பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய முடியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

|

இந்திய நாட்டின் போக்குவரத்து முறைகளில் ரயில் பயணம் முக்கிய ஒன்றாக இருக்கிறது. ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் அல்லது சாதாரண டிக்கெட் என்று எதாவது ஒரு டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு தான் உங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும். இதேபோல், உங்கள் கையில் பிளாட்பாரம் டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் ரயில் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க, இப்படிச் செய்தால் பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்துப் பயணிக்கலாம்.

அவசர நேரத்தில் திடீர் பயணத்தின் போது எப்படி ரயிலில் பயணிக்கலாம்?

அவசர நேரத்தில் திடீர் பயணத்தின் போது எப்படி ரயிலில் பயணிக்கலாம்?

பிளாட்பாரத்தில் டிக்கெட் வாங்கி அந்த டிக்கெட்டில் நீங்கள் ரயில் பயணம் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது. பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் சேவையை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், அவசர நேரத்தில், முன்பதிவு டிக்கெட் அல்லது சாதாரணமான ரயில் டிக்கெட் எதுவும் எடுக்க நேரம் இல்லாத பயணிகள், உங்களின் திடீர் பயணத்தின் போது, வெறும் பிளாட்பாரம் டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம். இதற்கென்று சில நிபந்தனைகள் உள்ளது, அதைப் பற்றிப் பார்க்கலாம்.

வெறும் பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் ஏராளமா?

வெறும் பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் ஏராளமா?

உங்கள் கையில் வெறும் பிளாட்பாரம் டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் ரயிலில் ஏறலாம், பின்னர் நீங்கள் செல்லும் இடத்திற்கான டிக்கெட்டை ஓடும் ரயிலிலேயே வாங்கிக்கொள்ளலாம். அதை எப்படிச் செய்வது என்று தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக ரயிலில் பயணம் செய்யப் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு டிக்கெட்டை பெற, நீங்கள் முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. டிக்கெட்டுகளை முன்பதிவு சாளரம் அல்லது ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். ஆனால் கடைசி நிமிடத்தில் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்வது?

ரயில் பயணிகளின் கவனத்திற்கு.! வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு தடை.. மீறினால் ரூ.500 அபராதமா?ரயில் பயணிகளின் கவனத்திற்கு.! வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு தடை.. மீறினால் ரூ.500 அபராதமா?

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்வது எப்படி?

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்வது எப்படி?

பெரும்பாலானோர் இதற்கு 'தத்கல்' டிக்கெட்டுகளை மட்டுமே விருப்பமாகக் கருதுகின்றனர். இருப்பினும், நடைமேடையில் இருந்து டிக்கெட் வாங்கிய பிறகு ரயிலில் பயணம் செய்யலாம் என்பது பலருக்குத் தெரியாது. பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்வது எப்படி? உங்களுடைய ரயில் பயணத்திற்காக எந்தவொரு முன்பதிவு முறையையும் நீங்கள் செய்யவில்லை என்றால் பயப்படத் தேவையில்லை. நீங்கள் தாராளமான வெறும் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறலாம், பின்னர் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் சென்று உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை அவரிடமிருந்து எளிதாகப் பெறலாம்.

பிளாட்ஃபார்ம் டிக்கெட் வைத்து ரயிலில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள் என்ன?

பிளாட்ஃபார்ம் டிக்கெட் வைத்து ரயிலில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள் என்ன?

பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறும் நபர் உடனடியாக ரயிலில் இருக்கும் டிக்கெட் பரிசோதகரான TTE ஐ நேரில் தொடர்பு கொண்டு அவரிடம் உங்கள் காரணத்தைச் சொல்லி, நீங்கள் சென்று சேருமிடத்திற்கான தற்போதைய டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இந்த முறைப்படி நீங்கள் பயணிக்க முடிவு செய்வதற்கு முன் இது தொடர்பான சில விதிகளை அறிந்து கொள்ளுங்கள். இந்த முறையில் நீங்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கும் போது ரிசர்வேஷன் பெட்டிகளில் காலி இருக்கைகள் இருந்தால், அந்த இருக்கைகள் உங்களுக்கு வழங்கப்படும். அதற்கான கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படும்.

உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? அப்போ இது தான் காரணம்.. சரி செய்ய இது தான் வழி..

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் ரிசர்வேஷன் இருக்கைகளைக் கூட வாங்கி பயணிக்க முடியுமா?

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் ரிசர்வேஷன் இருக்கைகளைக் கூட வாங்கி பயணிக்க முடியுமா?

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை பெட்டிகளில் சில நேரங்களில் முழு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளும் முழுமையாக நிரம்பி இருக்கும் போது, உங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை TTE-யால் வழங்கமுடியாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் முன்பதிவு இருக்கை கொண்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவீர்கள். முன்பதிவு செய்யவில்லை என்றால், சேருமிட டிக்கெட்டின் விலையுடன் சேர்த்து உங்களிடம் இருந்து சுமார் ரூ. 250 அபராதமாக வசூலிக்கப்படும் என்பதை நினைவில்கொள்க.

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்யும் போது கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்?

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்யும் போது கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்?

