புது ரூல்ஸ்.. டிசம்பர் 26 அமல்.. ரயில் கட்டணம் உயர்வு முதல் ஆதார் கட்டாயம் வரை.. ரயில்வே முக்கிய மாற்றங்கள்!
இந்திய ரயில்வே (Indian Railways) ஆனது வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ரயில் கட்டணங்களை உயர்த்துவது மட்டுமல்லாமல், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் புக்கிங்கில் ஆதார் கார்டை கட்டாயமாக்கி உள்ளது. இந்த புதிய விதிகள் ரயில் பயணிகளிடையே மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றன. இதேபோல பான் விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.
1. ரயில் கட்டண உயர்வு (Train Fare Hike):
டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ரயில் கட்டணத்தை இந்திய ரயில்வே உயர்த்த உள்ளது. புறநகர் ரயில் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் புக்கிங்கில் எந்த விலையும் ஏற்றப்படாது. சாதாரண வகுப்பில் பயணம் செய்யும்போது 215 கி.மீ வரையில் எந்த கட்டணமும் ஏற்றப்படாது. சாதாரண வகுப்பு 215 கி.மீ.க்கு மேல் பயணம் செய்தால் 1 பைசா (1 கி.மீ) உயர்த்தப்படும்.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத வகுப்புகளில் பயணம் செய்வோருக்கு 2 பைசா (1 கி.மீ) கூடுதலாக கட்டணம் உயர்த்தப்படுகிறது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ஏசி வகுப்புகளில் பயணம் செய்வோருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. ஏசி வசதி இல்லாத வகுப்புகளில் 500 கி.மீ பயணம் செய்தால் ரூ.10 விலை உயர்த்தப்படுகிறது.
இதில் பைசா விலை ஏற்றம் என்பது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். ஆனால், ஏசி வசதி இல்லாத வகுப்புகளில் 500 கி.மீ பயணம் செய்தால் மொத்தமாகவே ரூ.10 விலை உயர்த்தப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வின்படி டிசம்பர் 26 ஆம் தேதி முதல் பயணம் செய்து கொள்ளலாம். மேலும், டிக்கெட் புக்கிங்கில் விதிகள் இருக்கின்றன.
2. ரயில் டிக்கெட் புக்கிங் ஆதார் கட்டாயம் (Train Ticket Booking Aadhaar Mandatory):
ஐஆர்சிடிசி (IRCTC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) ஆனது டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு டிசம்பர் 29 ஆம் தேதி முதல் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. ஆகவே, ஐஆர்சிடிசியில் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையில் புக்கிங் செய்தால் ஆதார் கட்டாயமாகும்.
அதாவது, ஆதார் கார்டு ஆதன்டிகேஷன் செய்யப்பட்டால் மட்டுமே டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். ஆகவே, இந்த நேரத்தில் ரயில் டிக்கெட்டை புக்கிங் செய்யும்போது, ஆதார் கார்டு ஆதன்டிகேஷனுக்கு தயாராக இருந்து கொள்ளுங்கள். இந்த நேரம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி மற்றும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் மாறுபடுகின்றன.
அதாவது, ஜனவரி 5 ஆம் தேதி முதல் காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை ஐஆர்சிடிசியில் டிக்கெட் புக்கிங் செய்தால் ஆதார் கார்டு ஆதன்டிகேஷன் இருக்கும். மேலும், ஜனவரி 12 ஆம் தேதி முதல் டிக்கெட் புக்கிங் செய்யும்போது காலை 8:00 முதல் மாலை 00:00 மணி வரையில் ஆதார் கார்டு ஆதன்டிகேஷன் இருக்கும். ஆகவே, ஜனவரி 12 ஆம் தேதிக்கு பிறகு ஆதார் முழுதாக கட்டயமாகிறது.
ஆகவே, ஐஆர்சிடிசியில் டிக்கெட் புக்கிங் செய்தாலேயே ஆதார் கார்டு ஆதன்டிகேஷன் இருக்கும். அந்த தேதிக்கு பிறகு டிக்கெட் புக்கிங் செய்யும் முன்பாத ஆதார் கார்டை மற்றும் ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனை கையில் வைத்து கொள்ளுங்கள். இதேபோல மற்றொரு புதிய விதிகள் டிசம்பர் மாதத்தில் அமலுக்கு வருகின்றன.
3. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்தல் (PAN Card Aadhaar Linking):
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்காமல் போனால், பேங்க் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் போகும். அதாவது, பான் கார்டு செயல்படாது, இதனால் அதன் மூலம் செய்யப்பட்டும் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. ஆகவே, இதற்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








