Indian Railways: புதிய வசதியை அறிமுகம் செய்த ஐஆர்சிடிசி: இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.!

|

ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக இந்த இணையதளம் கொண்டுவரும் அனைத்து வசதிகளும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான்
கூறவேண்டும்.

 ரயில் பயணம்

ரயில் பயணம்

அடிக்கடி ரயில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள், அப்படியென்றால் ரயில் பயணம் செய்யும் போது எப்போதாவதுஉங்களுடைய இருக்கை முன்பதிவு உறுதி செய்யப்படாமல் போனதால் நீங்கள் வருத்தப்பட்டுள்ளீர்களா? அப்படியென்றால்
இந்த தகவல் உங்களுக்கு தான்.

 ரயில் இருக்கை அல்லது படுக்கை

ரயில் இருக்கை அல்லது படுக்கை

அதன்படி இந்திய ரயில்வே முன்பதிவு சார்ட்டை இப்போது ஆன்லைனில் வெளியிட துவங்கியள்ளது. இதன் மூலம்காலியான, முன்பதிவு செய்யப்பட்ட அல்லது பாதியளவு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் இருக்கை அல்லது படுக்கைதொடர்பான விவரங்களை பயணிகள் முன்பதிவு சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு தெரிந்துகொள்ளலாம். கண்டிப்பாக இந்த புதிய வசதி மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

Google Maps-ன் 15ம் ஆண்டு தின கொண்டாட்டத்தை சுந்தர் பிச்சை கொண்டாடியது இப்படித்தான்!Google Maps-ன் 15ம் ஆண்டு தின கொண்டாட்டத்தை சுந்தர் பிச்சை கொண்டாடியது இப்படித்தான்!

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

இந்த புதிய வசதியைக் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தனது அதிகாரப்பூர்வடிவிட்டர் தளத்தில் தவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்பதிவு சார்ட்

முன்பதிவு சார்ட்

குறிப்பாக முன்பதிவு சார்ட் தாயரித்த பிறகு காலியாக உள்ள ஏதாவது பெர்த் குறித்த விவரங்களை பயணிகள்தெரிந்துகொள்ள இந்த வசதி உபயோகமாக இருக்கும். மேலும் முதல் முன்பதிவு சார்ட் ஆனது ரயில் புறப்பட 4மணிநேரம்
முன்னதாக இணையதளத்தில் வெளயிடப்படும்.

Alexa-விடம் அதிகம் பேசிய வார்த்தை- முதலிடம் Alexa-விடம் அதிகம் பேசிய வார்த்தை- முதலிடம் "அலெக்ஸா I Love you"- இரண்டாவது சொல்லவே கூச்சமா இருக்கு

அரை மணிநேரம்

அடுத்த முன்பதிவு சார்ட்டை ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்னதாக இணையதளத்தில் பார்க்கலாம், குறிப்பாக இருக்கை ஒதிக்கீடு பற்றிய விவரங்கள் இரண்டாவது முன்பதிவு சார்ட்டில் காண்பிக்கப்படும்.

முன்பதிவு சார்ட்டை எவ்வாறு பார்க்க வேண்டும்?

முன்பதிவு சார்ட்டை எவ்வாறு பார்க்க வேண்டும்?

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வசதி IRCTC e-Ticket booking platform மூலம் இணையம் மற்றும் செல்போன் வழியே பார்க்கலாம். மேலும் ஐஆர்சிடிசி (IRCTC) இணைய முகவரியில் ரயில் இருக்கை முன்பதிவு சார்ட்டை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் ஐஆர்சிடிசி (IRCTC)இணையதளத்தில் நுழைய வேண்டும், அதில் இருக்கும் view charts/vacancyஎன்பதை கிளிக் செய்தல் வேண்டும், இது உங்களை ஒரு புதிய பக்கத்துக்கு கொண்டுச் செல்லும்.

அம்மா நான் காலேஜ்-ல இருக்கேன், நான் உனக்கு பின்னாடி தான் இருக்கே.! கவிதாவை மாட்டிவிட்ட ஆப்அம்மா நான் காலேஜ்-ல இருக்கேன், நான் உனக்கு பின்னாடி தான் இருக்கே.! கவிதாவை மாட்டிவிட்ட ஆப்

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து உங்கள் பயண விவரங்களான ரயில் எண், பயண தேதி, புறப்படும் ரயில் நிலையம் ஆகியவற்றை தட்டச்சுசெய்து get train chartஎன்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

இப்போது நீங்கள் எளிமையாக முன்பதிவு சார்ட்டை பார்க்க முடியும்.

வழிமுறை-4

வழிமுறை-4

குறிப்பாக இந்த சார்ட்-ல் வகுப்பு வாரியாக மற்றும் ரயில் பெட்டி வாரியாக உள்ள காலியான இருக்கைகள்விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Indian Railways New Feature: Check your Reservation Seat Status Online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X