Home
News

ரயிலில் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? ரூல்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க.. என்னென்ன மாற்றங்கள்.. இதோ முழு விவரம்!

இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்களைத் தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக ரயில்களில் படுக்கை வசதி, கழிவறை வசதி போன்ற பல வசதிகள் உள்ளன. அதுவும் ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு தான், அதனால் தான் மிடில் கிளாஸ் மக்களின் பிரதான தேர்வாக ரயில்கள் இருக்கின்றன.

அதேபோல் சமீபத்தில் இந்திய ரயில்வே அமைப்பு ( Indian Railways) பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய விதிமுறைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயிலில் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? ரூல்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க..

1.போர்டிங் ஸ்டேஷன் மாற்றும் வசதி

தற்போது ரயில் பயணிகள் தங்கள் ரயில் ஏறும் நிலையத்தை (Boarding Point) மாற்றிக் கொள்வதில் இருந்த கடினமான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதாவது புதிய விதிமுறைப்படி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நீங்கள் ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்.

குறிப்பாக இது உறுதிசெய்யப்பட்ட மற்றும் RAC டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி இருக்கும். ஒரு டிக்கெட்டிற்கு ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

2.ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணம்
ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான பணம் திரும்ப அளிப்பது தொடர்பான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

நீங்கள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு திட்டத்தை மாற்றி டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு அதிகபட்ச ரீஃபண்ட் கிடைக்கும்.

குறிப்பாக ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் உங்கள் டிக்கெட் தொகையில் 25 சதவீதம் அபராதமாகப் பிடிக்கப்படும். மீதமுள்ள 75 சதவீதம் தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும்.

பயணத்திற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யும் பட்சத்தில், டிக்கெட் கட்டணத்தில் சரிபாதி அதாவது 50 சதவீதம் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது. அதாவது 100 சதவீதத் தொகையும் ரத்து கட்டணமாகவே கருதப்படும். தற்போது ரயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் போடப்படுகிறது. சார்ட் போட்ட பிறகு நீங்கள் கேன்சல் செய்தால் ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட வராது.

ரயிலில் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? ரூல்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க..

3. ஆதார் இணைப்பு

2026 ஜனவரி மாதம் முதல் டிக்கெட் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஆதார் இணைப்பு தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஆதார் அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசி பயனர்களுக்குத் தட்கல் மற்றும் பொது டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முன்பதிவு தொடங்கும் முதல் சில மணி நேரங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆதார் இல்லாதவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும் என்ற விதிமுறையும் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Railways Revises Rules from Boarding Point Changes to Cancellation Fees
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X