணாகிறதா? இப்படி செஞ்சு பாருங்க.. பணமும் வீணாகாது பயணமும் செய்யலாம்..

|

இந்திய இரயில்வே நம் நாட்டின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கான காரணம், இந்திய இரயில்வே தான் இந்தியாவின் முக்கியமான 'வாழ்க்கை பாதை' என்று அழைக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சேவையின் மூலம் தினமும் சுமார் 40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே தற்போது 1,490 அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களையும், 5,397 புறநகர் ரயில் சேவைகளையும், 947 பயணிகள் ரயில்களையும் இயக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்த புதிய வசதிகள்

ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்த புதிய வசதிகள்

ரயிலில் பயணம் செய்யும் போது, ​​ஒவ்வொரு பயணிகளும் தங்கள் பயணம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை உறுதிப்படுத்த நமது இந்திய ரயில்வே பல புதிய திட்டங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்து பயணிகளின் பயண அனுபவத்தை மேன்மேலும் மேம்படுத்தி வருகிறது. இப்படி பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே அறிமுகம் செய்த ஒரு முக்கிய வசதியைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உண்மையில் இந்த வசதியைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும், இந்த வசதி பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், உங்கள் பயண டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல், வேறு நாளில் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியும். ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்வது என்பது இப்போது சுலபமாகிவிட்டது. அதேபோல், பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில் நாம் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்வதும் இப்போது சுலபமாகிப் போனது.

ரயில் பயண விதிமுறைகள்: TTE கூட டிக்கெட்டை பரிசோதிக்க முடியாதா? மிடில் பெர்த் ரூல்ஸ் தெரியுமா உங்களுக்கு?ரயில் பயண விதிமுறைகள்: TTE கூட டிக்கெட்டை பரிசோதிக்க முடியாதா? மிடில் பெர்த் ரூல்ஸ் தெரியுமா உங்களுக்கு?

டிக்கெட்டை கேன்சலேஷன் முறையால் ஏற்படும் சிக்கல்

டிக்கெட்டை கேன்சலேஷன் முறையால் ஏற்படும் சிக்கல்

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு வழியாகவும் ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு மற்றும் கேன்சலேஷன் வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், முன்பதிவு செய்த டிக்கெட்டை எதிர்பாராத காரணத்தினால் கேன்சல் செய்யும் போது நீங்கள் கட்டணமாகச் செலுத்திய தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வீணாகிறது. இதை மிச்சம் பிடிக்க இந்திய ரயில்வே ஒரு வழியை வைத்துள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இந்த சிக்கலை நிச்சயமாகச் சந்தித்திருப்போம், இதனால் சில நேரத்தில் முன்பதிவு செய்த டிக்கெட் தொகையில் ஒன்று அல்லது இரண்டு பங்கை இழந்திருப்போம்.

பயணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக இதைச் செய்தால் மட்டும் போதுமா?

பயணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக இதைச் செய்தால் மட்டும் போதுமா?

ஆனால், இந்த முறையைப் பின்பற்றினால் அந்த வகையான சிக்கலில் இருந்து பணம் வீணாக்காமல் உங்கள் பயணத்தை வேறு ஏதேனும் ஒரு நாளில் நீங்கள் மேற்கொள்ள முடியும். ரயில்வே விதிகளின்படி, நீங்கள் பயணிக்கவிருந்த முன்பதிவு டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரம் அல்லது நாளில் உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ரயில் பயணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக, உங்கள் பயணத்தை 'முன்கூட்டி' அல்லது 'பிற்போக்கு' செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பயணத்தின் போர்டிங் நிலையத்தையும் கூட நீங்கள் மாற்றலாம்.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

முன்பதிவு செய்த பயண தேதியை எப்படி மாற்றுவது?

முன்பதிவு செய்த பயண தேதியை எப்படி மாற்றுவது?

அசல் போர்டிங் நிலையத்தின் நிலைய மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பதன் மூலமோ அல்லது ரயில் புறப்படுவதற்குக் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையத்திற்குச் செல்வதன் மூலமோ பயணிகள் பயணத்தின் போர்டிங் நிலையத்தை மாற்றிக்கொள்ள இந்திய ரயில்வே இப்போது உங்களை அனுமதிக்கிறது. இந்த வசதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டு வகை டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு செய்த ஸ்டேஷனில் இறங்காமல் பயணத்தை நீட்டிக்க முடியுமா?

முன்பதிவு செய்த ஸ்டேஷனில் இறங்காமல் பயணத்தை நீட்டிக்க முடியுமா?

முன்பதிவு செய்த ஸ்டேஷனில் இறங்காமல், உங்கள் பயணத்தைத் தொடர விரும்பினால், அதாவது, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையத்திற்கு அப்பால் செல்ல விரும்பினால் அதில் மாற்றம் செய்துகொள்ளவும் உங்களுக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, பயணிகள் இலக்கை அடையும் முன் அல்லது முன்பதிவு முடிந்ததும் டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். கண்டிப்பாக இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் மற்றும் உங்களின் பயண விவரம் பற்றிய தகவலை அவர்களிடம் கொடுக்க வேண்டும்.

புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..

பயணத் தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியுமா?

பயணத் தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியுமா?

இந்திய ரயில்வேயின் இணையதளத்தின்படி, ஸ்டேஷன் கவுண்டரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை பயணத் தேதியில் ஒருமுறை மட்டுமே 'முன்கூட்டி' அல்லது 'பிற்போக்கு' செய்ய முடியும். இருக்கைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதா அல்லது RAC அல்லது காத்திருப்பு உள்ளதா என்ற விஷயங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு நீங்கள் விரும்பிய நாளில் மாற்றி தரப்படும். பயணத் தேதியை நீட்டிக்க அல்லது முன்பதிவு செய்ய, பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு அலுவலகத்திற்குச் சென்று தனது டிக்கெட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு இவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும்

முக்கிய குறிப்பு இவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும்

இந்த வசதி ஆஃப்லைன் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளில் இந்த வசதி இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு அவர்களின் உறுதியான இருக்கை / ஆர்ஏசி / காத்திருப்பு டிக்கெட்டின் பயணத் தேதியை மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. உங்களின் பயணத் தேதியை 'முன்கூட்டிய' அல்லது 'ஒத்திவைக்க' அனுமதிப்பதோடு, அதே வகுப்பு அல்லது உயர் வகுப்புகளுக்கு மாற்றம் செய்யவும் அனுமதிக்கிறது.

SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்திSBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்தி

கேன்சல் செய்வதற்குப் பதிலாக இப்படிச் செய்து பாருங்கள்

கேன்சல் செய்வதற்குப் பதிலாக இப்படிச் செய்து பாருங்கள்

அதே இலக்குக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வேறு நாள் பயணம் செய்ய அனுமதிப்பதோடு, பயணிகள் தங்கள் பயணத்தை நீட்டிக்கவும், தங்கள் பயணத்தின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றவும் மற்றும் உயர் வகுப்பிற்கு தங்கள் டிக்கெட்டுகளை மேம்படுத்தவும் இந்திய ரயில்வே அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதிகளில் சில ஆஃப்லைன் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும், மற்றவை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அடுத்த முறை முன்பதிவு டிக்கெட்டை நேரடியாக கேன்சல் செய்வதற்குப் பதிலாக இப்படி கொஞ்சம் செய்து பாருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian Railways Rule Changed For Cancelation Now Change The Date Of Travel Without Cancelling : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X