நீங்கள் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிய நிலையத்திலிருந்து, நீங்கள் சென்று சேருமிடத்திற்கான கட்டணமும் அபராத தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும். நடைமேடை டிக்கெட் பயணிகளுக்கு ரயிலில் ஏறுவதற்கான உரிமையை IRCTC முழுமையாக அனுமதி வழங்குகிறது. பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், பயணிகளின் கட்டணம் அவர் அல்லது அவள் பிளாட்பார்ம் டிக்கெட்டை எந்த நிலையத்திலிருந்து வாங்கினார் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. கட்டணம் வசூலிக்கும் போது நீங்கள் எந்த நிலையத்தில் இருந்து பிளாட்பாரம் டிக்கெட்டை வாங்கியுளீர்கள் என்று நிலையம் சரிபார்க்கப்படும்.

9 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்.. சென்னையில் கூட புல்லட் ரயில் சேவையா?9 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்.. சென்னையில் கூட புல்லட் ரயில் சேவையா?

இப்படி AC வகுப்பில் கூட நாம் அவசர நேரத்தில் பயணிக்க முடியுமா?

இப்படி AC வகுப்பில் கூட நாம் அவசர நேரத்தில் பயணிக்க முடியுமா?

இந்த முறையில் 1AC, 2AC, 3AC போன்ற வகுப்புகளிலும் உங்களின் பயணத்தை மேற்கொள்ளலாம். அதற்கான கட்டணம் வேறுபடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். AC வகுப்புகளில் காலி இருக்கைகள் இருந்தால் TTE உங்களுக்கு அந்த இருக்கைகளுக்கான கட்டணத்தை வசூலிப்பார். தற்போதைய கோவிட் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே பயணிகள் இயக்கத்திற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே இப்போது நீங்கள் உங்களுடைய ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த மாதம் முதல் ரயில் பயணம் மேற்கொள்ள இந்த புது விதிமுறைகள் கட்டாயம்

இந்த மாதம் முதல் ரயில் பயணம் மேற்கொள்ள இந்த புது விதிமுறைகள் கட்டாயம்

மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மண்டலம் முழுவதும் புறநகர் ரயில் சேவையில் பயணிக்கும் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக தெற்கு ரயில்வே மண்டலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதைய கொவிட் வழக்குகள் மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு அரசு 06 ஜனவரி 2022 முதல் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, புறநகர் ரயில்கள் 50% இருக்கை வசதியுடன் இயக்கலாம் என்று கூறியுள்ளது.

BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..BSNL வழங்கும் இலவச 5ஜிபி டேட்டா.. இந்த இலவச சலுகையை பெற நீங்க 'இதை' செய்யணும் மக்களே..

கட்டாயமாக கோவிட் தடுப்பூசி சான்றிதழ் காண்பிக்க வேண்டுமா?

கட்டாயமாக கோவிட் தடுப்பூசி சான்றிதழ் காண்பிக்க வேண்டுமா?

  • எனவே, சென்னை மண்டலம் மற்றும் சென்னை புறநகர் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள புறநகர் ரயில்களில் 10 ஜனவரி 2022 காலை 04:00 மணி முதல் 31 ஜனவரி 2022 இரவு 11:59 மணி வரை பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயமாக கோவிட் தடுப்பூசி சான்றிதழ் காண்பிக்க வேண்டும். இரண்டு தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • பயணிகள் தங்களது செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளுடன் பயணம் அல்லது சீசன் டிக்கெட்டுகளை வழங்குவதற்காக கவுன்டர்களில் இரண்டாவது டோஸ் சான்றிதழ் அல்லது இறுதிச் சான்றிதழைக் காட்ட வேண்டும்.
  • முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கும் இந்த விதிமுறைகள் கட்டாயமா?

    முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கும் இந்த விதிமுறைகள் கட்டாயமா?

    • முன்பே வழங்கப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள், அத்தகைய பயணிகள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி சான்றிதழை தங்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் எடுத்துச் செல்ல வேண்டும் .
    • டிக்கெட் சரிபார்ப்பு ஊழியர்களின் தேவைக்கேற்ப அதை சமர்ப்பிக்க வேண்டும்.
    • மேற்கூறியவற்றிற்கு இணங்க MOBILE பயன்பாட்டில் UTS இன் வசதி கிடைக்காது.
    • ரயில் நிலையத்திலும் ரயிலில் ஏறும்போதும், முகமூடி அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளைக் கழுவுதல் போன்ற அனைத்து கோவிட்-19 பொருத்தமான நடத்தைகளையும் கடைப்பிடிக்குமாறு அனைத்து பயணிக்கும் பயணிகளையும் தேசிய போக்குவரத்துக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
    • ஜியோ மஹா கேஷ்பேக் சலுகை விபரம்: எந்த திட்டத்திற்கு எல்லாம் கேஷ் பேக் நன்மை? குழப்பம் வேண்டாம்..ஜியோ மஹா கேஷ்பேக் சலுகை விபரம்: எந்த திட்டத்திற்கு எல்லாம் கேஷ் பேக் நன்மை? குழப்பம் வேண்டாம்..

      முகமூடி அணியாமல் பயணித்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

      முகமூடி அணியாமல் பயணித்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

      • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு அவ்வப்போது வழங்கும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் அவர்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
      • முகமூடி அணியாமல் பயணிப்பது கண்டறியப்பட்டால் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
      • இந்த விதிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு உங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வது பாதுகாப்பானது மற்றும் சிறப்பானது. மேலும் IRCTC தொடர்பான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Indian Railways Now Allows Passengers To Travel In Train Even With Platform Tickets Know The Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X