ரயில் பயணிகளுக்கு வந்தது புது ரூல்ஸ்.. இனி Counter-களில் இது கட்டாயம்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனி ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் வாங்கும்போது பயணிகளின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை சரியாகச் சொன்னால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும்.
குறிப்பாக இந்த புதிய விதிமுறை தட்கல் டிக்கெட் மோசடிகள், போலி முன்பதிவுகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை அதிகளவில் காட்டுப்பத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் ஓடிபி அடிப்படையிலான முறை பயணிகள் டிக்கெட் முன்பதிவை மேலும் பாதுகாப்பானதாகவும, வெளிப்படையானதாகவும் மாற்றும்.

ஏற்கனவே ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும், பொது முன்பதிவின் முதல் நாள் முன்பதிவுக்கும் ஓடிபி அடிப்படையிலான முறைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் வெற்றியின் அடிப்படையில் இந்த முறை தற்போது கவுண்டர் முன்பதிவுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 17-ம் தேதி முதல் சில ரயில்களுக்குச் சோதனை அடிப்படையில் ஓடிபி அடிப்படையிலான தட்கல் டிக்கெட் கவுண்டர் முன்பதிவு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் வெற்றிக்கு பிறகு தற்போது 52 ரயில்களுக்கு இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் அனைத்து ரயில்களுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிமுறையின்படி, பயணிகள் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, முன்பதிவு படிவத்தில் தங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதும் பயணிகளின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை கவுண்டரில் உள்ள ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அந்த ஓடிபி எண் சரியாக இருந்தால் மட்டுமே டிக்கெட் உறுதி செய்யப்படும்.
இந்திய ரயில்வே அமைப்பின் இந்த புதிய நடவடிக்கை தட்கல் டிக்கெட்டுகளின் இருப்பை மேம்படுத்துவதோடு, இடைத்தரகர்கள் டிக்கெட்டுகளை முடக்குவதையும் தடுக்கும். இதனால் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட்டுகள் கிடைக்கும். இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு கூட இந்திய ரயில்வே அமைப்பு பல புதிய அப்டேட்களை கொண்டுவந்தது. அதாவது கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்பு கடந்த அக்டோபர் மாதம் அனைத்து பொது முன்பதிவுகளின் முதல் நாள் முன்பதிவுக்கு ஓடிபி அடிப்படையிலான ஆன்லைன் அமைப்பு செயல்படுத்தப்பட்டது.

குறிப்பாக இது டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தது. தற்போது, இந்த முறையைக் கவுண்டர் முன்பதிவுக்கும் இந்திய ரயில்வே விரிவுபடுத்தியுள்ளது. அதேபோல் இந்திய ரயில்வே அமைப்பு (indian Railways) விரைவில் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதுவும் ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு. இதுதவிர வேகமாகவும் சௌகரியமாகவும் பயணிக்கலாம். இதனால் தினமும் அதிக மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். எனவே தான் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக அவ்வப்போது நிறைய வசதிகளையும் விதிமுறைகளையும் இந்திய ரயில்வே கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








