ரயிலில் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? வருகிறது Rail Points.. டிக்கெட், உணவு இலவசம்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் பேருந்து மற்றும் விமான போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யத் தான் பல அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதுவும் நீண்ட தூர பயணங்களுக்குச் சௌகரியமானது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயில் பயணத்தை தான் அதிகம் விரும்புகின்றனர்.
இந்நிலையில் ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் மக்களை கவரும் வகையில் அவர்களுக்கு இலவச உணவு, இலவச டிக்கெட் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது இந்திய ரயில்வே அமைப்பு (Indian Railways). இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய ரயில்வே அமைப்பு பயணிகளின் வசதிக்காவும், அவர்களின் செலவைக் குறைப்பதற்காகவும் பல சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு டிக்கட் முன்பதிவு செய்யும் போல பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்திய ரயில்வே அமைப்பு அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் மக்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச உணவு, இலவச டிக்கெட் வழங்கும் புதிய திட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் ரயில் பயணிகள் இலவச டிக்கெட், தேநீர், சிற்றுண்டிகள், உணவு போன்றவற்றைப் பெற முடியும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் பயணிகள் இந்திய ரயில்வேயின் வசதிகளை இலவசமாகப் பெற முடியும் என்பதுடன் ஒவ்வொரு பயணத்திற்கும் வெகுமதிகள் கிடைக்கும். இதற்காக இந்திய ரயில்வே ஒரு விசுவாசத் திட்டத்தை (loyalty program) தொடங்க உள்ளது. குறிப்பாக இந்த விசுவாசத் திட்டத்தின் கீழ் தான் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கிலோ மீட்டர் அடிப்படையில் வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படும்.
மேலும் இந்த புள்ளிகள் மூலம் பயணிகள் உணவு முதல் பயணக் கட்டணம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பயணிகள் பயணிக்கும் தூரம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்கள் பெறும் வெகுமதி புள்ளிகளும் (Rail Points) அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது, அவர்கள் பெற்ற வெகுமதி புள்ளிகள் அடிப்படையில் கட்டணத்தில் தள்ளுபடி பெறலாம் அல்லது ஒரு முழுமையான பயணச்சீட்டை இலவசமாகப் பெறலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை ரயில் இ-கேட்டரிங் மூலம் இலவசமாக ஆர்டர் செய்ய முடியும். மேலும் பயணத்தின் போது ரயில் நிலையத்தின் சொகுசு ஓய்வறைகளில் இலவச உணவை உண்டு மகிழவும் முடியும். இதுதவிர வெகுமதி புள்ளிகளின் அடிப்படையில் டிக்கெட்டுகளை மூன்றாம் ஏசி-யிலிருந்து இரண்டாம் ஏசி-க்கும், இரண்டாம் ஏசி-யிலிருந்து முதல் ஏசி-க்கும் மாற்றிக்கொள்ள முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் இந்த புதிய திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ரயில்களில் முன்னோட்டமாகச் செயல்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய திட்டம் தினமும் பல லட்சக்கணக்கான பரிவர்த்தனைகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு டிஜிட்டல் அமைப்பை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, சாலை மற்றும் விமானப் பயணங்களுக்குப் பதிலாக ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுக்குமாறு பயணிகளை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். குறிப்பாக இந்த புதிய திட்டம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








